முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கடுங்காய்ச்சல் முதல் - கடுரவம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கடுங்காய்ச்சல் முதல் - கடுரவம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கடுஞ்செட்டு | மிக்க சிக்கனம் ; அநியாய வணிகம் . |
| கடுஞ்சொல் | இன்னாச் சொல் , கடுமையான சொல் ; இழிசொல் . |
| கடுடம் | மருக்காரைச்செடி . |
| கடுத்தம் | அழுத்தம் ; சோனகருடைய சீதன உடன்படிக்கை ; உலோபம் ; தோல் முதலியவற்றால் சேர்த்த புத்தகம் ; கடிதம் ; கடுமை . |
| கடுத்தல் | கடுத்தவாயெறும்பு ; ஒரு மீன்வகை . |
| கடுத்தலூசி | கல்லைத் துளைக்கும் ஓர் இருப்புக் கருவி . |
| கடுத்தலை | வாள் . |
| கடுத்தவாயெறும்பு | கடுத்தானெறும்பு , கட்டெறும்பு . |
| கடுத்திறவாலி | இறக்கை முளைத்த எறும்பு வகை . |
| கடுத்துவாய் | காண்க : கடுத்தவாயெறும்பு . |
| கடுத்தேறு | குளவி . |
| கடுதாசி | கடதாசி ; காகிதம் ; நிருபம் , சீட்டு ; விளையாடும் சீட்டு . |
| கடுந்தழற்பூமி | காண்க : கடுஞ்சினப்பூமி , உழமண் . |
| கடுந்தி | நாயுருவி . |
| கடுந்திலாலவணம் | அமரியுப்பு , எள்ளுப்பு . |
| கடுந்தோய்ச்சல் | ஆயுதங்களை நன்றாகத் தீயில் காயவைத்துச் செம்மையாக்கல் . |
| கடுநகை | பெருஞ்சிரிப்பு ; எள்ளல்பற்றிய பெருநகை , ஏளனச் சிரிப்பு . |
| கடுநட்பு | மிக்க நட்பு . |
| கடுநடை | வேகமான நடை ; தொல்லையை உண்டாக்கும் நடை ; கடினமான எழுத்து நடை . |
| கடுநிம்பம் | நிலவேம்பு . |
| கடுப்ப | ஒப்ப , ஒர் உவமவுருபு . |
| கடுப்படக்கி | எருமுட்டைப் பீநாறி , வெதுப்படக்கி . |
| கடுப்பு | நோவு ; சினம் ; விரைவு ; ஒப்பு ; செருக்கு , அகங்காரம் ; முகம்சுளிக்கை ; கருவூமத்தை ; கடுக்காய் வேர் . |
| கடுப்புக்கழிச்சல் | சீதபேதி . |
| கடுப்புமரம் | எண்ணெய் ஊற்றும் இடுக்குமரம் ; எள் முதலியன ஆட்டும் ஆலை . |
| கடுப்பை | வெண்கடுகு . |
| கடுபத்திரம் | சுக்கு . |
| கடுபலம் | இஞ்சிப் பூண்டு ; கருணைக்கிழங்கு ; காறாக்கருணை . |
| கடும்பகல் | உச்சிவேளை . |
| கடும்பச்சை | நாகப்பச்சைக்கல் . |
| கடும்பசி | மிகுந்த பசி . |
| கடும்பத்தியம் | உப்பு , புளி முதலியன சேர்க்காமல் உண்ணும் பத்தியம் . |
| கடும்பலம் | இஞ்சிக்கிழங்கு ; கருணைக்கிழங்கு . |
| கடும்பு | சுற்றம் ; சும்மாடு ; சீம்பால் ; கூட்டம் . |
| கடும்புப்பால் | சீம்பால் , காய்ச்சித் திரட்டிய சீம்பால் . |
| கடும்பை | காண்க : கடுப்பை . |
| கடுமரம் | எட்டிமரம் ; கடுக்காய்மரம் . |
| கடுமழை | கனத்த மழை , பெருமழை . |
| கடுமா | சிங்கம் ; புலி . |
| கடுமான் | சிங்கம் ; புலி . |
| கடுமீன் | சுறா . |
| கடுமுடுக்கு | வேகமாய் நடக்கை ; முடுக்கான அதிகாரம் . |
| கடுமுடெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| கடுமுள் | ஆயுதப் பொது ; பேராயுதம் ; கண்டங்கத்தரி ; நச்சுமுள் . |
| கடுமை | கொடுமை ; கண்டிப்பு ; கடினம் ; வன்மை ; மிகுதி ; விரைவு ; வெம்மை ; மூர்க்கம் ; சினம் . |
| கடுமொடெனல் | காண்க : கடுமுடெனல் . |
| கடுமொழி | கடுமையான சொல் , வன்சொல் . |
| கடுரம் | மோர் . |
| கடுரவம் | தவளை . |
| கடுஞ்சூல் | முதற்கருப்பம் . |
| கடுங்காய்ச்சல் | மிகுந்த சுரம் ; அதிகமாக உலர்கை . |
| கடுங்காய்நுங்கு | முதிர்ந்த நுங்கு . |
| கடுங்காரநீர் | முட்டை . |
| கடுங்காரம் | ஒருவகை எரிமருந்து ; ஒருவகை உப்பு ; சாதிபத்திரி ; மிக்க உறைப்பு . |
| கடுங்கால் | பெருங்காற்று , புயல் . |
| கடுங்காலம் | கொடிய காலம் ; பஞ்ச காலம் ; வெப்பமான காலம் . |
| கடுங்காவல் | மிகுந்த காவல் , வன்சிறை . |
| கடுங்குடி | மிதமிஞ்சின குடி . |
| கடுங்கூர்மை | மிக்க கூர்மை , அறக்கூர்மை ; பலவகை உப்பு . |
| கடுங்கை | கடுமை ; வருந்துகின்ற கை . |
| கடுங்கோடை | முதுவேனில் . |
| கடுங்கோபம் | மிகுசினம் . |
| கடுசரம் | கடுகுரோகிணி . |
| கடுசாரம் | காசிச்சாரம் , ஒருவகை உப்பு . |
| கடுசித்தாழை | அன்னாசி . |
| கடுஞ்சாரி | நவச்சாரம் . |
| கடுஞ்சிநேகம் | மிகுந்த நட்பு . |
| கடுஞ்சினப்பூமி | உவர்மண் . |
| கடுஞ்சுண்ணத்தி | சீனக்காரம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 247 | 248 | 249 | 250 | 251 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடுங்காய்ச்சல் முதல் - கடுரவம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சொல், உப்பு, மிக்க, மிகுந்த, சீம்பால், ஒருவகை, கடுமை, காலம், கடுத்தவாயெறும்பு, சிங்கம், புலி, கடுமுடெனல், விரைவு, கடுஞ்சினப்பூமி, சீட்டு, கடுமையான, நட்பு, சினம், கடுப்பை, முதலியன, கருணைக்கிழங்கு

