தமிழ் - தமிழ் அகரமுதலி - கடனாளி முதல் - கடிதம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கடிகாசூத்திரம் | நாழிகைவட்டில் ; அரைஞாண் . |
| கடிகாரம் | நாழிகை வட்டில் , நேரங்காட்டுங் கருவி , மணிப்பொறி . |
| கடிகுரங்கு | குரங்கு வடிவினதாகச் செய்யப்பட்டுள்ளதும் சேர்ந்தாரைக் கடிப்பதுமாகிய மதிற்பொறி . |
| கடிகை | நாழிகை ; கதவிடு தாழ் ; துண்டம் ; அரையாப்பு ; கரகம் ; உண்கலம் ; குத்துக் கோல் ; தோள்வளை ; ஊர்ச்சபை ; மங்கலப் பாடகன் ; முகூர்த்தம் பார்ப்பவன் ; கேடகம் ; திரைச்சீலை ; கட்டுவடம் ; சோளங்கிபுரம் ; சமயம் . |
| கடிகைமாக்கள் | நாழிகை அறிவிப்போர் ; நாழிகைக் கவி சொல்வோர் ; மங்கலப் பாடகர் . |
| கடிகையார் | அரசனுக்குச் சென்ற நாழிகையைச் சொல்வோர் ; பறைமூலம் அரசன் ஆணையை அறிவிப்போர் . |
| கடிகைவெண்பா | நாழிகை வெண்பா , தேவரிடத்தும் அரசரிடத்தும் நிகழுஞ்செயல் கடிகையளவிலே தோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு வெண்பாவாற் சொல்லப்படுவது . |
| கடிகொள்ளுதல் | விளக்குதல் ; காவல்புரிதல் . |
| கடிகோல் | நாயின் கழுத்திலே கட்டும் தடி ; பறவையோட்டுங் கழி . |
| கடிச்சை | கடிச்சைமீன் ; ஒருவகைப் பூண்டு ; ஒரு மரவகை . |
| கடிசரி | கூத்துநிலைகளுள் ஒன்று . |
| கடிசு | கடுமை ; நிமிர்வு . |
| கடிசூத்திரம் | காண்க : அரைஞாண் . |
| கடிசை | பாய்மரந்தாங்கி . |
| கடிஞை | பிச்சைப் பாத்திரம் , இரப்போர் கலம் ; மட்கலம் . |
| கடித்தகம் | கேடகம் . |
| கடித்தல் | பல்லாற் கடித்தல் ; வடுப்படுத்துதல் , தழும்புபடுத்தல் ; துண்டித்தல் ; கயிறு முதலியன இறுக்கிப் பிடித்தல் ; விடாது பற்றுதல் . |
| கடிதடம் | அரை ; நிதம்பம் , பெண்குறி . |
| கடிதம் | பசை பூசிய துணி ; காகிதம் , ஏடு , ஓலை , திருமுகம் ; பிசின் . |
| கடனாளி | கடன்பட்டவன் ; கடமையுடையவன் . |
| கடனிறவண்ணன் | திருமால் ; ஐயனார் |
| கடனிறுத்தல் | கடனைக் கொடுத்தல் ; கடமையைச் செய்தல் . |
| கடனுரை | ஒருவகைக் கடல் மீன் ஓடு ; ஒருவகைப் பணியாரம் ; ஒரு மருந்துச் சரக்கு . |
| கடா | ஆட்டின் ஆண் ; ஆட்டின் பொது ; எருமைக்கடா ; சருக்கரை காய்ச்சும் பாண்டம் ; வினா , கேள்வி . |
| கடாக்களிறு | மதயானை . |
| கடாக்கன்று | ஆண் எருமைக்கன்று . |
| கடாக்குட்டி | ஆண்குட்டி . |
| கடாகம் | அண்டகோளகை ; கடாரம் , பெருங்கொப்பரை ; கிணறு . |
| கடாகாசம் | குடத்தில் தோன்றும் ஆகாசம் , குடத்தினுள் காற்று . |
| கடாகு | பறவை . |
| கடாச்சங்காத்தம் | மடத்தனம் ; மதியாத்தன்மை . |
| கடாசலம் | யானை . |
| கடாசுதல் | ஆணி ஆப்பு முதலியன அடித்தல் ; எறிதல் . |
| கடாஞ்செய்தல் | மதஞ்சொரிதல் . |
| கடாட்சம் | கடைக்கண் ; கடைக்கண் பார்வை ; அருள் . |
| கடாட்ச வீட்சணம் | கடைக்கண் பார்வை . |
| கடாட்சித்தல் | அருளுடன் நோக்குதல் , கிருபை செய்தல் . |
| கடாத்தன்மை | கீழ்ப்படியாமை ; திருத்தமின்மை ; சுறுசுறுப்பின்மை . |
| கடாதல் | கடாவுதல் , வினாவுதல் . |
| கடாம் | யானை மதம் தோன்றும் துளை ; யானை மதநீர் ; பத்துப்பாட்டுள் ஒன்றாகிய மலைபடுகடாம் . |
| கடாய் | கடா ; வாணலி , பொரிக்கும் சட்டி , கொப்பரை . |
| கடாரம் | காழகம் , பர்மா நாடு ; பெருநாரத்தை ; கொப்பரை . |
| கடாரி | ஈனாத இளம் பசு . |
| கடாரை | கடார நாரத்தை . |
| கடாவல் | வினாவல் ; செலுத்தல் ; ஆணி முதலியன அடித்தல் ; குட்டுதல் ; கேட்டல் . |
| கடாவிடுதல் | பிணையடித்தல் , நெற்போர் முதலியவற்றைக் கடாக்கொண்டு மிதிப்பித்தல் . |
| கடாவுதல் | செலுத்துதல் ; ஆணி முதலியன அறைதல் ; குட்டுதல் ; வினாவுதல் ; தூண்டுதல் ; விடுதல் . |
| கடாவுவட்டி | வட்டிக்கு வட்டி . |
| கடி | காவல் ; விரைவு ; கூர்மை ; மணம் : காலநுட்பம் ; கலியாணம் ; விளக்கம் ; அச்சம் ; பேய் ; ஐயம் ; நீக்கம் ; வியப்பு ; புதுமை ; மிகுதி ; இன்பம் ; கரிப்பு ; கடுமை ; இடுப்பு ; குறுந்தடி . |
| கடி | (வி) கடி ; விலக்கு . |
| கடிக்கை | கருக்குவாய்ச்சிமரம் . |
| கடிகண்டு | பூனைக்காலிச் செடி . |
| கடிகம் | கைமுட்டி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 245 | 246 | 247 | 248 | 249 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடனாளி முதல் - கடிதம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், முதலியன, நாழிகை, யானை, கடைக்கண், அடித்தல், தோன்றும், கடாவுதல், குட்டுதல், கொப்பரை, வினாவுதல், கடாரம், பார்வை, செய்தல், அறிவிப்போர், கேடகம், மங்கலப், சொல்வோர், ஒருவகைப், அரைஞாண், கடித்தல், கடுமை, ஆட்டின்

