தமிழ் - தமிழ் அகரமுதலி - கவனி முதல் - கவுணியன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கவித்தம் | விளாமரம் ; கைம்முட்டி ; அபிநயத்தின் ஒருவகை ; கடுகுரோகிணி . |
| கவித்தல் | கவியச்செய்தல் ; வளைந்து மூடுதல் ; முடி முதலியன அணிதல் ; சூட்டுதல் ; மூடுதல் . |
| கவித்துவம் | பாப் பாடும் திறம் . |
| கவிதல் | வளைதல் ; மூடுதல் ; கருத்தூன்றுதல் , விருப்பமாயிருத்தல் ; இடிதல் . |
| கவிதை | பாடல் . |
| கவிநாதன் | பாட்டுடைத் தலைவன் . |
| கவிநாயகன் | பாட்டுடைத் தலைவன் . |
| கவிப்பர் | வணிகருள் ஒரு வகுப்பார் . |
| கவிப்பு | காண்க : கவிகை . |
| கவிமாலை | பாமாலை . |
| கவியம் | கடிவாளம் . |
| கவியரங்கேறுதல் | புலவனாகச் சங்கத்தாரால் கொள்ளப்படுதல் ; கழகத்தாரால் நூல் ஏற்றுக் கொள்ளப்படுதல் . |
| கவிர் | முண்முருக்கமரம் . |
| கவிரத்தினம் | கவிகளுள் சிறந்தவன் . |
| கவிரம் | தேவவிருட்சம் ; அலரிச்செடி . |
| கவிராசன் | பாட்டுப் பாடுவோன் , புலவர்களுள் சிறந்தோன் ; புலவர் மரபினருக்கு வழங்கும் பட்டப்பெயர் . |
| கவிராயன் | பாட்டுப் பாடுவோன் , புலவர்களுள் சிறந்தோன் ; புலவர் மரபினருக்கு வழங்கும் பட்டப்பெயர் . |
| கவிரோமம் | பூனைக்காலிச்செடி . |
| கவிவல்லோர் | புலவர் ; பாடகர் . |
| கவிவாணர் | புலவர் ; பாடகர் . |
| கவிவு | உள்வளைவு , குவிவு . |
| கவிழ்த்தல் | கவிழச்செய்தல் ; கெடுத்தல் ; மூடுதல் ; ஒழுகவிடுதல் ; வெளிப்படுத்துதல் . |
| கவிழ்தல் | தலைகீழாதல் ; நாணம் முதலியவற்றால் தலையிறங்குதல் ; குனிதல் ; நிலைகுலைதல் ; அழிதல் ; முழுகிப்போதல் . |
| கவின் | அழகு . |
| கவினுதல் | அழகுபெறுதல் . |
| கவினம் | கடிவாளம் ; வெண்ணெய் ; வளைவு . |
| கவீச்சுரன் | பெரிய கவிவாணன் , கவிகட்குத் தலைவன் . |
| கவீரம் | அலரிச்செடி . |
| கவீனம் | பசு மேய்ந்த இடம் ; வெண்ணெய் . |
| கவுசனம் | காண்க : கோவணம் . |
| கவுசனை | உறை ; சேணம் . |
| கவுசி | குழைவு ; வருத்தம் ; ஒருவகை வரிக்கூத்து ; பாட்டு ; ஒருவகை நோய் ; கொன்றை . |
| கவுசிகம் | வெண்பட்டு , ஒரு பண்வகை ; சாமவேதம் ; விளக்குத்தண்டு . |
| கவுஞ்சயூகம் | அன்றில்போல் வகுக்கும் அணி வகுப்பு . |
| கவுட்டி | தொடைச்சந்து . |
| கவுடதம் | வெட்பாலை . |
| கவுடி | ஒரு பண்வகை . |
| கவுண்டன் | தமிழர் , கன்னடர் சிலர்க்குள் வழங்கும் சாதிப்பெயர் ; சாதிப்பிரிவு . |
| கவுணம் | ஒருவகைத் திருநீறு ; மாறுபொறுள் . |
| கவுணி | காண்க : கவுணியன் . |
| கவுணியர்கோன் | கவுண்டினிய கோத்திரத்துப் பெரியாரான திருஞானசம்பந்தர் . |
| கவுணியன் | கவுண்டினிய கோத்திரத்தான் . |
| கவனி | கந்தக பாடாணம் . |
| கவனித்தல் | கருத்தூன்றி யறிதல் ; கருத்து வைத்தல் . |
| கவனிப்பு | கவனித்தல் , கருத்தூன்றுகை . |
| கவாஅன் | தொடை ; மலைப்பக்கம் . |
| கவாட்சம் | சாளரம் , வட்டச் சாளரம் . |
| கவாட்சி | சாளரம் , வட்டச் சாளரம் . |
| கவாட்டி | சிப்பி . |
| கவாடக்கட்டி | வசம்பு . |
| கவாடக்காரன் | பொதிமாட்டுக்காரன் . |
| கவாடம் | கதவு ; ஓர் எருது சுமக்கக்கூடிய விறகு , புல் அல்லது வைக்கோற் சுமை . |
| கவாடிபந்தி | யானைக் கூடத்தைத் துப்புரவு செய்வோன் . |
| கவாத்து | போர்வீரர் புரியும் உடற்பயிற்சி . |
| கவாய் | மெய்யுறை , நிலையங்கி ; கந்தை ; பாடகன் . |
| கவாரம் | தாமரை . |
| கவாளம் | குதிரைப் பேதிமருந்து ; புண்ணாற்றும் மருந்துள் ஒன்று ; காயக்கட்டு மருந்து . |
| கவான் | தொடை ; மலைப்பக்கம் ; திரள் . |
| கவான்செறி | தொடையில் அணியும் ஒருவகை அணிகலன் . |
| கவி | பாவலன் ; பாட்டு ; மங்கலப்பாடகன் ; ஞானி ; சுக்கிரன் ; ஆசு , மதுரம் , சித்திரம் , வித்தாரம் என்னும் நாற்கவிகளைப் பாடுவோன் ; குரங்கு ; பூனைக்காலி . |
| கவிகண்ணோக்கு | புருவத்திற்கு அருகில் கையைக் கவித்துக்கொண்டு பார்க்கும் பார்வை . |
| கவிகம் | குக்கில்மரப்பிசின் ; கடிவாள இரும்பு . |
| கவிகை | வளைவு ; குடை ; நன்மை தீமை ; ஈகம் , தியாகம் . |
| கவிச்சக்கரவர்த்தி | பாவலர்க்குத் தலைவர் . |
| கவிச்சடித்தல் | அழுகிய மீன்நாற்றம் வீசுதல் . |
| கவிச்சி | புலால் நாற்றம் . |
| கவிச்சு | புலால் நாற்றம் . |
| கவிச்சுக்கடை | மீன்கடை ; இறைச்சிக்கடை . |
| கவிசனை | உறை ; சேணம் . |
| கவிசினம் | காண்க : கோவணம் . |
| கவிசை | ஒரு வயிற்றுநோய் , வயிற்றுக்கட்டி . |
| கவிஞன் | புலவன் , பாவலன் ; சுக்கிரன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 286 | 287 | 288 | 289 | 290 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கவனி முதல் - கவுணியன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், புலவர், காண்க, ஒருவகை, மூடுதல், சாளரம், வழங்கும், பாடுவோன், தலைவன், கவுண்டினிய, நாற்றம், கவுணியன், பாட்டு, பண்வகை, கவனித்தல், புலால், சுக்கிரன், வட்டச், சேணம், மலைப்பக்கம், தொடை, பாவலன், பாடகர், கொள்ளப்படுதல், அலரிச்செடி, கடிவாளம், கவிகை, பாட்டுடைத், பாட்டுப், புலவர்களுள், வெண்ணெய், வளைவு, பட்டப்பெயர், மரபினருக்கு, சிறந்தோன், கோவணம்

