தமிழ் - தமிழ் அகரமுதலி - கண்டகோடரி முதல் - கண்டிகம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
கண்டசூலை | கழுத்துநோய்வகை , கழுத்தைச் சுற்றிவரும் புண் . |
கண்டத்திரை | பலநிறத் திரைச்சீலை . |
கண்டதிப்பிலி | வங்காளத் திப்பிலி , ஒரு கொடி வகை . |
கண்டது | காணப்பட்ட பொருள் ; சம்பந்தமற்ற செய்தி . |
கண்டதுங்கடியதும் | நல்லதும் கெட்டதும் . |
கண்டதுண்டம் | பல துண்டம் . |
கண்டநாண் | கழுத்தணிவகை . |
கண்டநாளம் | தொண்டைக்குழி . |
கண்டப்படை | கட்டடத்தின் அடிப்படை . |
கண்டப்பனி | கால்நடைகளுக்கு ஆகாத கொடும் பனி . |
கண்டப்புற்று | தொண்டைப் புண்வகை . |
கண்டபடி | பார்த்தவாறு , மனம்போன விதம் . |
கண்டபத்திரம் | வழக்கைத் தீர்த்து எழுதும் சீட்டு . |
கண்டபதம் | மண்ணுளிப்பாம்பு ; பூநாகம் . |
கண்டபலம் | இலவு . |
கண்டபேரண்டம் | யானையையும் தூக்கிச் செல்லவல்ல இருதலைப் பறவை . |
கண்டம் | கழுத்து ; இடுதிரை ; நிலத்தின் பெரும் பிரிவு ; துண்டம் ; நவகண்டம் ; கண்ட சருக்கரை ; எழுத்தாணி ; குரல் ; கவசம் ; வாள் ; கள்ளி ; ஓர் யாகம் ; குன்றிவேர் ; யானைக் கழுத்து ; சாதிலிங்கம் ; கோயில் முகமண்டபம் ; அக்குரோணி ; கண்டாமணி . |
கண்டம்பயறு | காராமணி . |
கண்டமட்டும் | மிகுதியாய் . |
கண்டமண்டலம் | குறைவட்டம் . |
கண்டமாலை | கழுத்தைச் சுற்றியுண்டாகும் புண் ; ஒருவகைக் கழுத்தணி . |
கண்டயம் | வீரக்கழல் . |
கண்டர் | துரிசு . |
கண்டரை | ஆதார நாடி , ஒரு நரம்பு , இதயத்தின் கீழறைகள் இரண்டில் வலப்புறத்திலிருந்து செல்லும் பெருநாடி என்னும் பெரிய குழல் . |
கண்டல் | தாழை , ஒரு மரவகை ; முட்செடி ; நீர்முள்ளி ; கடல்மீன்வகை . |
கண்டவன் | படைத்தவன் ; பார்த்தவன் ; தொடர்பில்லாதவன் . |
கண்டவிகாரம் | கற்கண்டு . |
கண்டற்குயம் | தாழைவிழுது . |
கண்டறை | கற்புழை , மலைக்குகை . |
கண்டறை வைத்தல் | மரத்தை வெட்டுமிடத்தை வரையறை செய்தல் . |
கண்டன் | வீரன் ; சோழர் பட்டப்பெயர் ; கணவன் ; தலைவன் ; கழுத்துடையவன் ; கொடியோன் . |
கண்டனம் | கண்டிக்கை ; மறுப்பு . |
கண்டனை | கண்டிக்கை ; மறுப்பு . |
கண்டனைக்காரன் | நூல் முதலியவற்றில் குற்றம் காண்பவன் . |
கண்டாங்கி | ஒருவகைச் சீலை ; சாயப்புடைவை . |
கண்டாஞ்சி | மரவகை ; முள்வேல் , குடைவேல் . |
கண்டாபரன் | குதிரைக் கழுத்துச் சுழிகள் . |
கண்டாமணி | பெருமணி ; யானைக் கழுத்திற் கட்டுமணி ; மிக்க ஓசையுள்ள மணி ; வீரக்கழல் . |
கண்டாய் | ஒரு முன்னிலையசை . |
கண்டார் | தோற்றுவித்தவர் ; தொடர்பில்லாதவர் . |
கண்டாரவம் | ஓர் இசை ; மணியின் ஓசை . |
கண்டால் | அன்றி ; ஓர் அசைச்சொல் . |
கண்டாலம் | ஒட்டகம் ; கடப்பாரை ; போர் . |
கண்டாலி | வெள்ளறுகு . |
கண்டாவளி | கழுத்தில் அணியும் முத்துமாலை , கழுத்துமாலை . |
கண்டாவிழ்தம் | ஒருவகை மருந்து . |
கண்டாவுடதம் | ஒருவகை மருந்து . |
கண்டாள எருது | பொதிமாடு . |
கண்டாளம் | எருதின் மேலிடும் பொதி . |
கண்டி | எருமைக்கடா ; மந்தை ; மீன் பிடிக்க அடைக்குங் கருவி ; கண்டிக்கல் ; கழுத்தணி வகை ; உருத்திராக்க மாலை ; நிறையளவு ; இருபத்தெட்டுத் துலாம் கொண்ட அளவு ; இருபது பறைகொண்ட அளவு ; இலங்கையில் உள்ள ஓர் ஊர் ; சிறுகீரை . |
கண்டி | (வி) கடி ; ஒரு சார்பின்றிப்பேசு ; துண்டி , வெட்டு ; பகிர் ; தண்டி . |
கண்டிகம் | கண்டி ; பாரம் என்னும் நிறையளவு ; கடலை . |
கண்டகோடரி | ஒருவகைக் கோடாலி , பரசு , மழு , துறவியருள் ஒருசாரார் தாங்கிச் செல்லும் கைக்கோடாலி . |
கண்டங்கணம் | திப்பிலி . |
கண்டங்கத்தரி | முள்ளுள்ள ஒருவகைக் கத்தரி , சிறுபஞ்சமூலத்துள் ஒன்று , தசமூலத்துள் ஒன்று . |
கண்டங்கருவழலை | ஒருவகைப் பாம்பு . |
கண்டங்கருவிலி | ஒருவகைப் பாம்பு . |
கண்டங்காலி | காண்க : கண்டங்கத்தரி . |
கண்டங்கி | காண்க : கண்டாங்கி . |
கண்டச்சுருதி | சாரீரம் . |
கண்டசர்க்கரை | ஒருவகைச் சருக்கரை . |
கண்டசருக்கரை | ஒருவகைச் சருக்கரை . |
கண்டசரம் | கழுத்தணிவகை . |
கண்டசருக்கரைத்தேறு | கற்கண்டுக் கட்டி . |
கண்டசித்தி | ஆசுகவி சொல்லும் வல்லமை . |
கண்டசுத்தி | ஆசுகவி சொல்லும் வல்லமை . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 252 | 253 | 254 | 255 | 256 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்டகோடரி முதல் - கண்டிகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சருக்கரை, ஒருவகைக், கண்டி, ஒருவகைச், அளவு, கண்டங்கத்தரி, நிறையளவு, ஒருவகை, மருந்து, ஒன்று, சொல்லும், வல்லமை, ஆசுகவி, காண்க, ஒருவகைப், பாம்பு, கண்டாங்கி, கண்டிக்கை, கழுத்து, யானைக், கழுத்தணிவகை, துண்டம், புண், திப்பிலி, கண்டாமணி, கழுத்தணி, கண்டறை, கழுத்தைச், மரவகை, என்னும், வீரக்கழல், செல்லும், மறுப்பு