முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கடைச்சன் முதல் - கடையடைக்காய் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கடைச்சன் முதல் - கடையடைக்காய் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கடைமடக்கு | அடிகளின் இறுதியில் வரும் மடக்கு . |
| கடைமடை | கடைசி மதகு ; வாய்க்காலின் நீர் கடைசியாகப் பாயும் நிலம் . |
| கடைமணி | ஆராய்ச்சிமணி ; வேல் முதலியவற்றின் பூண் ; கண்மணியின் கடைப்பக்கம் ; பரதவ மகளிர் கையணிவகை ; தாலியுடன் சேர்த்து அணியும் மணி . |
| கடைமரம் | கடையும் தறி , கடைச்சற்பட்டை . |
| கடைமீன் | இரேவதி நாள் . |
| கடைமுகம் | தலைவாயில் , வாயிலிடம் ; ஐப்பசித் திங்கள் இறுதி நாள் . |
| கடைமுரண் | அடிதோறும் இறுதிச்சீர் முரணாக வருவது . |
| கடைமுழுக்கு | ஐப்பசி மாதத்துக் கடைசி நாளன்று காவிரியில் நீராடுகை . |
| கடைமுளை | நுகக்காற் குச்சி . |
| கடைமுறை | கடைசி முறை ; முடிவு ; இழிநிலை . |
| கடைமை | கீழ்மை . |
| கடைமோனை | அடிகளின் இறுதியிலே வரும் மோனை . |
| கடையகம் | முன்வாயில் . |
| கடையடைக்காய் | ஒரு பழைய வரி . |
| கடைபோடுதல் | கடை வைத்தல் , வாணிகம் செய்தல் ; வம்பளத்தல் . |
| கடைபோதல் | முற்றுப்பெறுதல் , நிறைவேறல் ; நிலைநிற்றல் . |
| கடைச்சன் | கடைசிப் பிள்ளை ; இளைய மகன் . |
| கடைச்சி | மருதநிலத்துப் பெண் ; இளைய பெண் ; கடைசியாகப் பிறந்த பெண் ; நெட்டி . |
| கடைச்சித்தாழை | பறங்கித்தாழை , அன்னாசி . |
| கடைச்சீர் | வஞ்சிச்சீர் . |
| கடைசல் | காண்க : கடைச்சல் ; மருகிடுகை . |
| கடைசல்பிடித்தல் | மரம் முதலியவற்றைக் கடையும்வேலை செய்தல் . |
| கடைசார் | காரியம் ; புறக்கடை . |
| கடைசாரம் | காரிய முடிவு . |
| கடைசாரி | கடைகெட்டவள் , கற்பழிந்தவள் . |
| கடைசால் | கடைசாரம் , செயல் முடிவு ; கப்பலின் பின்பக்கம் ; கடைசி உழவு . |
| கடைசாலொதுக்குதல் | கைவேலையை முடித்தல் . |
| கடைசி | முடிவு ; கடைசிப் பெண் ; மருதநிலப் பெண் . |
| கடைசோரி | அப்பக்கடை . |
| கடைஞன் | மருதநிலத்தான் ; இழிகுணமுடையவன் , குணக்கேடன் . |
| கடைத்தடம் | வாயில் . |
| கடைத்தரம் | கீழ்த்தரம் . |
| கடைத்தலை | முதல்வாயில் , தலைவாயில் , மாளிகையின் புறத்தலை வாயில் . |
| கடைத்தலைவாயில் | முதல்வாயில் , தலைவாயில் , மாளிகையின் புறத்தலை வாயில் . |
| கடைத்தெரு | ஆவண வீதி , கடைவீதி . |
| கடைத்தேற்றம் | ஈடேறுதல் , உய்தல் . |
| கடைத்தேறுதல் | ஈடேறுதல் , உய்தல் . |
| கடைதல் | மத்தாற் கடைதல் ; மரம் முதலியன கடைதல் ; மசித்தல் ; கலக்குதல் ; மிகச் செய்தல் ; அரித்தல் ; கடைவது போன்ற ஒலியுண்டாதல் . |
| கடைதலைப்பூட்டு | பூட்டுவிற் பொருள் கோள் . |
| கடைதலைவிற்பூட்டு | பூட்டுவிற் பொருள் கோள் . |
| கடைத்திறப்பு | கதவு திறத்தல் ; பரணி என்னும் சிற்றிலக்கியத்தில் வரும் முதல் உறுப்பு . |
| கடைதுடிப்பு | செய்யுளின் ஈற்றடி சிறந்து நிற்றல் ; கடைக்கண் துடித்தல் . |
| கடைநன் | கடைசல்வேலை செய்வோன் . |
| கடைநாள் | இறுதிநாள் ; இறக்கும் நாள் ; அழிவு காலம் , ஊழிக்காலம் ; இரேவதி நாள் . |
| கடைநிலை | புறவாயில் ; முடிவு ; ஈற்றெழுத்து , விகுதி ; சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று ; ஒரு புறத்துறை , சான்றோர் தம் வரவினைத் தலைவனுக்கு உணர்த்துமாறு வாயிற்காவலற்குக் கூறுவது . |
| கடைநிலைத்தீபகம் | விளக்கணி வகைகளுள் ஒன்று , இறுதியில் நிற்கும் சொல் முன்னர்ச் சென்று பொருளை விளக்குவது . |
| கடைநிலைத்தீவகம் | விளக்கணி வகைகளுள் ஒன்று , இறுதியில் நிற்கும் சொல் முன்னர்ச் சென்று பொருளை விளக்குவது . |
| கடைநிலையெழுத்து | இறுதியில் உள்ள எழுத்து , சொல்லின் ஈற்றெழுத்து . |
| கடைப்படி | ஓர் அளவை . |
| கடைப்படுதல் | இழிவாதல் ; முடிதல் , நிறைவேறுதல் . |
| கடைப்படுதானம் | கைம்மாறு கருதிக் கொடுக்கப் பெறுவது ; அச்சம் , புகழ் முதலியவற்றின் ஏதுவாகத் தரப்படுவது . |
| கடைப்பந்தி | கடைசி வரிசை ; இறுதியில் உண்ணும் விருந்தின் கூட்டம் . |
| கடைப்பாடு | தீர்மானம் , முடிவு ; இழிவு . |
| கடைப்பான்மை | இழிந்த தன்மை . |
| கடைப்பிடி | உறுதி ; தெளிவு , தேற்றம் ; மறவாமை ; சித்தாந்தம் ; கொள்கை ; அபிமானம் . |
| கடைப்பிடித்தல் | உறுதியாகப் பற்றுதல் ; தெளிவாய் அறிதல் ; விடாதொழுகுதல் ; மறவாதிருத்தல் ; சேர்த்துவைத்தல் . |
| கடைப்புணர்வு | அணிகலனின் கடைப்பூட்டு . |
| கடைப்புத்தி | மூடத்தனம் ; பின்புத்தி . |
| கடைப்பூ | நிலத்தின் கடைசி போகம் . |
| கடைப்பூண் | அணிகலனின் பூட்டுவாய் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 249 | 250 | 251 | 252 | 253 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடைச்சன் முதல் - கடையடைக்காய் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கடைசி, முடிவு, பெண், இறுதியில், நாள், ஒன்று, சொல், வகைகளுள், கடைதல், வாயில், செய்தல், வரும், தலைவாயில், அணிகலனின், ஈற்றெழுத்து, கோள், விளக்குவது, பொருள், பொருளை, முன்னர்ச், நிற்கும், விளக்கணி, சென்று, பூட்டுவிற், முதல்வாயில், இரேவதி, கடைசிப், முதலியவற்றின், கடைசியாகப், அடிகளின், இளைய, மரம், ஈடேறுதல், புறத்தலை, மாளிகையின், கடைசாரம், உய்தல்

