தமிழ் - தமிழ் அகரமுதலி - கவணி முதல் - கவனன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கவலை | வருத்தம் ; மனச்சஞ்சலம் ; பல நினைவு ; ஒருவகை நோய் ; அக்கறை ; அச்சம் ; பல தெருக்கள் கூடுமிடம் ; கவர்த்த வழி ; மரக்கிளை ; நீரிறைக்கும் தோற்கூடை ; செந்தினை ; கிழங்குள்ள ஒருவகைக் கொடி ; மீன்வகையுள் ஒன்று ; கபிலை , புகர்நிறம் . |
| கவலை கவற்றுதல் | வருத்தஞ் செய்தல் . |
| கவலைச்சால் | கவலை ஏற்றத்தில் நீரிறைக்குஞ்சால் . |
| கவலைபாய்தல் | கவலை மிகுதல் ; மயங்குதல் ; வேதம் ஓதும்போது வரிசை தவறி ஓதுதல் . |
| கவலையேற்றம் | எருதுகளைப் பூட்டி நீர் இறைக்கும் முறை . |
| கவவு | அகத்திடுகை ; உள்ளீடு ; முயக்கம் . |
| கவவுக்கை | அணைத்த கை . |
| கவவுதல் | அகத்திடுதல் ; விரும்புதல் ; கையால் தழுவுதல் ; முயங்குதல் ; நெருங்குதல் ; பொருந்துதல் . |
| கவழம் | கவளம் , வாயளவுகொண்ட உணவு ; யானைக்கு அளிக்கும் உணவு . |
| கவழிகை | திரைச்சீலை . |
| கவளம் | வாயளவுகொண்ட உணவு ; யானைக்கு அளிக்கும் உணவு ; கபோலம் ; யானைமதம் . |
| கவளி | கட்டு ; புத்தகக்கட்டு ; வெற்றிலைக்கட்டு . |
| கவளிகை | புத்தகக்கட்டு , நூற்கட்டு . |
| கவளீகரித்தல் | மொத்தமாக விழுங்குதல் ; முழுதும் அபகரித்தல் . |
| கவற்சி | கவலை , மனவருத்தம் ; விருப்பம் . |
| கவற்றுதல் | கவலையடையச் செய்தல் , வருந்துதல் . |
| கவற்றுமடி | பட்டாடைவகை . |
| கவறல் | மனங்கலங்குதல் , வருந்துதல் . |
| கவறாடல் | சூதாடல் . |
| கவறு | சூதாடுகருவி , தாயக்கட்டை ; சூது ; பனம்பட்டை . |
| கவனஞ்செலுத்துதல் | கருத்தாயிருத்தல் . |
| கவனம் | போர் ; படை ; கலக்கம் ; வெப்பம் ; கவிபாடுகை ; கருத்து ; வேகம் ; காடு . |
| கவனன் | வேகமுள்ளோன் ; நினைவுள்ளோன் . |
| கவணி | ஒருவகைச் சீலை ; சரிகைவேலை . |
| கவணை | கவண் , கல்லெறியும் கருவி ; மாட்டுக்குத் தீனிவைக்கும் இடம் . |
| கவந்தம் | தலையற்ற உடல் ; தலைதறித்த மரம் ; செக்கு ; நீர் ; பேய் ; வயிறு . |
| கவந்தி | கந்தையாலாகிய மெத்தைப் போர்வை . |
| கவந்திகை | கந்தையாலாகிய மெத்தைப் போர்வை . |
| கவம் | கபம் ; மத்து . |
| கவயம் | காட்டுப்பசு ; கவசம் . |
| கவயமா | காட்டுப்பசு . |
| கவயல் | காட்டுப்பசு . |
| கவர் | பிரியுங்கிளை ; பலவாகப் பிரிகை ; நீண்ட திருமண்கட்டி ; சூலத்தின் கவர் ; வஞ்சகம் ; வாழைமரம் ; உத்திரம் புகுத்தும் சுவர்ச்சந்து ; அணையில் நீர் செல்லுதற்குவிடும் வழி . |
| கவர்க்கால் | கவராயுள்ள முட்டுக்கட்டை ; கப்புள்ளமரம் ; கிணற்று விட்டத்தைத் தாங்கும் கவையுள்ள கால் ; கிளைவாய்க்கால் . |
| கவர்கோடல் | ஐயுறுதல் , சந்தேகநிலை . |
| கவர்ச்சி | கவருதல் , இழுக்கை ; வெள்ளைக் காக்கணம் . |
| கவர்த்தடி | முள்ளைத் தூக்கும் கோல் . |
| கவர்த்தல் | பிரிவுபடுதல் ; சுவடுபடுதல் , கப்புவிடுதல் ; கிளைவிடுதல் . |
| கவர்தல் | அகப்படுத்துதல் ; கொள்ளையிடல் ; திருடல் ; வசப்படுத்துதல் ; விரும்புதல் ; பெற்றுக்கொள்ளுதல் ; நுகர்தல் ; முயங்கல் ; கடைதல் ; அழைத்தல் ; பிரிதல் ; மாறுபடுதல் . |
| கவர்ந்தூண் | கொள்ளையடித்து உண்ணும் உணவு . |
| கவர்நெறி | கிளைவழி . |
| கவர்ப்பு | பலவாகப் பிரிகை . |
| கவர்படுதல் | இரண்டுபடல் , பிரிவுபடுதல் ; பல பொருள்படுதல் . |
| கவர்படுமொழி | பலபொருள் தரும் சொல் , மயக்கப்பொருள் தரும் சொல் . |
| கவர்பு | வேறுபடுகை . |
| கவர்வழி | கிளைவழி , பல கவராகப் போகும் வழி . |
| கவர்விடுதல் | கப்புவிடுதல் , கிளைத்தல் ; பிரிவுபடுதல் ; பலபொருள்படுதல் . |
| கவர்வு | கவர்ச்சி , இழுக்கை ; விருப்பம் ; துயரம் ; அகிம்சை . |
| கவரம் | சினம் . |
| கவராயம் | வட்டம் வரையுங் கருவி . |
| கவராசம் | வட்டம் வரையுங் கருவி . |
| கவராயுதம் | வட்டம் வரையுங் கருவி . |
| கவரி | கவரிமான் ; சாமரை ; எருமை ; தேர் . |
| கவரிமா | ஒருவகை மான் . |
| கவரிமான் | ஒருவகை மான் . |
| கவரிறுக்கி | வேலி முதலியவற்றின் முகப்பில் விலங்குகள் உட்புகாதபடி இடப்படுந் தடைமரம் . |
| கவரிறுக்கு | வேலி முதலியவற்றின் முகப்பில் விலங்குகள் உட்புகாதபடி இடப்படுந் தடைமரம் . |
| கவருகோல் | குயவர் கருவிகளுள் ஒன்று . |
| கவரெழுசங்கம் | சங்கஞ்செடி . |
| கவல் | வருத்தம் , துயரம் ; மனக்கலக்கம் ; பல நினைவு . |
| கவல்பு | வருத்தம் , துயரம் ; மனக்கலக்கம் ; பல நினைவு . |
| கவலம் | துயரம் . |
| கவலித்தல் | கவலைப்படல் , மனம் வருந்துதல் . |
| கவலுதல் | கவலைப்படல் , மனம் வருந்துதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 285 | 286 | 287 | 288 | 289 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கவணி முதல் - கவனன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உணவு, கவலை, துயரம், வருந்துதல், கருவி, வட்டம், காட்டுப்பசு, வரையுங், சொல், நீர், வருத்தம், நினைவு, ஒருவகை, பிரிவுபடுதல், கிளைவழி, மான், கவரிமான், தரும், முகப்பில், தடைமரம், மனக்கலக்கம், கவலைப்படல், மனம், இடப்படுந், உட்புகாதபடி, முதலியவற்றின், கப்புவிடுதல், விலங்குகள், வேலி, கவர், கவளம், வாயளவுகொண்ட, யானைக்கு, விரும்புதல், செய்தல், ஒன்று, கவற்றுதல், அளிக்கும், புத்தகக்கட்டு, பலவாகப், பிரிகை, கவர்ச்சி, போர்வை, மெத்தைப், விருப்பம், கந்தையாலாகிய, இழுக்கை

