தமிழ் - தமிழ் அகரமுதலி - கடமான் முதல் - கடவுணதி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கடவுட்பள்ளி | பௌத்தர் திருக்கோயில் , பௌத்த சைத்தியம் . |
| கடவுட்பொறையாட்டி | தேவராட்டி . |
| கடவுண்மங்கலம் | தெய்வத்தை நிலைநிறுத்துதல் , தெய்வப் பிரதிட்டை . |
| கடவுண்மண்டலம் | சூரியன் , கதிரவன் . |
| கடவுண்மை | கடவுள் தன்மை , தெய்வத்தன்மை , |
| கடவுணதி | கங்கையாறு . |
| கடமை | கடப்பாடு ; ஒவ்வொருவருக்கும் உரிய பணி ; முறை ; கடன் ; தகுதி ; குடிகள் அரசர்க்குச் செய்யும் உரிமை ; காட்டுப்பசு ஒருவகை மான் ; பெண்ணாடு ; குடியிறை . |
| கடமைக்கால் | அரசினரால் ஏற்படுத்தப்பெற்ற மரக்கால் . |
| கடயம் | அத்தகடகம் ; இந்திராணி ஆடும் கூத்து . |
| கடரி | மரமஞ்சள் ; குச்சிமஞ்சள் , அரிசனம் . |
| கடல் | சமுத்திரம் ; ஒரு பேரெண் ; இராக சின்னத்துள் ஒன்று ; சதயநாள் ; மிகுதி . |
| கடல்கட்டி | வலைஞன் ; நீர் தடுப்போன் ; கடல்வாழ் உயிர்கள் ; தீங்கு செய்யாமல் மந்திரத்தால் கட்டுவோன் . |
| கடல்கலக்கி | பேய்முசுட்டைக்கொடி . |
| கடல்கோத்தல் | கடல் பொங்கி எங்கும் பெருகுதல் . |
| கடல்நாய் | விலங்குவகை . |
| கடல்படுபொருள் | கடலில் உண்டாகும் பொருள்கள் ; உப்பு , பவளம் , முத்து ,சங்கு , ஓர்க்கோலை முதலியன . |
| கடல்முனை | கடலுள் நீண்டு கூர்த்த முனை போல் உள்ள நிலப்பகுதி . |
| கடல்வண்டு | குடைவண்டு . |
| கடல்வண்ணன் | திருமால் ; ஐயனார் . |
| கடல்வாய்க்கால் | உப்பங்கழி |
| கடல்வாழைக்காய் | மீன் . |
| கடல்விராஞ்சி | செடிவகை . |
| கடல்விளையமுதம் | கடல்படு பொருள் , உப்பு . |
| கடல்விறால் | பெரிய கடல்மீன்வகை . |
| கடலகம் | ஊர்க்குருவி ; ஆமணக்கு ; பூமி ; கடற்கரை இல்லம் . |
| கடலஞ்சிகம் | தருப்பை . |
| கடலட்டை | அட்டைவகை . |
| கடலடக்கி | கடல்கலக்கி ; பேய்முசுட்டை . |
| கடலடம்பு | ஒருவகை அடப்பங்கொடி . |
| கடலடி | இலவங்கம் . |
| கடலடைத்தான் | அபின் ; கஞ்சா . |
| கடலமிர்து | காண்க : கடல்விளையமுதம் . |
| கடலர் | நெய்தல்நில மக்கள் . |
| கடலாடி | நாயுருவி ; ஓர் ஊர் . |
| கடலாத்தி | பாதிரி . |
| கடலாமணக்கு | காட்டாமணக்கு . |
| கடலாமை | ஆமைவகை . |
| கடலி | பூமருது . |
| கடலிப்பூ | பூமருது . |
| கடலிற்குருவி | காண்க : கடற்குருவி |
| கடலிறைஞ்சி | கடற்கரை மரவகை . |
| கடலிறைவன் | வருணன் . |
| கடலுடும்பு | கடல் மீன்வகை . |
| கடலுப்பு | கறியுப்பு . |
| கடலுராய்ஞ்சி | கடற்பறவைவகை . |
| கடலெடுத்தல் | கடல் ஏற்றம் , கடல்நீர் மிகுகை . |
| கடலெல்லை | உலகம் . |
| கடலெலி | ஒருமீன்வகை . |
| கடலெள் | ஒருவகை எள்ளு . |
| கடலை | ஒருவகைப்பயறு , ஒரு தவசம் , நவதானியத்துள் ஒன்று ; சிறு மரவகை . |
| கடலைக்காய் | நிலக்கடலை . |
| கடலைக்கொட்டை | நிலக்கடலை . |
| கடலைப்பட்டாணி | பட்டாணிக் கடலை ; புடைவைவகை . |
| கடலைப்பணியாரம் | கடலை மாவாலான காரமில்லாத பணியாரவகை ; பருப்புத் தேங்காய் என்னும் பணியாரம் . |
| கடலைமணி | கடலை வித்துப்போலும் பொன் மணிகளாலான கழுத்தணிவகை . |
| கடலோசை | கடல் முழக்கம் ; வெற்றோசை , வீண் ஆரவாரம் . |
| கடலோடி | கடற்பயணி , கடற்பயணக்காரன் . |
| கடலோடுதல் | கடலிற் பயணம் செய்தல் . |
| கடவது | செய்யவேண்டுவது . |
| கடவன் | கடமைப்பட்டவன் ; தலைவன் ; கடன் கொடுத்தவன் . |
| கடவாத்தியம் | குடவாத்தியம் , இசைக்கருவியாகப் பயன்படுத்தும் மட்குடம் . |
| கடவான் | துளை ; செய்வரப்பில் கழிவுநீர் செல்லுதற்கு வெட்டப்பட்ட நீர்மடை . |
| கடவு | தணக்குமரம் ; வழி ; எருமைக்கடா ; ஆட்டுக்கடா ; பக்கம் . |
| கடவு | (வி) செலுத்து ; முடுக்கு ; கேள் . |
| கடவுட்கணிகை | தேவருலகத்து ஆடல்மகள் . |
| கடவுட்சடை | வரிக்கூத்துவகை . |
| கடவுட்டீ | ஊழித் தீ . |
| கடவுட்பணி | ஆதிசேடன் ; கடவுள் ஊழியம் , தேவர் தொண்டு . |
| கடமான் | காண்க : கடமா . |
| கடமுடெனல் | வயிறிரைதல் ; ஒலிக்குறிப்பு . |
| கடமுனி | அகத்தியர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 243 | 244 | 245 | 246 | 247 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடமான் முதல் - கடவுணதி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கடல், கடலை, காண்க, ஒருவகை, பூமருது, மரவகை, நிலக்கடலை, கடவு, கடல்விளையமுதம், ஒன்று, கடன், கடல்கலக்கி, உப்பு, கடவுள், கடற்கரை

