தமிழ் - தமிழ் அகரமுதலி - கணக்காயர் முதல் - கணிசித்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கணக்குருவம் | அறுதியிட்ட கணக்குக் குறிப்பு . |
| கணக்குவழக்கு | முறைமை ; அளவு ; அலுவல் ; கொடுக்கல் வாங்கல் . |
| கணக்கொப்புவித்தல் | கணக்கைப் பிறர் ஏற்க விவரித்தல் . |
| கணக்கோலை | கணக்கு எழுதப்பெற்ற ஓலை . |
| கணகணத்தல் | வெப்பமுறுதல் , உரத்த சூடு , உடம்பு சூடுறுதல் ; ஒலித்தல் . |
| கணகணப்பு | வெப்பமுறுதல் , உரத்த சூடு , உடம்பு சூடுறுதல் ; ஒலித்தல் . |
| கணகணெனல் | ஒலிக்குறிப்பு ; மிக்கு எரிதல் குறிப்பு ; சூட்டுக்குறிப்பு . |
| கணகம் | படையிலொரு தொகை , தனித்தனி இருபத்தேழு தேர்யானைகளும் , எண்பத்தொரு குதிரைகளும் , நூற்று முப்பத்தைந்து காலாள்களும் உள்ள படைப்பிரிவு . |
| கணகன் | கணக்கன் ; சோதிடன் . |
| கணச்சூடு | காண்க : கணைச்சூடு . |
| கணத்தார் | ஊர்க்காரிய நிருவாகிகள் . |
| கணத்தி | செங்கடம்பு ; ஒருவகை வைப்பு அரிதாரம் . |
| கணதீபம் | எருக்கு . |
| கணந்துள் | ஒருவகைப் பறவை . |
| கணநாதன் | சிவகணங்கட்குத் தலைவன் ; விநாயகன் ; கணநாத நாயனார் . |
| கணப்பறை | தோற்கருவிவகை . |
| கணப்பு | சூடு ; குளிர்காயுந் தீ ; தீச்சட்டி . |
| கணப்புச்சட்டி | குளிர்காய்தற்குரிய தீப்பெய்கலம் . |
| கணப்பெருமக்கள் | ஊராட்சி மன்றத்தார் . |
| கணப்பொருத்தம் | செய்யுள் முதன்மொழிப் பொருத்தவகை ; கலியாணப்பொருத்தங்களுள் ஒன்று . |
| கணப்பொழுது | நொடிப்பொழுது . |
| கணபங்கம் | கணந்தோறும் தோன்றியழிதல் , நொடியில் தோன்றி அழிவது . |
| கணபங்கவாதி | பிரபஞ்சம் கணந்தோறும் தோன்றியழியும் என்று வாதிப்பவன் . |
| கணபதி | சிவகணத் தலைவன் , விநாயகன் . |
| கணபதியணி | அறுகம்புல் . |
| கணபன் | கணநாதன் , கணங்களைக் காப்பவன் . |
| கணம் | காலநுட்பம் ; கூட்டம் ; விண்மீன் கூட்டம் ; ஒரு நோய் ; பேய் ; சிறுமை ; திரட்சி ; ஒருவகைப் புல் . |
| கணம்புல் | புல்வகை . |
| கணவம் | அரசமரம் . |
| கணவர் | கூட்டத்தார் . |
| கணவன் | கொழுநன் ; தலைவன் . |
| கணவாட்டி | கணவாளச் சாதிப்பெண் . |
| கணவாய் | மலைகளுக்கிடையே அமையும் வழி ; சிப்பிவகை . |
| கணவாளம் | ஒரு சாதி . |
| கணவீரம் | அலரிச்செடி ; செவ்வலரி . |
| கணன் | கள்ளன் ; தொகுதி . |
| கணனம் | எண்ணுதல் ; கோள்நடை முதலியன கணிக்கை . |
| கணனை | எண் . |
| கணா | திப்பிலி . |
| கணாதன் | தார்க்கீகன் ; ஒரு மதாசாரியன் ; ஒரு முனிவன் . |
| கணாதிபன் | குழுத் தலைவன் ; விநாயகன் . |
| கணி | கணிப்போன் ; நூல்வல்லோன் ; சோதிடன் ; கலை ; வேங்கைமரம் ; மருதநிலம் ; சண்பகம் ; ஒரு சாதி ; அணிகலன் . |
| கணி | (வி) கணக்கிடு , குணி , எண்ணு ; அளவுகுறி ; மதி . |
| கணிக்காரிகை | குறிசொல்லும் பெண் . |
| கணிகம் | நூறுகோடி ; காலநுட்பம் ; கணப்பொழுது இருக்கக்கூடியது ; தாற்காலிகப் பூசைக்குரியதாய்ச் செய்யப்படும் இலிங்கம் . |
| கணிகவெற்பு | திருத்தணிகைமலை . |
| கணிகன் | சோதிடன் , கணியன் . |
| கணிகாரம் | கோங்கு . |
| கணிகை | பொதுமகள் ; முல்லை . |
| கணிச்சி | மழு , கோடரி ; தோட்டி ; உளி ; குந்தாலி ; வெற்றிலை மூக்கரிகத்தி . |
| கணிச்சியோன் | மழுவேந்தியவன் , சிவன் . |
| கணிசம் | மதிப்பு ; மேம்பாடு ; அளவு ; மிகுதி ; சத்தம் . |
| கணிசம்பார்த்தல் | மதிப்பிடுதல் ; கையால் நிறையறிதல் ; தகுதியறிதல் . |
| கணிசித்தல் | சிந்தித்தல் ; விரும்புதல் ; மதித்தல் ; உய்த்துணர்தல் . |
| கணக்காயர் | நூலோதுவிப்போர் , ஆசிரியர் ; அறிஞர் ; பொருந்தச் சொல்வோர் ; பாவலர் . |
| கணக்காயன் | பாவலன் ; ஆசிரியன் . |
| கணக்கிடுதல் | அளவிடுதல் . |
| கணக்கு | எண் ; கணக்கு ; கணக்குக் குறிப்பு ; அளவு ; முறைமை ; எழுத்து ; தொகை , முடிவு ; செயல் ; சூழ்ச்சி ; கணிதநூல் ; நூல் ; ஒழுங்கான தன்மை . |
| கணக்குக்காட்டுதல் | கணக்கு ஒப்புவித்தல் . |
| கணக்குச்சுருணை | கணக்கோலைக் கற்றை . |
| கணக்குச்சொல்லுதல் | கணக்கு விவரம் சொல்லுதல் . |
| கணக்குப்பிள்ளை | காண்க : கணக்கப்பிள்ளை . |
| கணக்குப்பூட்டுதல் | கணக்கைப் பேரேட்டுக்குக் கொண்டுவருதல் . |
| கணக்குமானியம் | கணக்கனுக்குக் கொடுக்கும் இறையிலி நிலம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 257 | 258 | 259 | 260 | 261 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணக்காயர் முதல் - கணிசித்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கணக்கு, தலைவன், சூடு, அளவு, குறிப்பு, சோதிடன், விநாயகன், கணநாதன், கணப்பொழுது, காலநுட்பம், சாதி, கூட்டம், ஒருவகைப், கணந்தோறும், ஒலித்தல், வெப்பமுறுதல், கணக்கைப், முறைமை, உரத்த, உடம்பு, தொகை, கணக்குக், சூடுறுதல், காண்க

