தமிழ் - தமிழ் அகரமுதலி - கடவுதல் முதல் - கடனாய் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கடன்கழித்தல் | கடமையைச் செய்தல் ; பிதிர் கருமஞ் செய்தல் ; நித்திய கருமஞ் செய்தல் ; கடனைத் தீர்த்தல் ; கரிசனமற்ற வேலை செய்தல் ; மனமின்றிச் செய்தல் . |
| கடன்காரன் | கடன்பட்டவன் ; கடன் கொடுத்தவன் ; அகால மரணம் அடைந்தவன் . |
| கடன்காரி | கடன்பட்டவள் ; கடன் கொடுத்தவள் ; அகால மரணம் அடைந்தவள் . |
| கடன்கேட்டல் | கடன் கொடுக்கும்படி கேட்டல் ; கொடுத்த கடனைக் கேட்டல் . |
| கடன்கோடல் | பணத்தைக் கடனாகக் கொள்ளுகை , வழக்குப் பதினெட்டனுள் ஒன்று . |
| கடன்சீட்டு | கடன்பத்திரம் . |
| கடன்படுதல் | கடன்வாங்குதல் ; கடனுக்குள்ளாதல் . |
| கடன்பத்திரம் | கடன்சீட்டு . |
| கடன்பற்று | கடனாகப் பெற்ற பொருள் . |
| கடன்பற்றுதல் | கொடுத்த கடனை வாங்கிக் கொள்ளுதல் . |
| கடன்மரம் | மரக்கலம் , கப்பல் . |
| கடன்மல்லை | மாமல்லபுரம் . |
| கடன்முரசோன் | காமன் , மன்மதன் . |
| கடன்முள்ளி | கத்தரிவகை . |
| கடன்முறி | காண்க : கடன்சீட்டு . |
| கடன்முறை | பெரியோர் வழிபாடு , பெரியோர்க்குச் செய்யும் மரியாதை . |
| கடன்மை | தன்மை ; முறைமை . |
| கடனம் | தாழ்வாரம் ; முயற்சி ; ஊக்கம் . |
| கடனாய் | கடலில் வாழும் நீர்நாய் . |
| கடவுதல் | செலுத்துதல் ; முடுக்குதல் ; வினாவுதல் , கேட்டல் ; தகுதியாதல் . |
| கடவுநர் | செலுத்துவோர் . |
| கடவுள் | இறைவன் ; வானவன் ; முனிவன் ; குரு ; நன்மை ; மேன்மை ; தெய்வத்தன்மை . |
| கடவுள்எழுதுதல் | தெய்வ வடிவைச் சமைத்தல் . |
| கடவுள்தாரம் | தேவதாரு மரம் . |
| கடவுள்வாழ்த்து | தெய்வ வணக்கம் ; மும்மூர்த்திகளுள் ஒருவரை உயர்த்திச் சொல்லும் புறத்துறை . |
| கடவுள்வேள்வி | தேவயாகம் , தேவர்பொருட்டு ஓமத்தீயில் செய்யும் வேள்வி . |
| கடவுளர் | தேவர் , தேவகணத்தார் . |
| கடவுளார் | தேவர் , தேவகணத்தார் . |
| கடவை | கடக்கை ; வழி ; வாயில் ; ஏணி ; கடப்பு மரம் ; தணக்குமரம் ; குற்றம் . |
| கடவைப்படுதல் | நீங்குதல் ; காணாமற்போதல் . |
| கடற்கரை | கடலருகு , கடல் ஓரம் , கடலின் எல்லை . |
| கடற்காக்கை | கடற்காகம் என்னும் பறவை ; கடலிறஞ்சி மரம் . |
| கடற்காளான் | கடலின் ஒருவகைப் பாசி . |
| கடற்காற்று | கடலினின்று நிலத்தை நோக்கி வீசும் காற்று . |
| கடற்கிடந்தோன் | கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமால் . |
| கடற்குதிரை | ஒரு மீன்வகை . |
| கடற்குருவி | காண்க : கல்லுப்பு . |
| கடற்கொஞ்சி | ஒரு மரவகை , சீமைக்கொஞ்சி . |
| கடற்கொடி | தும்பை . |
| கடற்கொழுப்பை | எழுத்தாணிப்பூண்டு . |
| கடற்கொள்ளை | கப்பற்கொள்ளை . |
| கடற்கொள்ளைக்காரன் | கப்பற் கொள்ளைக் காரன் . |
| கடற்கோ | வருணன் , கடலரசன் , கடல்தெய்வம் . |
| கடற்கோடு | கடற்கரை . |
| கடற்சார்பு | நெய்தல்நிலம் . |
| கடற்சில் | கடல்மரக்கொட்டை . |
| கடற்செலவு | கடற்பயணம் . |
| கடற்சேர்ப்பன் | நெய்தல்நிலத் தலைவன் . |
| கடற்பக்கி | காண்க : கடற்பட்சி . |
| கடற்பச்சை | காண்க : கடற்பாலை . |
| கடற்பஞ்சு | கடற்காளான் . |
| கடற்பட்சி | கிளிஞ்சில் . |
| கடற்படை | கப்பற்படை . |
| கடற்பன்றி | ஒரு கடல்விலங்கு , பெருமீன்வகை . |
| கடற்பாசி | ஒருவகைக் காளான் , கடற்பூடு . |
| கடற்பாம்பு | கடலில் வாழும் நச்சுப் பாம்புவகை . |
| கடற்பாய்ச்சி | கடலில் கப்பற் செலுத்துவோன் . |
| கடற்பாலை | சோழி . |
| கடற்பிணா | நெய்தல்நிலப் பெண் . |
| கடற்பிறந்தாள் | பாற்கடலில் தோன்றிய திருமகள் . |
| கடற்புறம் | ஆறுகள் கடலுடன் கூடும் முகத்தில் உள்ள மணல் அடைப்பு ; கடற்கரைப் பகுதி . |
| கடற்பூ | செம்மருது . |
| கடற்பெருக்கு | கடலில் நீரேற்றம் . |
| கடற்றாமரை | பெருந்தாமரை . |
| கடற்றாழை | கொந்தாழை ; வாட்டாழை . |
| கடற்றுறை | துறைமுகம் . |
| கடற்றெங்கு | தென்னைவகை . |
| கடற்றெய்வம் | வருணன் . |
| கடறு | காடு ; அருவழி ; பாலைநிலம் ; மலைச் சாரல் ; வாளுறை . |
| கடன் | முறைமை ; இருணம் ; இரவற்பொருள் ; இயல்பு ; வைதிகக் கிரியை ; விருந்தோம்பல் ; மரக்கால் ; குடியிறை ; மானம் ; இறுதிக்கடன் ; பின்னர்த் தருவதாக வாங்கிய பொருள் ; கடப்பாடு . |
| கடன்கட்டாய்ப்பேசுதல் | கடுமையாய்ப் பேசுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 244 | 245 | 246 | 247 | 248 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடவுதல் முதல் - கடனாய் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், செய்தல், கடலில், காண்க, கடன், மரம், கடன்சீட்டு, கேட்டல், கடற்பாலை, தேவகணத்தார், தேவர், கடற்பட்சி, வருணன், கடற்காளான், கடலின், கப்பற், கடற்கரை, முறைமை, மரணம், அகால, கருமஞ், கொடுத்த, கடன்பத்திரம், வாழும், செய்யும், பொருள், தெய்வ

