தமிழ் - தமிழ் அகரமுதலி - கண்பு முதல் - கணக்காய்ச்சல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கண்மாறுதல் | தோன்றி மறைதல் ; நிலை கெடுதல் ; புறக்கணித்தல் . |
| கண்மிச்சில் | காண்க : கண்ணேறு . |
| கண்மின்னுதல் | கண் பொறிதட்டுதல் , கண்ணொளி மழுங்குதல் . |
| கண்முகப்பு | கண்ணின் முன்னிடம் , எதிரில் . |
| கண்முகிழ் | இமை . |
| கண்முகிழ்த்தல் | கண்மூடுதல் , தூங்குதல் . |
| கண்மூக்கி | எறும்பு . |
| கண்மூடி | கவனமில்லாதவன் ; அறிவீனன் ; குருடன் . |
| கண்மூடித்தனம் | கவனமின்மை . |
| கண்மூடுதல் | இமை குவித்தல் ; தூங்குதல் ; சாதல் . |
| கண்மை | கண்ணுக்கிடும் மை . |
| கண்வட்டக்கள்ளன் | கள்ளநாணயம் அடிப்பவன் . |
| கண்வட்டம் | பார்வைக்கு உட்பட்ட இடம் ; நாணயச்சாலை . |
| கண்வரி | வெள்விழியிலுள்ள சிவந்த கோடு . |
| கண்வலிப்பூ | நந்தியாவட்டம் ; காந்தட்பூ . |
| கண்வழுக்குதல் | கண்கூசுதல் . |
| கண்வளர்தல் | தூங்குதல் ; குவிதல் . |
| கண்வளையம் | மத்தளத்தின் கண்ணைச் சுற்றியுள்ள வட்டம் . |
| கண்வாங்குதல் | கண்ணைக் கவர்தல் ; நோக்கம் ஒழிதல் ; தூர் எடுத்தல் . |
| கண்வாய் | மதகு . |
| கண்வாருதல் | கிணறு தூர் எடுத்தல் . |
| கண்வாளன் | கணவன் ; கம்மாளன் . |
| கண்விடுத்தல் | கண்திறத்தல் , விழித்துப் பார்த்தல் . |
| கண்விடுதல் | ஊசி முதலியவற்றின் காது ஒடிதல் ; வெண்ணெய் திரளுதல் ; துளை விடுதல் ; வெள்ளி முதலியன உருகுதல் . |
| கண்விடுதூம்பு | ஒருவகைத் தோற்கருவி . |
| கண்விதுப்பழிதல் | தலைவனைக் காணவேண்டுமென்னும் துடிப்பால் தலைவியின் கண்கள் வருந்துதல் . |
| கண்விழி | கண்மணி . |
| கண்விழித்தல் | கண்திறத்தல் ; உறக்கம் நீங்குதல் ; தூங்காதிருத்தல் ; வாடின பயிர் மீண்டும் செழித்தல் . |
| கண்விழிப்பு | விழித்திருக்கை ; எச்சரிக்கை ; கருத்துடன் இருத்தல் . |
| கண்விளிம்பு | இமை . |
| கண்வினைஞன் | கம்மாளன் . |
| கண்வினையாளன் | கம்மாளன் . |
| கண்வைத்தல் | அருளுதல் ; விரும்பிப் பார்த்தல் ; புண்ணிற் சந்துவிடல் ; கண்ணேறுபடுத்துதல் . |
| கணக்கட்சரம் | குறியீட்டு எழுத்து . |
| கணக்கப்பிள்ளை | ஊர்க்கணக்கன் ; ஒரு சாதியான் . |
| கணக்கழிவு | முறைகேடு . |
| கணக்கன் | கணக்கெழுதுவோன் ; கணக்குப் பார்ப்பவன் ; கணக்கில் வல்லவன் ; எழுத்துக்காரன் ; ஒரு சாதியான் ; சாத்திரம் வல்லோன் ; சண்பகமரம் ; புதன் . |
| கணக்கன்கோடாலி | கணக்கில் திறமையுடையவன் . |
| கணக்காசாரம் | கணக்குப்படி . |
| கணக்காய் | மாதிரி ; சரியாய் . |
| கணக்காய்ச்சல் | கணைச்சூடு என்னும் நோய் . |
| கண்மலர் | மலர்போன்ற கண் ; ஓர் அணிகலன் ; விக்கிரகங்கட் கணியும் விழிமலர் . |
| கண்மலர்தல் | விழித்தல் . |
| கண்மாயம் | கண்கட்டு வித்தை ; கண்ணேறு . |
| கண்பு | சம்பங்கோரை . |
| கண்புகைச்சல் | கண்மங்கல் ; கண்ணோய்வகை . |
| கண்புதைத்தல் | கண்பொத்துதல் ; மறைத்தல் . |
| கண்புரை | கண்ணில் வளரும் படலம் . |
| கண்புளிச்சை | கண்பீளை . |
| கண்பூத்தல் | கண் மயங்கல் ; கண்ணொளி குன்றுதல் . |
| கண்பெறுதல் | பார்வையடைதல் ; பெரியோர்களுடைய அருள்நோக்கிற்கு இலக்காதல் ; அறிவுபெறல் . |
| கண்பொங்குதல் | சூட்டின் மிகுதியால் காணும் குறி தெரிதல் . |
| கண்பொத்துதல் | கண்ணை மூடி விளையாடுதல் . |
| கண்பொறிதட்டுதல் | கண்பொறி கலங்குதல் ; கண்ணொளி மழுங்குதல் . |
| கண்போடுதல் | ஒன்றின்மேல் தனிநோக்குக் கொள்ளல் , மனம்வைத்தல் , கண்ணெச்சிற் படுத்தல் . |
| கண்மங்குதல் | கண்ணொளி குறைதல் . |
| கண்மங்குலம் | பார்வை மங்குதல் , வெள்ளெழுத்து . |
| கண்மட்டம் | கண்மதிப்பு . |
| கண்மட்டு | கண்மதிப்பு . |
| கண்மடல் | இமை . |
| கண்மடை | சிறுமடை . |
| கண்மண்டை | கண்ணெலும்புக்கூடு . |
| கண்மணி | கண்ணின் கருமணி ; உருத்திராக்கம் . |
| கண்மயக்கு | கண்களாற் கவருதல் ; மாயத் தோற்றம் . |
| கண்மயிர் | இமைமயிர் . |
| கண்மருட்சி | கண்ணால் மயக்குகை . |
| கண்மருட்டு | கண்ணால் மயக்குகை . |
| கண்மருந்து | கண்ணுக்குப் போடும் மருந்து ; கண்ணுக்கு இடும் மை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 256 | 257 | 258 | 259 | 260 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்பு முதல் - கணக்காய்ச்சல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கண்ணொளி, தூங்குதல், கம்மாளன், கணக்கில், சாதியான், கண்பொத்துதல், கண்மதிப்பு, மயக்குகை, கண்ணால், கண்மணி, பார்த்தல், மழுங்குதல், கண்மூடுதல், தூர், எடுத்தல், கண்திறத்தல், கண்ணேறு, கண்ணின்

