முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கருக்கொள்ளுதல் முதல் - கருடக்கல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கருக்கொள்ளுதல் முதல் - கருடக்கல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கருங்குங்கிலியம் | ஒருவகை மருந்துப்பொருள் . |
| கருங்குட்டம் | குட்டநோய்வகை . |
| கருங்குணம் | தீக்குணம் . |
| கருங்குதிரையாளி | கருங்குதிரை மீது செல்லும் வைரவன் . |
| கருங்குந்தம் | கண்ணோய்வகை . |
| கருங்கும்மெனல் | காண்க : கருகும்மெனல் . |
| கருங்குரங்கு | கருநிறக் குரங்கு . |
| கருங்குருவி | கரிக்கருவி . |
| கருங்குவளை | நீலோற்பலம் ; குவளைவகை ; நெய்தல் . |
| கருங்குறுவை | குறுகிய காலத்தில் விளையும் ஒருவகை நெல் . |
| கருங்குன்றி | துவரைவகை ; ஒருவகைக் குன்றி . |
| கருங்கூத்து | இழிவான நாடகம் . |
| கருங்கேசம் | வெண்கலம் . |
| கருங்கை | வலிய கை ; கொல்லுங் கை . |
| கருங்கொடி | கொடிவகை ; வெற்றிலைவகை . |
| கருங்கொண்டல் | தென்கீழ்காற்று ; வடகீழ்காற்று . |
| கருங்கொல் | இரும்பு . |
| கருங்கொல்லன் | இரும்புவேலை செய்வோன் , கருமான் . |
| கருங்கொன்றை | மஞ்சட்கொன்றை . |
| கருங்கோள் | இராகு . |
| கருச்சிதம் | முழக்கம் ; வீராவேசம் . |
| கருஞ்சரக்கு | நெல் முதலிய பதினெண்வகைப் பண்டம் , கூலம் . |
| கருஞ்சனம் | முருங்கைமரம் . |
| கருஞ்சாதி | கீழ்மக்கள் . |
| கருஞ்சாந்து | குழைசேறு . |
| கருஞ்சார் | அரைப்பொருத்து . |
| கருஞ்சாரை | சாரைப்பாம்புவகை . |
| கருஞ்சிலை | கருநிறக்கல் . |
| கருஞ்சிவதை | ஒருவகைச் செடி . |
| கருஞ்சிவப்பு | கருமை கலந்த செந்நிறம் . |
| கருஞ்சிறைப் பறவை | மயில் . |
| கருஞ்சீரகம் | ஒரு சரக்கு , சீரகவகை . |
| கருஞ்சுக்கான் | ஒருவகைக் கல் . |
| கருஞ்சுக்கிரன் | கண்ணோய்வகை . |
| கருஞ்சுரை | சுரைவகை , காட்டுக்கத்திரி . |
| கருஞ்செம்பை | ஒருவகைச் செடி . |
| கருஞ்செய் | நன்செய் நிலம் . |
| கருஞ்செவ்வாப்பு | பிறந்த குழந்தையின் நோய்க்குறியான நிறவேறுபாடு . |
| கருஞ்சேரா | கடித்தலால் உடம்பில் கறுப்பு நிறமான தடிப்பை உண்டாக்கும் ஒரு நச்சுப்பூச்சி . |
| கருஞ்சேவகம் | பெருவீரச் செயல் . |
| கருடக்கல் | பாம்பின் நஞ்சைப் போக்கும் கல் . |
| கருக்கொள்ளுதல் | கருப்பமடைதல் , உருப்பிடித்தல் . |
| கருக்கோடுதல் | காண்க : கருக்குவிடுதல் . |
| கருகல் | கருகிய பொருள் ; கருகுதல் ; தீய்ந்து போகை ; சோறு கறிகளின் காந்தல் ; மங்கலான ஒளி ; தெளிவில்லாப் பேச்சு ; மாலைநேரம் ; மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்றாகிய இருள் . |
| கருகற்புண் | ஆறின புண் . |
| கருகுதல் | நிறங்கறுத்தல் ; பயிர் முதலியன தீய்தல் ; இருளுதல் ; மனம் வருந்துதல் ; வாடுதல் . |
| கருகும்மெனல் | மிக இருளுதற் குறிப்பு . |
| கருகுமணி | மகளிர் உட்கழுத்தில் அணியும் கறுப்பு மணிவகை . |
| கருகுமாலை | மாலையில் தோன்றும் மங்கலான வெளிச்சம் . |
| கருகூலம் | கருவூலம் , பொருளறை , கருப்புக் கட்டி . |
| கருங்கடல்வண்ணன் | கடலின் நிறத்தை ஒத்த திருமால் ; ஐயனார் . |
| கருங்கன் | கண்ணெச்சில் , திருட்டிதோடம் . |
| கருங்கண்ணி | கரிய கண்களையுடையவள் ; ஒரு மீன்வகை ; பருத்திவகை . |
| கருங்கந்து | நெற்களத்தில் பொலிக்கந்துக்கு அடுத்துவிழும் பதர் . |
| கருங்கரப்பன் | கரப்பான்வகை . |
| கருங்கல் | பாறைக்கல் ; மலைக்கல் ; சிகிமுகிக்கல் . |
| கருங்கலம் | மண் ஏனம் , மட்பாண்டம் . |
| கருங்களா | கடல்மீன்வகை . |
| கருங்கற்றலை | கடல்மீன்வகை , வெள்ளைக்கற்றலை மீன் . |
| கருங்காஞ்சொறி | சிறுகாஞ்சொறி . |
| கருங்காடு | சுடுகாடு . |
| கருங்காடை | கறுப்புக் காடைப்பறவை . |
| கருங்காணம் | காட்டுக்கொள் . |
| கருங்காந்தள் | கார்க்கோடல் . |
| கருங்காய் | கொஞ்சங்குறைய முற்றிய பயிர் அல்லது காய் ; இளம்பாக்கு . |
| கருங்கால் | காலிற்காணும் மாட்டுநோய்வகை ; கருமையான கால் . |
| கருங்காலி | மரவகை ; எட்டிமரம் ; கேடு சூழ்வோன் . |
| கருங்காலித்தைலம் | மேகநோய்களுக்குப் பயன் படுத்தும் தைலவகை . |
| கருங்காவி | கருங்குவளை . |
| கருங்கிரந்தி | உடம்பின் தோலைக் கருநிறமாக்குவதாய்க் குழந்தைகட்கு வருவதான ஒருவகை நோய் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 272 | 273 | 274 | 275 | 276 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருக்கொள்ளுதல் முதல் - கருடக்கல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒருவகை, கறுப்பு, கருகுதல், மங்கலான, கடல்மீன்வகை, பயிர், செடி, ஒருவகைக், காண்க, கண்ணோய்வகை, கருகும்மெனல், கருங்குவளை, நெல், ஒருவகைச்

