தமிழ் - தமிழ் அகரமுதலி - கத்தியம் முதல் - கதித்தல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
கதலிபாகம் | செய்யுள் அமைதிகளுள் ஒன்று . |
கதவம் | கதவு ; காவல் . |
கதவாக்கியம் | சோதிட சாத்திரத்தின் ஆண்டு இறுதியைக் குறிக்கும் ஒரு தொடர் . |
கதவு | மறைவு ; காவல் ; சினம் . |
கதவுக்குடுமி | கதவு தாங்கும் கொம்மை . |
கதவுதல் | சினத்தல் . |
கதழ்தல் | சினத்தல் ; பிளத்தல் ; ஓடுதல் ; விரைதல் ; மிகுதல் ; கடுமையாதல் ; கோணுதல் . |
கதழ்வு | விரைவு ; கடுமை ; மிகுதி ; பெருமை ; உவமைச்சொல் ; ஒப்பு ; சினம் . |
கதழ்வுறுதல் | கலங்கிக் கூப்பிடுதல் , அச்சத்தால் கலங்கிக் கூச்சலிடுதல் . |
கதறுதல் | உரக்க அழுதல் ; விலங்கு முதலியன கத்துதல் . |
கதனம் | கடுமை ; கடுப்பு ; கலக்கம் ; போர் ; வேகம் . |
கதாசித்து | இடைவிட்ட காலம் ; சிலவேளை ; கதைக்கொத்து ; அரிதாய் . |
கதாப்பிரசங்கம் | புராண சரித்திரஞ் சொல்லல் . |
கதாமஞ்சரி | கதைக்கொத்து , கதைகளின் தொகுதி . |
கதாயுதம் | தண்டாயுதம் . |
கதாயுதன் | தண்டாயுதமுடையோன் ; வீமன் ; வயிரவன் . |
கதாவணி | கணக்குப் புத்தகம் . |
கதாவுதல் | சொல்லுதல் . |
கதி | நடை ; குதிரை நடை ; போக்கு ; விரைவு ; வழி ; தேவகதி ; அறிவு ; பரகதி ; வீடுபேறு ; நிலை ; ஆற்றல் ; படலம் ; சாதனம் ; புகலிடம் . |
கதிக்கும்பச்சை | நாகப்பச்சை ; பச்சைக்கல் . |
கதிக்கை | அதிகரிப்பு ; கருக்குவாளிமரம் . |
கதிகால் | காண்க : ஊணிக்கம்பு . |
கதித்தல் | செல்லுதல் ; எழுதல் ; நடத்தல் ; விரைதல் ; மிகுதல் ; பருத்தல் ; அறிதல் ; கதியடைதல் . |
கத்தியம் | சிறுதுகில் ; நல்லாடைவகை ; சொல்லத்தக்கது ; உரைநடை ; இலக்கணமின்றி இலக்கணப் பாட்டுப்போற் சொல்வது . |
கத்தியோகம் | மின்மினிப்பூச்சி . |
கத்திரம் | கீரிப்பிள்ளை . |
கத்திரி | ஒருவகைப் பறை , தலைவிரி பறை ; பாம்பு ; கத்திரிவெயில் , அக்கினி நட்சத்திரம் . |
கத்திரிகம் | கால்மாறி நிற்கை . |
கத்திரிசால் | மெழுகுவத்தி நின்று எரிவதற்கு ஆதாரமான கருவி ; சரவிளக்கின் தண்டு . |
கத்திரியம் | ஆடுதின்னாப்பாளை . |
கத்திரியன் | அரசன் , சத்திரியன் . |
கத்திரு | கர்த்தா . |
கத்திருவம் | குதிரை . |
கத்து | சந்து , உடற்பொருத்து ; சடைவு ; கடிதம் ; கூப்பிடுகை ; பிதற்றுகை . |
கத்து | கூவு ; விலங்கு , பறவை முதலியன போல் கத்து ; பிதற்று ; முழங்கு . |
கத்துதல் | ஒலித்தல் ; பறவை முதலியன ஒலித்தல் ; கூவுதல் ; பிதற்றுதல் ; முழுங்குதல் ; சொல்லுதல் ; ஓதுதல் . |
கத்துரு | கர்த்தா ; ஆளுவோன் ; படைப்போன் ; ஆதிசேடன் தாய் . |
கத்துருவம் | குதிரைப்பற் பாடாணம் . |
கத்தூரி | கத்தூரி விலங்கு ; மான்மதம் . |
கத்தூரிகை | தக்கோலப் பொட்டு ; வால்மிளகு . |
கத்தூரிப்பிள்ளை | கத்தூரிநாவி , ஒரு விலங்கு . |
கத்தூரிப்பொட்டு | நெற்றிக்கிடும் கத்தூரி திலகம் . |
கத்தூரிமஞ்சள் | ஒருவகை மஞ்சள் . |
கத்தூரிமான் | கத்தூரி உண்டாகும் மான்வகை . |
கத்தூரியெலுமிச்சை | எலுமிச்சைவகை . |
கத்தை | கழுதை . |
கத்தோயம் | கள் . |
கத்தோலிக்கன் | கிறித்தவமதத்தின் ஒருபிரிவைச் சார்ந்தவன் . |
கதகதெனல் | வெப்பமாதல் குறிப்பு ; ஒலிக் குறிப்பு . |
கதகம் | தேற்றாமரம் , தேற்றாங்கொட்டை ; சொல்லுதல் . |
கதண்டு | கருவண்டு . |
கதநம் | கடுப்பு ; கலக்கம் ; கொலை ; பேசுதல் ; போர் . |
கதம் | சினம் ; பஞ்சம் ; பாம்பு ; அடைகை ; சென்றது ; ஓட்டம் . |
கதம்பகம் | கூட்டம் ; கலவை ; கடுகு . |
கதம்பம் | மேகம் ; நறுமணப்பொடி ; கடப்பமரம் ; கலவை ; கலப்புணவு ; கூட்டம் ; கானாங்கோழி ; பலவகைப் பூக்கள் ; பசுமந்தை ; பச்சிலை ; வேர்களால் தொடுக்கப்பட்ட மாலை , |
கதம்பமுகுளநியாயம் | மழைபெய்தபோது கதம்பமொட்டுகள் ஒரசேரப் பூத்தல்போலச் செயல்கள் ஒருங்கே நிகழ்வதாகிய நெறி . |
கதம்பு | கடம்பு ; கூட்டம் . |
கதம்பை | தேங்காயின் மேல்மட்டை ; தேங்காய் நார்த் தும்பு ; ஒருவகைப் புல் ; வைக்கோல் . |
கதர் | கைராட்டை நூலால் செய்த ஆடை . |
கதலம் | வாழை . |
கதலி | கதலிவாழை ; துகிற்கொடி ; காற்றாடி ; தேற்றாமரம் . |
கதலிகை | கதலிவாழை ; துகிற்கொடி ; ஓர் அணிகல உறுப்பு . |
கதலிச்சி | கருப்பூரம் . |
கதலிப்பூ | வாழைப் பூ ; பச்சைக் கருப்பூரம் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 259 | 260 | 261 | 262 | 263 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கத்தியம் முதல் - கதித்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், விலங்கு, கத்தூரி, கூட்டம், முதலியன, கத்து, கதவு, சொல்லுதல், சினம், கர்த்தா, பறவை, ஒலித்தல், குறிப்பு, துகிற்கொடி, கருப்பூரம், கதலிவாழை, கலவை, தேற்றாமரம், பாம்பு, கதைக்கொத்து, மிகுதல், விரைவு, விரைதல், சினத்தல், காவல், கடுமை, கலங்கிக், போர், குதிரை, கலக்கம், கடுப்பு, கத்துதல், ஒருவகைப்