தமிழ் - தமிழ் அகரமுதலி - கழற்றுரை முதல் - கழிவட்டம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கழிநெடிலடி | ஐந்தின்மிக்க சீரால் வரும் அடி . |
| கழிப்பாம்பு | ஆறு காலுடைய ஓர் உயிரி . |
| கழிப்பு | ஒழிக்கை ; சாந்தி கழிக்கை ; குற்றந்தீர்க்கும் ஒரு சடங்கு ; குற்றம் ; தள்ளுண்ட பொருள் ; கழித்தல் . |
| கழிப்புக்கழித்தல் | நோயாளியின் தலையைச் சுற்றிச் சோறு முதலியவற்றை வெளியில் எறிதல் . |
| கழிப்புல் | ஒருவகைப் புல் . |
| கழிப்பெடுத்தல் | காண்க : கழிப்புக்கழித்தல் . |
| கழிபடர் | மிகுந்த துயரம் . |
| கழிபிறப்பு | முற்பிறப்பு . |
| கழிமாந்தம் | குழந்தைகட்குப் பேதியோடு வரும் மாந்தநோய் . |
| கழிமுகம் | ஆறு கடலோடு கலக்கும் இடம் ; அருவி . |
| கழிமுள்ளி | முள்ளிச்செடி . |
| கழிமை | தள்ளுகை , விலக்குகை , நீக்குகை . |
| கழிய | மிகவும் . |
| கழியர் | காண்க : கழியவர் . |
| கழியல் | கழிக்கப்பட்டது ; கழிகை ; கழிச்சல் ; கழி ; கடைமுளை . |
| கழியவர் | நெய்தல்நில மாக்கள் . |
| கழியிருக்கை | ஆறு சூழ்ந்த இடம் . |
| கழியுடல் | பிணம் . |
| கழியுப்பு | கடலுப்பு . |
| கழியூணன் | பெருந்தீனி தின்பவன் . |
| கழிவட்டம் | கடைப்பட்டவன்(ள்) ; கடைப்பட்டது . |
| கழற்றுரை | உறுதிச்சொல் . |
| கழற்றெதிர்மறுத்தல் | பாங்கனுடைய உறுதி மொழியைத் தலைவன் கேளாது மறுத்தல் . |
| கழற்றெதிர்மறை | பாங்கனுடைய உறுதி மொழியைத் தலைவன் கேளாது மறுத்தல் . |
| கழறியுரைத்தல் | இடித்துரைத்தல் ; பாங்கன் தலைவனுக்கு இடித்துரைத்து உறுதிமொழி கூறுதல் . |
| கழறுதல் | இடித்தல் ; சூளுரைத்தல் ; உறுதி சொல்லுதல் ; சினத்தல் ; அவமதித்தல் . |
| கழனி | வயல் ; மருதநிலம் ; சேறு ; திரைச்சீலை ; கழுநீர் . |
| கழனிக்கடைத்தவர் | மருதநில மாக்கள் . |
| கழனிக்குளம் | நன்செய் நடுவேயுள்ள ஏரி . |
| கழனிப்பயிர் | நெல் . |
| கழனிலை | பொதுவியல் திணைத் துறை பன்னிரண்டனுள் ஒன்று ; இளைஞன் ஒருவன் போரிற் புறங்கொடாமை கண்டு வியந்த வீரர் அவனுக்கு வீரக்கழல் அணிவித்துப் புகழ்ந்தாடும் துறை ; ஒருவகைக் கூத்து . |
| கழாஅல் | கழுவுதல் . |
| கழாநிலம் | கழாலை , உவர்நிலம் . |
| கழாய் | கமுகு ; மூங்கில் ; சிறுகீரை ; கழைக் கூத்தன் நின்று ஆடுதற்கு நடும் மூங்கிற் கம்பம் . |
| கழாய்க்கூத்து | காண்க : கழைக்கூத்து . |
| கழாயம் | மருந்து ஊறல் நீர் ; துவர்ப்பு . |
| கழாயர் | கழைக்கூத்தர் . |
| கழால் | கழுவுதல் ; களைதல் ; கழலுதல் . |
| கழாலுதல் | நெகிழ்தல் ; விலகுதல் . |
| கழாற்றூக்கு | இசைத்தமிழில் கூறப்பட்டுள்ள எழுவகைத் தூக்கினுள் ஒன்று ; ஆறு சீரளவுள்ள தாளவுறுப்பு . |
| கழி | கோல் , மரக்கொம்பு ; கடலடுத்த உவர்நீர்ப்பரப்பு ; நுகத்துளையில் இடுங் கழி ; ஆயுதக்காம்பு ; யாழின் இசையெழுப்புங் கருவி ; வரிச்சல் ; நூற்சுருள் ; மிகுதி ; ஊன் ; கயிறு . |
| கழிக்கரைப்புலம்பல் | பிரிந்த தலைவனை நினைந்து தலைவி கடற்கரையில் இருந்து கொண்டு தனியே இரங்குதல் . |
| கழிகடை | அறக்கெட்டது ; இழிந்தவன்(ள்) ; இழிந்தது . |
| கழிகண்ணோட்டம் | அளவுகடந்த மகிழ்ச்சி . |
| கழிகல மகடூஉ | காண்க : கலன்கழி மடந்தை . |
| கழிகாலம் | காண்க : கழிந்தகாலம் . |
| கழிகெட்டவன் | மிகக் கெட்டவன் . |
| கழிகோல் | எளிதில் கறவாத பசுவை அசையாமல் நிறுத்திக் கறப்பதற்குப் பயன்படுத்தும் இணைப்புக் கழி ; கன்று பாலுண்ணாமலிருக்க முகத்திற் கட்டும் வாய்ப்பூட்டு . |
| கழிச்சல் | பேதி , மலப்போக்கு , கழிதல் ; பேரச்சம் . |
| கழிச்சியர் | நெய்தல்நிலத்து மகளிர் . |
| கழிசடை | கழிக்கப்பட்ட மயிர்ச்சடைபோல் இழிந்தவன்(ள்) . |
| கழித்தல் | நீக்குதல் ; ஒதுக்குதல் ; பெரியஎண்ணினின்று சிறிய எண்ணைக் குறைத்தல் ; வெட்டுதல் ; போக்குதல் ; உருவுதல் . |
| கழித்துக்கட்டுதல் | போக்குச் சொல்லி நெகிழவிடுதல் ; இகழ்ந்து ஒதுக்குதல் ; பயன்படாததைப் பிறனிடஞ் சேர்த்தல் . |
| கழிதல் | மிகுதல் ; கடந்துபோதல் ; நடத்தல் ; குறைபடுதல் ; அழிதல் ; ஒழிதல் ; சாதல் ; முடிவடைதல் ; வருந்துதல் ; மலம் முதலியன வெளிப்படுதல் ; அச்சங்கொள்ளுதல் . |
| கழிந்தகாலம் | இறந்தகாலம் . |
| கழிந்தார் | பொருளில்லாதவர் ; இறந்தவர் ; தாழ்ந்தவர் . |
| கழிந்தோர் | வலிமிக்கோர் . |
| கழிநிலம் | உவர்த்தரை , உப்பளம் . |
| கழிநெடில் | ஐந்தின்மிக்க சீரால் வரும் அடி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 288 | 289 | 290 | 291 | 292 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கழற்றுரை முதல் - கழிவட்டம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வரும், உறுதி, ஒன்று, துறை, மறுத்தல், கேளாது, கழுவுதல், இழிந்தவன், ஒதுக்குதல், கழிதல், கழிந்தகாலம், தலைவன், மொழியைத், இடம், சீரால், கழிப்புக்கழித்தல், கழியவர், கழிச்சல், ஐந்தின்மிக்க, பாங்கனுடைய, மாக்கள், கழித்தல்

