முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » குடிதிருத்துதல் முதல் - குடிவெறி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - குடிதிருத்துதல் முதல் - குடிவெறி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| குடியேறுதல் | தம் நாடுவிட்டு வேறு நாடு சென்று வாழ்தல் ; நிலைத்துவிடுதல் . |
| குடியோட்டி | ஒருவகைப் பூண்டு . |
| குடியோட்டுப்பூண்டு | ஒருவகைப் பூண்டு . |
| குடிரம் | காரைச்செடி . |
| குடில் | குடிசை ; ஆட்டுக்குட்டி முதலியவற்றை மூடுவதற்கு உதவும் குடில் ; வீடு ; வானம் ; சிற்றில் ; தேர்ச் சக்கரங்களைத் திருப்பிச் செலுத்துதற்குக் கொடுக்கும் முட்டுக்கட்டை . |
| குடிலச்சி | ஒருவகைக் கருவண்டு ; இந்திரபாடாணம் . |
| குடிலம் | வளைவு ; வானம் ; சடை ; வஞ்சகம் ; உள்வாங்கிப் பாடும் இசைத்தொழில் ; குராமரம் ; ஈயமணல் ; வெள்ளீயம் ; நாகபாடாணம் ; குதிரை நடைவகை . |
| குடிலை | சுத்தமாயை ; பிரணவம் . |
| குடிவருதல் | குடிபுகுதல் . |
| குடிவாரநிலம் | குடிகட்குப் பயிரிடும் உரிமையுள்ள நிலம் . |
| குடிவாரம் | பயிரிடுவோன் உரிமை ; உழுபவனின் பங்குக்குரிய விளைச்சல் . |
| குடிவாழ்க்கை | இல்வாழ்க்கை ; குடும்பநிருவாகம் ; வாழ்க்கை ஒழுங்கு . |
| குடிவிளங்குதல் | குலம் முதலியன செழித்தல் . |
| குடிவெறி | கட்குடி மயக்கம் . |
| குடியேற்றம் | புதிதாக ஒரு நாட்டிற் குடிபுகுதல் . |
| குடியேற்றுதல் | குடியேறச் செய்தல் . |
| குடிதிருத்துதல் | ஆட்சிக்குட்பட்ட குடிகளை நன்னிலையில் நிறுத்துதல் ; பிறந்த குலத்தை மேம்படுத்துதல் . |
| குடிநற்கல் | ஒருவகை எடைக்கல் . |
| குடிநாட்டுதல் | குடியேற்றுதல் . |
| குடிநிலம் | குடியிருக்கும் மனைநிலம் ; பெண்ணுக்குச் சீர்வரிசையாகக் கொடுத்த மனை . |
| குடிநிலை | வீரக்குடியின் பழைமையையும் அஞ்சாமையையும் கூறும் புறத்துறை . |
| குடிநிலையுரைத்தல் | வீரக்குடியின் பழைமையையும் அஞ்சாமையையும் கூறும் புறத்துறை . |
| குடிநீர் | குடித்தற்குரிய நீர் ; கழாய மருந்து . |
| குடிப்படை | குடிகளாலான சேனை . |
| குடிப்பழி | குலத்துக்கு ஏற்பட்ட நிந்தை . |
| குடிப்பழுது | குலத்துக்கு ஏற்பட்ட நிந்தை . |
| குடிப்பாங்கு | குடித்தனப்பாங்கு ; குடியானவன் பின்பற்றுதற்குரிய ஒழுங்கு ; குடிகளின் ஏற்பாடு . |
| குடிப்பாழ் | குடிகள் விட்டு நீங்குதலால் ஊருக்கு உண்டான அழிவு ; குடிகளற்றுப் போன ஊர் . |
| குடிப்பிறப்பாளர் | உயர்குடியிற் பிறந்தோர் . |
| குடிபிறப்பு | உயர்ந்த குடியில் பிறத்தல் . |
| குடிப்பெண் | மனைவி ; கற்புடையவள் . |
| குடிப்பெயர் | குலத்தால் வந்த பெயர் ; பிறந்த குலம்பற்றி வழங்கும் பெயர் . |
| குடிபடை | குடிமக்கள் . |
| குடிபுகுதல் | வேறு வீட்டில் வாழச்செய்தல் ; புது வீட்டிற் குடிபோதல் . |
| குடிபோதல் | இருக்கும் வீட்டைவிட்டு வெளியேறுதல் ; வேறுவீட்டில் குடிபுகுதல் ; புதுவீடு குடிபோதல் ; பண்டங் கரைதல் . |
| குடிமக்கள் | பணி செய்தற்குரிய பதினெட்டுவகை ஊர்க் குடிகள் ; அடிமைகள் . |
| குடிமக்கள் மானியம் | பணிசெய்யும் வண்ணான் , அம்பட்டன் முதலிய தொழிலாளிகளுக்கு விடப்பட்ட இறையிலி நிலம் . |
| குடிமகன் | நற்குடிப் பிறந்தவன் ; வழிவழிஅடிமை ; படிவாங்கிப் பயிரிடும் குடித்தனக்காரன் ; அம்பட்டன் . |
| குடிமதிப்பு | ஊர்வரித் திட்டம் . |
| குடிமார்க்கம் | இல்வாழ்க்கை , குடித்தனக்கடமை . |
| குடிமிராசு | வழிவழி நில உரிமை . |
| குடிமுழுகிப்போதல் | குடும்பநிலை முதலியன முற்றும் அழிதல் . |
| குடிமை | உயர்குலத்தாரது ஒழுக்கம் ; பிறந்த குடியை உயரச்செய்தல் ; குடிப்பிறப்பு ; அரசரது குடியாயிருக்குந் தன்மை ; குடித்தனப் பாங்கு ; அடிமை ; குடிகளிடம் பெறும் வரி . |
| குடிமைப்பாடு | ஊழியம் . |
| குடியரசு | மக்களால் நடத்தப்படும் அரசாங்கம் . |
| குடியழிவு | குடும்பக்கேடு ; பெருங்கேடு . |
| குடியன் | குடிகாரன் . |
| குடியாயக்கட்டு | ஊர்க் குடும்பங்களின் மொத்தத் தொகை . |
| குடியாள் | பண்ணையாள் ; தாளகம் . |
| குடியான் | உழவன் , பயிரிடுவோன் . |
| குடியானவன் | உழவன் , பயிரிடுவோன் . |
| குடியிருக்கை | குடிகள் தங்கும் இடம் ; குடியாகத்தங்கி இருக்கை . |
| குடியிருத்தல் | வாழ்தல் ; குடிக்கூலிக்கிருத்தல் . |
| குடியிருப்பு | குடியிருக்கை ; வாழ்வு ; ஊர் ; சில இனத்தவர்கள் தனியாக வாழ்ந்துவரும் இடம் . |
| குடியிருப்புநத்தம் | ஊர்மக்கள் வாழும் இடம் . |
| குடியிறங்குதல் | நிலைக்குடியாகத் தங்குதல் . |
| குடியிறை | குடிகள் செலுத்தும் வரி . |
| குடியுடம்படிக்கை | குத்தகைச் சீட்டு . |
| குடியும்தடியும் | வீடும் நிலமும் . |
| குடியெழும்புதல் | கலகம் முதலிய நிகழ்ச்சிகளால் வேறிடம் பெயர்தல் . |
| குடியேற்றநாடு | மகக்ள் புதிதாக குடியேறிய நாடு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 338 | 339 | 340 | 341 | 342 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குடிதிருத்துதல் முதல் - குடிவெறி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், குடிபுகுதல், குடிகள், குடிபோதல், பயிரிடுவோன், பிறந்த, குடிமக்கள், இடம், ஏற்பட்ட, நிந்தை, குலத்துக்கு, குடியானவன், புறத்துறை, கூறும், குடியிருக்கை, முதலிய, அம்பட்டன், அஞ்சாமையையும், உழவன், பெயர், ஊர்க், வீரக்குடியின், குடில், வானம், பயிரிடும், பூண்டு, ஒருவகைப், நாடு, வாழ்தல், நிலம், உரிமை, குடியேற்றுதல், வேறு, புதிதாக, முதலியன, இல்வாழ்க்கை, ஒழுங்கு, பழைமையையும்

