முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கண்காட்டுவோன் முதல் - கண்டகூணிகை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கண்காட்டுவோன் முதல் - கண்டகூணிகை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கண்கூடுவரி | ஒருவர் கூட்டவன்றித் தலைவன் தலைவியர் தாமே சந்திக்கும் நிலைமையை நடித்துக்காட்டும் நடிப்பு . |
| கண்கூலி | கண்காணிப்பாளனுக்குத் தரும் கூலி ; இழந்த பொருளைக் கண்டெடுத்துக் கொடுப்பதற்குத் தரும் அன்பளிப்பு ; சீட்டு நடத்துவோர் எடுத்துக்கொள்ளும் தொகை . |
| கண்கெடச்செய்தல் | அறிந்து தீமைசெய்தல் . |
| கண்கெடப்பேசுதல் | கண்டொன்று சொல்லுதல் . |
| கண்கெடுதல் | பார்வையிழத்தல் ; அறிவழிதல் . |
| கண்கொட்டுதல் | கண்ணிமைத்தல் . |
| கண்கொதி | காண்க : கண்ணேறு . |
| கண்கொழுப்பு | அகங்காரம் . |
| கண்கொள்ளாக்காட்சி | அடங்காத காட்சி , வியத்தற்குரிய தோற்றம் . |
| கண்சமிக்கினை | காண்க : கண்சாடை . |
| கண்சமிக்கை | காண்க : கண்சாடை . |
| கண்சவ்வு | விழியின் ஓரச் சதை . |
| கண்சாடை | கண்ணாற் குறிப்பித்தல் ; அறிந்தும் அறியார் போன்றிருத்தல் . |
| கண்சாத்துதல் | அன்பொடு நோக்குதல் ; வேண்டுதலுக்காகத் தெய்வத்திற்குக் கண்மலர் சாத்துதல் . |
| கண்சாய்தல் | அறிவு தளர்தல் ; அன்பு குறைதல் . |
| கண்சாய்ப்பு | கண்சாடை ; குறிப்பாகக் காட்டும் அருள் ; வெறுப்பான பார்வை ; சம்மதப்பார்வை ; கண்ணூறு . |
| கண்சிமிட்டுதல் | கண்ணிமைத்தல் ; கண்ணாலே குறிப்புக் காட்டுதல் . |
| கண்சிவத்தல் | சினத்தல் ; நோய் முதலியவற்றால் கண் செந்நிறமடைதல் . |
| கண்சுருட்டுதல் | அழகு முதலியவற்றால் தன் வயப்படுத்தல் ; கண்ணுறங்குதல் . |
| கண்சுழலுதல் | விழிகள் மயங்குதல் . |
| கண்செம்முதல் | கண் பொங்குதல் . |
| கண்செருகுதல் | விழிகள் உள்வாங்குதல் . |
| கண்செறியிடுதல் | விழுங்கிவிடுதல் ; முழுதும் பரவி அடைத்துக்கொள்ளுதல் . |
| கண்டக்கட்டு | பாவகை . |
| கண்டக்கரப்பன் | கரகரப்பு , புகைச்சல் முதலியன உண்டாக்கும் ஒருவகைத் தொண்டைநோய் . |
| கண்டக்கருவி | மிடற்றுக் கருவி . |
| கண்டக்குருகு | கழுத்துநோய்வகை . |
| கண்டக சங்கம் | முட்சங்குச் செடி . |
| கண்டகண் | கண்ணோட்டமில்லாதவன் , கொடியோன் ; அசுரன் ; பகைவன் . |
| கண்டகத்துவாரம் | முள்ளெலும்புத் தொளை , வீணாதண்டத்தின் நடுவே செல்லும் தொளை . |
| கண்டகபலம் | பலாப்பழம் . |
| கண்டகம் | முள் ; நீர்முள்ளிச் செடி : காடு ; உடைவாள் ; வாள் ; கொடுமை ; மூங்கில் . |
| கண்டகாசனம் | ஒட்டகம் . |
| கண்டகாந்தாரம் | பண்வகை . |
| கண்டகாரி | காண்க : கண்டங்கத்திரி . |
| கண்டகி | தாழை ; ஒருவகை மூங்கில் ; இலந்தை ; முதுகெலும்பு ; தீயவள் : காசிக்கருகேயுள்ள ஓர் ஆறு . |
| கண்டகிக்கல் | சாளக்கிராமம் . |
| கண்டகிச்சிலை | சாளக்கிராமம் . |
| கண்டகூணிகை | வீணை . |
| கண்காட்டுவோன் | குருடர்களுக்கு வழிகாட்டுவோன் . |
| கண்காணக்காரன் | காவற்காரன் . |
| கண்காணச்சேவகன் | காவற்காரன் . |
| கண்காணம் | மேல்விசாரணை : பயிர்க்காவல் : கதிர் அறுக்கக் கொடுக்கும் ஆணை : ஒப்படி மேல்விசாரணைச் சம்பளம் . |
| கண்காணி | கண்ணால் நோக்கி அறிபவன் : மேல் விசாரிப்புக்காரன் , மேற்பார்வையாளன் : ஒப்படி உத்தியோகஸ்தன் : கூலியாள்களை மேற்பார்ப்போன் . |
| கண்காணித்தல் | மேல்விசாரணை செய்தல் : கண்ணால் கூர்ந்து கவனித்தல் . |
| கண்காணிப்பு | மேற்பார்வை , காவல் . |
| கண்காந்தல் | கண்ணெரிவு . |
| கண்காரன் | மேற்பார்ப்போன் : நோட்டக்காரன் , குறிப்பறியத்தக்கவன் ; குறிசொல்லுவோன் முன்னிருந்து வினாவிய செய்தியைக் கண்டுபிடிக்கவேண்டி அஞ்சனத்தைப் பார்ப்பவன் . |
| கண்குத்திக்கள்வன் | கண்முன்னேயே மறைவில் கொள்வோன் . |
| கண்குத்திப்பாம்பு | ஒருவகைப் பாம்பு , பச்சைப்பாம்பு . |
| கண்குவளை | கண்கூடு . |
| கண்குழி | கண்கூடு . |
| கண்குழிதல் | கண் உள்ளடங்குதல் . |
| கண்குழிவு | எளிமை . |
| கண்குளிர்ச்சி | கண்களிப்பு , மனமகிழ்ச்சி . |
| கண்குளிர்தல் | கண்களித்தல் . |
| கண்குறைத்தல் | கண்ணைப் பறித்திடுதல் . |
| கண்கூச்சம் | ஒளியாற் கண் கூசுகை ; வெளிச்சத்தைப் பார்க்கக்கூடாமை . |
| கண்கூடு | கண்குழி , கண்குவளை ; எதிரேகாணல் ; நேராக அறிதல் ; வெளிப்படை ; நெருக்கம் ; காட்சித்துறை . |
| கண்கூடுதல் | ஒன்றுகூடுதல் ; நெருங்குதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 251 | 252 | 253 | 254 | 255 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்காட்டுவோன் முதல் - கண்டகூணிகை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கண்சாடை, காண்க, கண்கூடு, ஒப்படி, மேல்விசாரணை, கண்ணால், மேற்பார்ப்போன், காவற்காரன், கண்குவளை, கண்குழி, மூங்கில், முதலியவற்றால், கண்ணிமைத்தல், விழிகள், செடி, தரும், தொளை, சாளக்கிராமம்

