முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கவுத்துகவாதம் முதல் - கழற்றுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கவுத்துகவாதம் முதல் - கழற்றுதல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
கழற்சி | கழற்சிக்காய் ; கெச்சக்காய்ச்செடி . |
கழற்பதி | பெருங்குமிழ்மரம் . |
கழற்றி | கழற்றப் பயன்படும் கருவி . |
கழற்று | உறுதிமொழி . |
கழற்றுதல் | நெகிழச்செய்தல் ; நீக்குதல் ; கழலப்பண்ணல் ; போக்குதல் . |
கவுள் | கன்னம் ; யானையின் கன்னம் ; யானையின் உள்வாய் ; பக்கம் . |
கவுளி | பல்லி ; வெற்றிலைக் கட்டு ; ஒருவிதத்தெங்கு . |
கவுனி | கோட்டைவாயில் ; குதிரைப்பற்பாடாணம் . |
கவேது | காட்டுக் கோதுமை . |
கவேதுகை | காட்டுக் கோதுமை . |
கவேரகன்னி | கவேரன் மகளான காவிரியாறு . |
கவேலம் | குவளை , கருநீலமலர் . |
கவை | பிளவுபட்ட கிளை ; அகில் ; செயல் ; எள்ளின் இளங்காய் ; ஆயிலியநாள் ; பிளவுபட்ட கிளை ; காடு ; கவர்வழி ; மரக்கப்பு ; தேவை ; தொழில் . |
கவைக்காகாமை | பயனின்மை . |
கவைக்கால் | பிளவுபட்டுத் தோன்றுங் கால் . |
கவைக்குதவாதது | பயனற்றது . |
கவைக்குளம்பு | விலங்கின் பிளவுபட்ட பாதம் . |
கவைக்கொம்பு | பிரிவுபட்ட மரக்கிளை . |
கவைக்கோல் | கவரான கழி ; குத்துக்கோல் ; கொடிற்றுக்கோல் . |
கவைத்தல் | கவடுபடுதல் , பிளவுபடுதல் ; உளதாதல் ; அகத்திடுதல் ; அணைத்தல் . |
கவைத்தாம்பு | தாமணியை உடைய தும்பு . |
கவைத்தாள் | நண்டு ; பிளவுபட்ட கால் . |
கவைதல் | மூடல் ; மொய்த்தல் . |
கவைநா | பிளவுண்ட நாவுடைய பாம்பு ; உடும்பு . |
கவைமுட்கருவி | யானையை அடக்கும் குத்துக்கோல் . |
கவைமுள் | வேலமுள் . |
கவையடி | பிளவுபட்ட பாதம் . |
கவையாயிருத்தல் | வேலையாயிருத்தல் ; அக்கறையாயிருத்தல் . |
கழகண்டு | தீம்பு . |
கழகம் | கல்வி பயிலும் இடம் , கல்விச் சங்கம் ; படை , மல் முதலியன பயிலும் இடம் ; சூது ; சூதாடுமிடம் ; ஓலக்கம் ; புலவர் கூடிய சபை . |
கழகு | கல்வி பயிலும் இடம் , கல்விச் சங்கம் ; படை , மல் முதலியன பயிலும் இடம் ; சூது ; சூதாடுமிடம் ; ஓலக்கம் ; புலவர் கூடிய சபை . |
கழங்கம் | சூதாடு கருவி . |
கழங்காடல் | பெண்கள் ஆடும் கழற்சிக்காய் ஆட்டம் . |
கழங்கிட்டுரைத்தல் | கழற்சிக்காயால் குறியறிந்து சொல்லுதல் . |
கழங்கு | கழற்சிக்காய் ; கழற்சி விளையாட்டு ; வெறியாட்டு ; சூது ; வேலனாடல் ; விந்து . |
கழங்குபடுத்தல் | கழங்குகொண்டு குறியறிதல் . |
கழங்குமெய்ப்படுத்தல் | பயிர்களை விலங்குகள் அழிக்காதபடி புலிபோல் செய்துவைக்கும் உருவத்திற்குக் கழற்சிக்காயைக் கண்ணாக அமைத்தல் ; கழற்காய் மூலம் குறியறிதல் . |
கழஞ்சு | ஓர் எடுத்தலளவை ; சிறிது . |
கழப்பன் | வேலைக் கள்ளன் , வேலையைச் செய்யாது வீணே பொழுதைக் கழிப்பவன் . |
கழப்பாடி | வேலைக் கள்ளன் , வேலையைச் செய்யாது வீணே பொழுதைக் கழிப்பவன் . |
கழப்பாளி | வேலைக் கள்ளன் , வேலையைச் செய்யாது வீணே பொழுதைக் கழிப்பவன் . |
கழப்பு | சோம்பல் ; கள்ளத்தனம் . |
கழப்புதல் | சோம்பலாயிருத்தல் ; வேலை செய்யாது காலம் போக்குதல் . |
கழல் | வீரக்கழல் ; சிலம்பு ; கால்மோதிரம் ; செருப்பு ; பாதம் ; கழற்சி ; காற்றாடி ; பொன்வண்டு . |
கழல்வளை | வளையல்வகை . |
கழலக்குத்துதல் | குற்றம் சொல்லிச் செயலைத் தடுத்தல் . |
கழலவிடுதல் | பட்சபாதம் முதலியவற்றால் வேண்டுமென்றே நெகிழவிடுதல் . |
கழலி | பிரண்டை . |
கழலுதல் | நெகிழ்ந்துபோதல் ; விலகல் ; வெளியேறுதல் ; நீங்குதல் ; பிதுங்குதல் ; விழுதல் . |
கழலை | இரணக்கட்டி ; கழுத்தில் வரும் ஒருவகைக் கட்டி அல்லது நோய் . |
கழலைக்கட்டி | இரணக்கட்டி ; கழுத்தில் வரும் ஒருவகைக் கட்டி அல்லது நோய் . |
கழலைக்கரப்பான் | ஒருவகைச் சொறிநோய் . |
கழற்காய் | கழற்சிக்காய் . |
கவுத்துகவாதம் | அறுபத்துநான்கு கலைகளுள் வருந்துகின்ற மனத்தை மகிழ்விக்கும் வித்தை . |
கவுத்துவம் | வஞ்சகம் ; திருமால் மார்பிலணியும் மணி . |
கவுதகம் | கைப்பிடிச் சுவர் . |
கவுதம் | மீன்கொத்தி . |
கவுதாரி | ஒரு பறவைவகை . |
கவுந்தி | சமண தவப்பெண் ; குந்திதேவி . |
கவுமாரம் | இளமை ; முருகக்கடவுளை வழிபடும் சமயம் . |
கவுமாரி | பார்வதி , சத்தியின் ஓர் அவதாரம் . |
கவுமோதகி | திருமாலின் தண்டாயுதம் . |
கவுரம் | வெண்மை . |
கவுரவம் | மேன்மை . |
கவுரிசங்கம் | கவுரிசங்கரர்களது உருவினதாய் இரு பிளவுபட்ட ஒற்றை உருத்திராக்கம் . |
கவுரிசங்கரம் | கவுரிசங்கரர்களது உருவினதாய் இரு பிளவுபட்ட ஒற்றை உருத்திராக்கம் . |
கவுல் | தீநாற்றம் ; நிலக்குத்தகை ; உடன்படிக்கை ; வஞ்சனை . |
கவுல்தார் | நிலக்குத்தகை எடுத்தவன் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 287 | 288 | 289 | 290 | 291 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கவுத்துகவாதம் முதல் - கழற்றுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பிளவுபட்ட, பயிலும், செய்யாது, இடம், கழற்சிக்காய், கழிப்பவன், வேலைக், சூது, பாதம், பொழுதைக், கள்ளன், வேலையைச், கழற்சி, வீணே, கழுத்தில், இரணக்கட்டி, ஒருவகைக், ஒற்றை, உருத்திராக்கம், நிலக்குத்தகை, உருவினதாய், கவுரிசங்கரர்களது, கட்டி, அல்லது, நோய், வரும், புலவர், கோதுமை, கிளை, கால், காட்டுக், யானையின், கருவி, போக்குதல், கன்னம், குத்துக்கோல், கல்வி, ஓலக்கம், கூடிய, குறியறிதல், சூதாடுமிடம், முதலியன, கல்விச், சங்கம், கழற்காய்