தமிழ் - தமிழ் அகரமுதலி - குடிவைத்தல் முதல் - குடைதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| குடுமி | ஆண்மக்களது முடிந்த மயிர் ; மலை உச்சி ; மாடத்தின் உச்சி ; தலை உச்சி ; உச்சிக் கொண்டை ; நுனி ; முடி ; கதவின் குடுமி ; மேழிக்குடுமி ; முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியன் ; வெற்றி ; பாம்பாட்டி . |
| குடுமிக்கதவு | கீழும் மேலும் உள்ள முனைகளால் ஆடி அடைக்கவும் திறக்கவும் பெறும் கதவு . |
| குடுமிக்காரன் | குடுமியுள்ளவன் . |
| குடுமிக்குயவன் | குயவர் தலைவன் . |
| குடுமிக்கூந்தல் | உச்சிக் கூந்தல் . |
| குடுமி களைதல் | தலைமயிர் நீக்குதல் ; மலர்ச்சிகையைக் கூட்டி முடித்தல் . |
| குடுமிகொள்ளுதல் | வெல்லுதல் . |
| குடுமிதட்டுதல் | சண்டைக்குச் சித்தமாதல் ; தானிய அளவில் தலைவழித்தல் . |
| குடுமிப் பருந்து | உச்சிக் சூட்டினையுடைய ஒரு வகைப் பருந்து . |
| குடுமியைப் பிடித்தல் | சண்டையிடுதல் . |
| குடுமியை முடிந்துவிடுதல் | சண்டை மூட்டுதல் . |
| குடுமி வாங்குதல் | வேண்டுதலின் பொருட்டு மயிர்களைதல் ; இழிவுசெய்தல் . |
| குடுமிவைத்தல் | வேதத்திற்குரிய வருணத்தாரின் பிள்ளைகட்குச் செய்யும் ஒரு சடங்கு . |
| குடுவை | வாய்குறுகிய குண்டுப் பாத்திரம் ; கமண்டலம் ; கள்ளிறக்கும் சிறுகலம் ; ஒரு வகைச் சீட்டாட்டம் . |
| குடை | கவிகை ; அரசாட்சி ; குடைக்கூத்து ; பாதக்குறட்டின் குமிழ் ; நீருண்ணும் ஒலைப் பட்டை ; குடைவேல் ; உட்டுளைப்பொருள் . |
| குடைக்கல் | கல்லறையின் மூடுகல் . |
| குடைக்காம்பு | குடையின் கைப்பிடி . |
| குடைக்காளான் | நாய்க்குடை . |
| குடைக்கிழங்கு | சிற்றரத்தைச் செடி . |
| குடைக்கூத்து | குடையையே திரையாகக் கொண்டு ஆடிய முருகனின் ஆடல் . |
| குடைக்கொள்ளுதல் | மேலெழுதல் ; குடஞ்சாய்தல் . |
| குடைகரி | பொன்னுருக்கும் கரிக்குகை . |
| குடைகவிழ்தல் | காண்க : குடஞ்சாய்தல் . |
| குடைச்சல் | வாயுவால் உண்டாகும் குடைச்சல் , நோவு . |
| குடைச்சூல் | சிலம்பு ; உள்ளிடங் குடைவு படுகை . |
| குடைச் செலவு | ஒரு காஞ்சித்திணைத் துறை , பகையைத் தடுத்துக் காக்கப் புறப்படுமுன் கொற்றக்குடையை நல்லவேளையில் புறவீடு செய்தல் . |
| குடைச்செவி | சினம் முதலிய காரணங்களால் வளைவுபட்ட விலங்குகளின் செவி . |
| குடைதல் | கிண்டுதல் ; துளைத்தல் ; மிக வருத்துதல் ; கடைதல் ; வேண்டாதவற்றில் தலையிடுதல் ; துருவுதல் ; உட்புகுதல் ; நீரில் மூழ்குதல் ; உளைவு ; அராவுதல் . |
| குடிவைத்தல் | வீட்டை வாடகைக்கு விடுதல் ; குடியிருக்கச் செய்தல் ; குடியை நிலைபெறச் செய்தல் . |
| குடீசகம் | ஓருவகைச் சன்னியாசம் . |
| குடீசகன் | உறவின்முறையார் உதவியுடன் குடிலில் வாழும் துறவி . |
| குடீரகம் | குடிசை ; இலைக்குடில் . |
| குடீரம் | குடிசை ; இலைக்குடில் . |
| குடு | கள் . |
| குடுக்கம் | உபதாளம் ஐந்தனுள் ஒன்று . |
| குடுக்கை | தேங்காய் முதலியவற்றின் குடுவை ; கமண்டலம் ; இடக்கையென்னும் தோற்கருவி ; வீணையின் உறுப்பு . |
| குடுகு | குடுக்கை ; தேங்காய் முதலியவற்றாலான குடுவை ; கஞ்சா முதலியன குடிக்கும் கருவி , உக்கா . |
| குடுகுடா | குடுக்கை ; தேங்காய் முதலியவற்றாலான குடுவை ; கஞ்சா முதலியன குடிக்கும் கருவி ; உக்கா . |
| குடுகுடி | குடுக்கை ; தேங்காய் முதலியவற்றாலான குடுவை ; கஞ்சா முதலியன குடிக்கும் கருவி ; உக்கா . |
| குடுகுடுக்கை | கொப்பரைத் தேங்காய் . |
| குடுகுடுகிழவன் | தளர்ந்த வயதோன் ; மிகவும் முதிர்ந்தவன் . |
| குடுகுடுத்தல் | ஒலிக்குறிப்பு ; ஒலித்தல் ; விரைதல் . |
| குடுகுடுத்தான் | விரைவுக்காரன் . |
| குடுகுடுப்பாண்டி | குடுகுடுப்பை அடித்துக் குறிகூறும் பிச்சைக்காரன் . |
| குடுகுடுப்பு | பரபரப்பு . |
| குடுகுடுப்பை | குடுகுடு' என்று ஒலிக்கும் பொருள் ; குடுகுடுப்பாண்டி ஆட்டி ஒலிக்கும் சிறிய உடுக்கை ; எப்பொழுதும் அவசரப் படுபவன் ; கஞ்சாக்குடுக்கை ; வறட்சி . |
| குடுகுடெனல் | ஒர் ஒலிக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு . |
| குடுப்பம் | நான்கு பலமுள்ள அளவு . |
| குடும்பத்தானம் | இராசிச் சக்கரத்தில் குடும்பத்தின் நிலைமையை உணர்த்தும் இலக்கினத்திற்கு இரண்டாவது ஆகிய இடம் . |
| குடும்பபாரம் | குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு . |
| குடும்பம் | சமுசாரம் ; உறவினர் ; குலம் ; மனைவி . |
| குடும்பன் | குடும்பத்தலைவன் ; சமுசாரி ; பள்ளர் தலைவன் ; ஊரில் சாகுபடியான நிலங்களை அளப்பவன் . |
| குடும்பி | சமுசாரி ; குடும்பத் தலைவன் ; குறும்பி ; காதுள் அழுக்கு . |
| குடும்பினி | மனைவி . |
| குடும்பு | காய் முதலியவற்றின் குலை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 339 | 340 | 341 | 342 | 343 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குடிவைத்தல் முதல் - குடைதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், குடுவை, தேங்காய், குடுமி, குடுக்கை, செய்தல், கருவி, உக்கா, உச்சிக், முதலியவற்றாலான, கஞ்சா, தலைவன், குடிக்கும், முதலியன, உச்சி, குடுகுடுப்பாண்டி, சமுசாரி, மனைவி, ஒலிக்கும், குடுகுடுப்பை, ஒலிக்குறிப்பு, முதலியவற்றின், குடைக்கூத்து, கமண்டலம், குடஞ்சாய்தல், குடைச்சல், இலைக்குடில், குடிசை, பருந்து

