தமிழ் - தமிழ் அகரமுதலி - கண்டிகும் முதல் - கண்ணரிதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கண்ணசாரம் | கலைமான் ; சதுரக்கள்ளி ; நூக்கமரம் . |
| கண்ணஞ்சனம் | கண்ணிடு மை ; துரிசு . |
| கண்ணஞ்சுதல் | பயப்படுதல் . |
| கண்ணடி | கண்ணாடி . |
| கண்ணடித்தல் | கண்சாடை காட்டுதல் . |
| கண்ணடைத்தல் | இடத்தை மறைத்தல் ; துளை இறுகுதல் ; வழியடைத்தல் ; தூங்குதல் . |
| கண்ணடைதல் | ஊற்றடைதல் ; துளை இறுகல் ; பயிர் குருத்தடைதல் ; திரிந்து கேடுறுதல் . |
| கண்ணடைந்த பால் | திரிந்துகெட்ட பால் , நெடு நேரம் வைத்திருந்து கெட்டுப்போன பால் . |
| கண்ணமரம் | கண்சூட்டு நோய் . |
| கண்ணமுது | பாயசம் . |
| கண்ணயத்தல் | விரும்புதல் , மோகங் கொள்ளுதல் . |
| கண்ணயர்தல் | உறங்குதல் , தூக்கநிலையடைதல் . |
| கண்ணராவி | துன்பநிலை , துயரம் ; கேவல நிலை . |
| கண்ணரிதல் | நீக்குதல் . |
| கண்டிகை | கழுத்தணி ; உருத்திராக்கம் ; சிறு கீரை ; பதக்கம் ; வாகுவலயம் ; நிலப்பிரிவு ; அணிகலச்செப்பு . |
| கண்டிசின் | கண்டேன் ; பார்ப்பாயாக . |
| கண்டித்தல் | கடிந்துரைத்தல் ; துண்டித்தல் ; முடிவுகட்டிப் பேசுதல் ; பருத்தல் . |
| கண்டிதக்காரன் | கண்டிப்புள்ளவன் ; முன்கோபக்காரன் . |
| கண்டிதம் | கடிந்து கூறுதல் ; வரையறை ; அழிவு ; உறுதி ; துண்டிப்பு . |
| கண்டிப்பு | கடிந்து கூறுதல் ; வரையறை ; அழிவு ; உறுதி ; துண்டிப்பு . |
| கண்டியர் | பாணர் ; புகழ்வோர் ; பாடுவோர் ; கள்ளர்குலப் பட்டப்பெயருள் ஒன்று . |
| கண்டிருத்தல் | தோன்றியிருத்தல் ; குறிக்கப்படுதல் . |
| கண்டில் | கண்டி , இருபத்தெட்டுத் துலாம் கொண்ட அளவு . |
| கண்டில் வெண்ணெய் | ஒரு பூண்டு ; பெருஞ்சீரகம் ; குறிஞ்சிநிலத்துள்ள ஒரு மரம் . |
| கண்டீர் | ஒரு முன்னிலையசை . |
| கண்டீரவம் | சிங்கம் ; சதுரக்கள்ளி . |
| கண்டீரை | செவ்வியம் , ஒருவகைக் கருமிளகு . |
| கண்டு | கற்கண்டு ; நூற்பந்து ; கண்டங்கத்தரி ; கட்டி ; கழலைக்கட்டி ; ஓர் அணிகல உரு ; அக்கி ; வயல் . |
| கண்டுகம் | மஞ்சிட்டிச் செடி . |
| கண்டுகழித்தல் | வெறுப்புண்டாக்கும் அளவுக்கு நுகர்ந்து மறுத்தல் ; தானே சமைத்தல் முதலியவற்றால் பசி மந்தமாதல் . |
| கண்டுகாணுதல் | கவனமாய்ப் பார்த்தல் . |
| கண்டுகொள்ளுதல் | நேரில் காணுதல் ; அறிந்து கொள்ளுதல் . |
| கண்டுங்காணாமை | பார்த்தும் பாராது போலிருத்தல் ; போதியதும் போதாததும் ; கண்ணாற் கண்டும் பொருளறிய இயலாதிருத்தல் |
| கண்டுசருக்கரை | புகைத்தற்குரிய ஒருவகை மணப்பண்டம் ; கண்டசருக்கரை ; கற்கண்டு . |
| கண்டுசெய்தல் | ஒன்றைப்போல் பாவித்தல் . |
| கண்டுதுத்தி | ஒரு பூண்டு . |
| கண்டுநூல் | உருண்டை நூல் . |
| கண்டுபாரங்கி | சிறுதேக்கு ; பஞ்சமூலத்துள் ஒன்று ; சிறுகாஞ்சொறி . |
| கண்டுபிடித்தல் | தேடியறிதல் , ஆராய்ந்து அறிதல் . |
| கண்டுமுட்டு | கண்டதனால் உண்டாகும் தீட்டு ; வைதிகரைக் கண்டால் சமணர்கள் மேற் கொள்ளும் தீட்டு . |
| கண்டுமுதல் | அடித்து முதலான தவசம் ; கண்டமுதல் , மொத்த வரவு . |
| கண்டுமுதல்செய்தல் | அறுத்து ஒப்படிசெய்தல் . |
| கண்டுமூலம் | சிறுதேக்கு ; திப்பிலி . |
| கண்டுயிலுதல் | தூங்குதல் ; பார்வை மங்குதல் . |
| கண்டுழவு | அரசனுடைய சொந்த நிலம் . |
| கண்டூதி | தினவு ; காஞ்சொறி . |
| கண்டூயம் | காண்க : கண்டூதி ; ஆதீண்டுகுற்றி . |
| கண்டூயை | காண்க : கண்டூதி ; ஆதீண்டுகுற்றி . |
| கண்டூரம் | கண்டௌடதம் ; காஞ்சொறி ; பூனைக்காலி . |
| கண்டூரை | பூனைக்காலி ; கண்டௌடதம் . |
| கண்டெடங்கடத்தி | சமயத்திற்குத் தகுந்தபடி பேசுகிறவன் . |
| கண்டெடுத்தல் | பார்த்து எடுத்துக்கொள்ளுதல் ; தேர்ந்தெடுத்தல் . |
| கண்டை | பெருமணி ; எறிமணி ; யானைமணி ; வீரக்கழல் ; சிறுதுகில் ; சரிகை ; சரிகைக்கரை ; நூற்கண்டை ; நெசவுத்தாறு ; தோற்கருவி வகை ; ஓர் அசைநிலை . |
| கண்டோக்தி | வெளிப்படையான சொல் . |
| கண்டோட்டு | தண்ணீர் தட்டானபோது முறைப்படி நீர்பாய்ச்சுகை . |
| கண்டௌடதம் | சன்னி மிக்க காலத்துக் கொடுக்கும் ஒருவகைக் கூட்டுமருந்து . |
| கண்ண | விரைவாக , வேகமாக ; கண்ணையுடையன ; நினைக்க . |
| கண்ணகப்பை | தேங்காய்ச் சிரட்டையால் செய்த அகப்பை ; இருப்புச் சட்டுவம் . |
| கண்ணகற்றுதல் | துயில்நீங்கி விழித்தல் . |
| கண்டிகும் | (வி) கண்டேம் ; காண்போமாக . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 253 | 254 | 255 | 256 | 257 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்டிகும் முதல் - கண்ணரிதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பால், கண்டௌடதம், கண்டூதி, சிறுதேக்கு, கற்கண்டு, ஒருவகைக், பூண்டு, தீட்டு, காஞ்சொறி, பூனைக்காலி, ஆதீண்டுகுற்றி, காண்க, கண்டில், ஒன்று, கொள்ளுதல், தூங்குதல், துளை, சதுரக்கள்ளி, கடிந்து, கூறுதல், துண்டிப்பு, உறுதி, அழிவு, வரையறை, சொல்

