முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கண்ணுக்குக் கண்ணாதல் முதல் - கண்பீலி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கண்ணுக்குக் கண்ணாதல் முதல் - கண்பீலி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கண்ணொடையாட்டி | கள் விற்கும் பெண் . |
| கண்ணொளி | கண்ணிலிருக்கும் ஒளி , பார்வை . |
| கண்ணோக்கு | அருட்பார்வை ; பார்வை . |
| கண்ணோக்குதல் | பார்த்தல் ; அருளோடு பார்த்தல் . |
| கண்ணோட்டம் | கண்பார்வை ; இரக்கம் , கடைக்கண் பார்வை , அருள்காட்டுதல் ; பார்வையிடுதல் . |
| கண்ணோடுதல் | இரங்குதல் ; விரும்பிய பொருள் மேல் பார்வை செல்லுதல் ; மேற்பார்வை பார்த்தல் . |
| கண்ணோய் | கண்ணோவு ; கண்வலி . |
| கண்திட்டம் | பார்வையாலிடும் மதிப்பு . |
| கண்திட்டி | காண்க : கண்ணேறு . |
| கண்திறத்தல் | கண்ணை விழித்தல் ; சிலை முதலியவற்றிற்குக் கண்ணமைத்தல் ; இளநீர் , நுங்கு முதலியவற்றின் கண்ணைத் திறத்தல் ; பிறந்த குட்டிகள் கண்விழித்தல் ; அறிவு உண்டாக்குதல் , கல்வி கற்பித்தல் ; அருள் புரிதல் ; வானம் மேகமூட்டம்விட்டு வெளியாதல் . |
| கண்தெரியாதவன் | குருடன் . |
| கண்தெறித்தல் | பெரு வெளிச்சத்தால் கண்ணொளி மழுங்குதல் . |
| கண்பசத்தல் | கண்ணின் நிறம் மாறுதல் . |
| கண்பஞ்சடைதல் | கண்ணொளி மழுங்குதல் ; இறப்புக்குறியாகக் கண் ஒளியறுதல் . |
| கண்படுத்தல் | கிடத்தல் ; உறங்குதல் ; பதிக்கப் பட்டிருத்தல் . |
| கண்படுதல் | நித்திரை செய்தல் ; பரவுதல் ; கண்ணோடுதல் ; கண்ணேறுபடுதல் . |
| கண்படை | உறக்கம் ; மனிதர் துயிலிடம் , படுக்கை . |
| கண்படைநிலை | ஒருவகைச் சிற்றிலக்கியம் , அரசன் துயில்கொள்ளுதலைக் கருதி மருத்துவர் முதலியோர் கூறும் புறத்துறை . |
| கண்பரிதல் | மூட்டறுதல் . |
| கண்பறைதல் | கண்ணொளி குறைதல் . |
| கண்பாடு | கண் இமை பொருந்துதல் , உறக்கம் . |
| கண்பார்த்தல் | இரங்குதல் ; அருள்காட்டுதல் ; ஆராய்ந்து பார்த்தல் . |
| கண்பார்வை | மேற்பார்வை ; மதிப்பு . |
| கண்பிசைதல் | தூக்கத்தால் கண்ணைக் கசக்குதல் . |
| கண்பிடி | ஒரு காம்பில் பெருங்காயோடு கூடிய சிறுகாய்கள் . |
| கண்பிதுங்குதல் | வேலை மிகுதியால் வருத்தம் மிகுதல் . |
| கண்பீலி | கால்விரலின் அணிவகை . |
| கண்ணொட்டுதல் | கண் தூக்கநிலையடைதல் . |
| கண்ணுக்குக் கண்ணாதல் | மிகப் பாராட்டப்படுதல் ; அந்தரங்கமாயிருத்தல் . |
| கண்ணுகம் | குதிரை . |
| கண்ணுங்கருத்துமாய் | மிக ஆவலாய் ; முழுக் கவனிப்புடன் . |
| கண்ணுடைமூலி | விட்டுணுக்கிராந்தி . |
| கண்ணுதல் | நெற்றியில் கண்ணையுடையவன் , சிவன் ; கருதுதல் , குறித்தல் ; பொருந்துதல் ; பார்த்தல் . |
| கண்ணுமை | காட்சி . |
| கண்ணுருகுதல் | கண்ணீர் வார்தல் . |
| கண்ணுவம் | கம்மியர் தொழில் . |
| கண்ணுள் | கூத்துவகை ; அரும்புத் தொழில் ; கண்ணிற்குள் . |
| கண்ணுள் வினைஞன் | ஓவியன் ; குழல் ஊதுவோன் . |
| கண்ணுளன் | கண்ணுளாளன் , கூத்தன் ; கம்மாளன் . |
| கண்ணுளாளன் | கூத்தன் ; குழல் ஊதுவோன் . |
| கண்ணுறக்கம் | தூக்கம் . |
| கண்ணுறுத்துதல் | கண்ணோதல் ; பொறாமை உண்டாதல் . |
| கண்ணுறுதல் | பார்த்தல் ; எதிர்ப்படல் ; கிட்டுதல் ; இயலுதல் . |
| கண்ணுறை | கறி : மசாலை ; மேலே தூவுவது ; கண்ணாற்கண்டு அஞ்சும் அச்சம் . |
| கண்ணூடு | கவனம் . |
| கண்ணூறு | காண்க : கண்ணேறு . |
| கண்ணெச்சில் | காண்க : கண்ணேறு . |
| கண்ணெடுத்துப்பார்த்தல் | கவனித்துப் பார்த்தல் ; அருள்செய்தல் . |
| கண்ணெரிவு | கண்ணழற்சி நோய் , தூக்கமின்மை முதலியவற்றால் வரும் கண்ணெரிச்சல் . |
| கண்ணெழுத்தாளன் | அரசனது திருமுகம் எழுதுவோன் . |
| கண்ணெறி | கண்ணூறு ; தோற்கருவிகளை வாசித்தல் ; நேத்திரப்புண் . |
| கண்ணெறிதல் | விரும்புதல் ; கடைக்கண்ணால் பார்த்தல் . |
| கண்ணேணி | கணுக்களிலே அடிவைத்து மலை முதலியலற்றில் ஏறிச்செல்லும்படி அமைத்துள்ள மூங்கில் , கணுக்களைப் படிகளாகக் கொண்ட மூங்கிலேணி . |
| கண்ணேறு | கண் பார்வையால் வரும் தீங்கு . |
| கண்ணைக்காட்டுதல் | கண்சாடை காட்டுதல் . |
| கண்ணைப்பறித்தல் | பார்வையைக் கவர்தல் ; பார்வை மழுங்குதல் . |
| கண்ணைப்பிசைதல் | கண்ணைக் கசக்குதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 255 | 256 | 257 | 258 | 259 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்ணுக்குக் கண்ணாதல் முதல் - கண்பீலி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பார்த்தல், பார்வை, கண்ணொளி, கண்ணேறு, காண்க, மழுங்குதல், குழல், கண்ணுள், தொழில், ஊதுவோன், கண்ணுளாளன், வரும், கண்ணூறு, கூத்தன், கசக்குதல், கண்ணைக், கண்ணோடுதல், மதிப்பு, மேற்பார்வை, அருள்காட்டுதல், கண்பார்வை, பொருந்துதல், உறக்கம், இரங்குதல்

