தமிழ் - தமிழ் அகரமுதலி - கரணவாதனை முதல் - கரவாளம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கரந்துறைச்செய்யுள் | சித்திரகவி வகையுள் ஒன்று . அஃது ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது வேறு ஒரு செய்யுள் தோன்றும்படி எழுத்துகள் அமைத்துப் பாடப்பெறுவது . |
| கரந்துறைப்பாட்டு | சித்திரகவி வகையுள் ஒன்று . அஃது ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது வேறு ஒரு செய்யுள் தோன்றும்படி எழுத்துகள் அமைத்துப் பாடப்பெறுவது . |
| கரந்தை | திருநீற்றுப்பச்சை ; கொடைக்கரந்தை ; ஒரு பூண்டு ; நிரைமீட்போரணியும் பூ ; மரவகை ; நீர்ச்சேம்புச் செடி ; கரந்தைத் திணை ; குரு ; தவணை . |
| கரந்தைத்திணை | பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்டலைக் கூறும் புறத்திணை . |
| கரந்தையார் | பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்கும் மறவர் . |
| கரநியாசம் | தேவர்களை மந்திராட்சர பூர்வமாக விரல்களில் வைக்கும் கிரியை . |
| கரப்பறை | ஒளிந்திருத்தற்குரிய அறை . |
| கரப்பன் | சொறிப்புண்வகை . |
| கரப்பான் | சொறிப்புண்வகை . |
| கரப்பான்கட்டு | கரப்பான் நோய்வகை . |
| கரப்பான் கொல்லி | கரப்பானைப் போக்கும் மருந்து . |
| கரப்பான்பூச்சி | கரப்புப் பூச்சி . |
| கரப்பிரசாரம் | ஒருவகை அபிநயம் . |
| கரப்பு | மறைக்கை ; களவு ; வஞ்சகம் ; மீன் பிடிக்குங் கூடை , பஞ்சரம் முதலியன ; மத்து ; கரப்பான் பூச்சி . |
| கரப்புக்குடில் | சிறுகுடிசை . |
| கரப்புக்குத்துதல் | கூடுவைத்து மீன்பிடித்தல் . |
| கரப்புநீர்க்கேணி | மறைகிணறு . |
| கரப்பொறி | குரங்குபிடிக்கும் ஒருவகைப் பொறி . |
| கரபத்திரம் | ஈர்வாள் , வாள் . |
| கரபம் | மணிக்கட்டிலிருந்து விரல்வரை உள்ள பகுதி ; யானை ; கழுதை . |
| கரபல்லவம் | கைவிரல் . |
| கரபவல்லபம் | விளாமரம் . |
| கரபாகம் | சூடுபட்டு மென்மையான குளிகை போல் திரளுகிற மருந்துப்பாகம் . |
| கரபாத்திரம் | கையையே பாண்டமாகக்கொண்டு உணவு உண்கை ; பிச்சை பெறுவதற்கான ஓடு . |
| கரம் | கை ; முழம் ; துதிக்கை ; ஓலைக்கொத்தின் திரள் ; ஒளிக்கதிர் ; ஒளி ; குடிவரி ; செய்வது ; வெப்பம் ; அழிவு ; சிறுமை ; திடம் ; இடு மருந்து ; விலையேற்றம் ; கழுதை ; நஞ்சு ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| கரம்பதிவு | வரிப்பதிவுப் புத்தகம் . |
| கரம்பதிவுக்கணக்கு | வரிப்பதிவுப் புத்தகம் . |
| கரம்பு | சாகுபடி செய்யாத நிலம் , தரிசு . |
| கரம்பை | வண்டல் பரந்த பூமி ; வறண்ட களிமண் நிலம் ; தரிசு ; கரம்பு ; சிறுகளா . |
| கரமசாலை | காரமான மசாலை . |
| கரமஞ்சரி | நாயுருவி . |
| கரமர்த்திகை | திராட்சை . |
| கரமாலம் | புகை . |
| கரமுகிழ்த்தல் | கைகூப்புதல் . |
| கரமை | யானை . |
| கரமொழிவு | வரி நீக்கம் . |
| கரலட்சணம் | கையாற்புரியும் அபிநயம் . |
| கரவட நூல் | களவைப்பற்றிக் கூறும் நூல் . |
| கரவடம் | வஞ்சம் ; களவு . |
| கரவடர் | திருடர் ; வஞ்சகர் . |
| கரவடி | தங்க நகைக்கிடும் மெருகுவகை . |
| கரவதம் | காக்கை . |
| கரவம் | காட்டீச்சை மரம் . |
| கரவர் | கள்வர் . |
| கரவல் | கொடாது மறைத்தல் . |
| கரவாகம் | காக்கை . |
| கரவாதி | அரிவாள் கத்தி , சுரிகைக் கத்தி . |
| கரவாபிகை | சிறுவாள் . |
| கரவாரம் | கையை எடுத்து உயர வீசுதல் . |
| கரவாலம் | நகம் . |
| கரவாள் | வாள் , கைவாள் . |
| கரவாளம் | வாள் , கைவாள் . |
| கரணவாதனை | உடலுறுப்புகளின் பழக்கவறிவு . |
| கரணன் | கணக்கன் . |
| கரணி | மருந்து ; செய்பவன் . |
| கரணிக்கசோடி | கணக்கர் வரி . |
| கரணிகம் | அந்தக்கரணம் ; கூத்தின் விகற்பம் ; கலவி ; ஊர்க்கணக்கு வேலை . |
| கரணியமேனிக்கல் | கரும்புள்ளிக்கல் . |
| கரணை | கொத்துக்கரண்டி ; கரும்பு முதலியவற்றின் துண்டு ; வீணைத் தண்டு ; புண்வடு ; கருணை ; பாவட்டை ; ஒரு செடி ; கிழங்குவகை . |
| கரத்தல் | மறைத்தல் ; கவர்தல் ; கெடாதிருத்தல் ; அழித்து முதற்காரணத்தோடு ஒடுக்குதல் ; கெடுதல் . |
| கரத்தை | வண்டி . |
| கரதபத்திரம் | அரசிறையைக் கணிக்கும் பத்திரம் . |
| கரதலப்பாடம் | கடைதலைப் பாடம் , தலைகீழாகப் பாடம் பண்ணுகை . |
| கரதலம் | கைத்தலம் , கை . |
| கரதாளம் | பனைமரம் ; கைத்தாளம் . |
| கரந்தகற்படை | மதகு ; கற்படுத்து மூடப்பட்ட நகரின் நீர்க்கால் . |
| கரந்துபடை | மதகு ; கற்படுத்து மூடப்பட்ட நகரின் நீர்க்கால் . |
| கரந்துவரலெழினி | நாடகத் திரைச்சீலை . |
| கரந்துறை | கரந்த கற்படை . |
| கரந்துறைகிளவி | உள்ளக் குறிப்பை மறைத்துச் சொல்லும் மொழி . |
| கரந்துறைகோள் | இராகு , கேது , பரிவேடம் , வால்வெள்ளி , வானவில் போன்று மறைந்து சிறுபான்மையாகக் காணப்படும் கோள்கள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 269 | 270 | 271 | 272 | 273 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரணவாதனை முதல் - கரவாளம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கரப்பான், வாள், மருந்து, ஒன்று, கரம்பு, நிலம், புத்தகம், தரிசு, கழுதை, யானை, நூல், வரிப்பதிவுப், காக்கை, கற்படுத்து, மூடப்பட்ட, நகரின், நீர்க்கால், மதகு, பாடம், மறைத்தல், கத்தி, கைவாள், களவு, பூச்சி, வேறு, செய்யுள், தோன்றும்படி, படிக்கும்போது, இடைவிட்டுப், வகையுள், அஃது, ஒவ்வோரெழுத்து, எழுத்துகள், அமைத்துப், கூறும், சொறிப்புண்வகை, சித்திரகவி, ஆநிரையை, கவர்ந்த, பாடப்பெறுவது, செடி, பகைவர், அபிநயம்

