தமிழ் - தமிழ் அகரமுதலி - கசத்தல் முதல் - கஞ்சாகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கசாயம் | கிழாயம் , கஷாயம் , மருந்துச் சரக்கோடு கொதித்து வற்றிய நீர் . |
| கசாலை | கோக்காலி ; சுவர்மேல் ஆரல் ; அடுக்களை . |
| கசானனன் | விநாயகன் ; ஆனைமுகக் கடவுள் . |
| கசானா | கருவூலம் , கஜானா , பொக்கிஷசாலை , நிதிச்சாலை . |
| கசிதம் | பதிக்கை ; பூச்சு ; துடுப்பு ; சிறு அகப்பை ; ஊறுகை ; ஈரமுறுகை ; வியர்க்கை ; இளகுகை ; அழுகை . |
| கசிதல் | நெகிழ்தல் ; ஈரமுறுதல் ; வியர்த்தல் ; உப்பு முதலியன இளகுதல் ; அழுதல் ; கவலைப்படுதல் . |
| கசிவு | ஊறுகை ; ஈரம் ; மனநெகிழ்கை ; வியர்வை ; வருத்தம் . |
| கசு | காண்க : கஃசு . |
| கசுகசுப்பு | ஒட்டு ஈரத்தன்மை . |
| கசுகுசெனல் | மெதுவாகப் பேசுதல் , காதுக்குள் மெதுவாகப் பேசும் குறிப்பு . |
| கசுமாலர் | அழுக்குடையோர் ; கெட்ட நடத்தையுடையோர் ; போரிடுவோர் . |
| கசுமாலி | அழுக்குடையோள் ; சண்டைக்காரி . |
| கசூர் | அசட்டை . |
| கசேந்திர ஐசுவரியம் | பெருஞ்செல்வம் . |
| கசேந்திரன் | இந்திரன் யானையாகிய ஐராவதம் ; அரச யானை ; சிறந்த யானை ; திருமாலால் மீட்கப்பட்ட யானை . |
| கசேருகம் | தமரத்தை ; கொட்டி . |
| கசை | பசை ; அடிக்கும் சவுக்கு ; மயிர்மாட்டி ; கவசம் ; கடிவாளம் . |
| கசைமுறுக்கி | தட்டான்குறடு ; கயிறு திரிப்பவன் . |
| கசையடி | சவுக்கால் அடிக்கும் தண்டனை . |
| கசைவளையல் | பொற்கம்பி வளை . |
| கசைவேலை | பொற்கம்பி வேலை . |
| கசைவைத்த புடைவை | சரிகைக்கரைச் சீலை . |
| கஞ்சங்கருவி | தாளம் முதலிய வெண்கல வாத்தியம் . |
| கஞ்சகம் | கறிவேம்பு ; கச்சின் தலைப்பு ; முன்றானை ; கண்ணிலிடும் ஒரு மருந்து . |
| கஞ்சகாரன் | கன்னான் . |
| கஞ்சங்குல்லை | கஞ்சாங்கோரை ; ஒரு பூச்செடி . |
| கஞ்சம் | அப்பவருக்கம் ; கஞ்சா ; துளசி ; வெண்கலம் ; கைத்தாளம் ; பாண்டம் ; தாமரை ; நீர் ; வஞ்சனை . |
| கஞ்சரன் | சூரியன் ; பிரமன் . |
| கஞ்சரி | வாத்தியவகை . |
| கஞ்சரீடம் | வலியான்குருவி . |
| கஞ்சல் | கூளம் , குப்பை ; பயனற்றது ; தாழ்ந்த தரமுள்ள பொருள் . |
| கஞ்சவாதம் | நொண்டி நடக்கச்செய்யும் வாதநோய் . |
| கஞ்சன் | கடும்பற்றுள்ளன் , ஒன்றுங் கொடாதவன் ; பிரமன் ; முடவன் ; குறளன் ; கண்ணபிரானின் மாமனாகிய கம்சன் . |
| கஞ்சனம் | கரிக்குருவி ; கண்ணாடி ; கைத்தாளம் . |
| கஞ்சனை | கண்ணாடி ; கலசப்பானை ; தூபகலசம் ; சிறுபானை . |
| கஞ்சா | ஒருவகைச் செடி ; கள் ; சாராயம் . |
| கஞ்சாக்குடுக்கை | கஞ்சாப்புகை குடிக்கும் கருவி , உக்கா . |
| கஞ்சாகம் | தவிடு ; பொடி ; மூட்டை . |
| கசத்தல் | கைப்புச் சுவையாதல் ; கைத்தல் ; வெறுப்படைதல் . |
| கசதி | துன்பம் , வருத்தம் . |
| கசப்பி | வேம்பு ; காசித்தும்பை ; பேய்த்தும்பை ; மயிற்சிகை ; வல்லாரை . |
| கசப்பு | கைப்பு ; ஒரு சுவை ; வெறுப்பு . |
| கசபம் | கோரை , அறுகு முதலிய சிறுபுல் . |
| கசபரீட்சை | அறுபத்துநான்கு கலையுள் யானை இலக்கணம் அறியும் வித்தை . |
| கசபுடம் | இரண்டுமுழக் கன அளவுக்கு ஆயிரம் எருமுட்டை வைத்து எரிக்கும் புடம் ; நூறு எருமுட்டை இட்டு எரிக்கும் புடம் ; மருந்து புடம் வைப்பதற்கு வெட்டிய பள்ளம் . |
| கசம் | யானை ; கயம் ; ஓரளவு ; தாமரை ; தலைமயிர் ; இரண்டுமுழ அளவு ; கயரோகம் ; நீரூற்று ; ஆழமான நீர்நிலை ; இரும்பு ; தாதுப்பொருள் ; மாசு . |
| கசமடையன் | பெருமூடன் . |
| கசமாது | ஊமத்தஞ்செடி . |
| கசர் | சிவப்புக் கல்லின் குற்றம் ; குறைவு ; மீதப்பட்டது . |
| கசர்ப்பம் | மஞ்சள் . |
| கசரத்து | உடற்பயிற்சி . |
| கசரை | காலேயரைக்காற் பலம் . |
| கசரோகம் | கயரோகம் , எலும்புருக்கி நோய் . |
| கசவம் | கடுகு . |
| கசவிருள் | பேரிருள் . |
| கசவு | கசா என்னும் செடிவகை . |
| கசனை | ஈரம் ; பற்று ; உப்புப்பற்று ; சூட்டுக்குறி . |
| கசா | செடிவகை . |
| கசாக்கிரம் | மயிர்நுனி ; ஒரு சிற்றளவு . |
| கசாகூளம் | தாறுமாறு ; கடைப்பட்டோர் ; பல சாதிக் கலப்பு ; குப்பை . |
| கசாது எழுதுதல் | திருமணப்பதிவு செய்தல் . |
| கசாப்பு | ஆடுமாடுகளைக் கொல்லுதல் ; இறைச்சி விற்போன் . |
| கசாப்புக்கிடங்கு | ஆடுமாடுகள் அடிக்கும் இடம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 237 | 238 | 239 | 240 | 241 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கசத்தல் முதல் - கஞ்சாகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், யானை, அடிக்கும், புடம், பிரமன், கண்ணாடி, குப்பை, எருமுட்டை, தாமரை, கயரோகம், எரிக்கும், செடிவகை, கஞ்சா, வருத்தம், ஈரம், ஊறுகை, மெதுவாகப், பொற்கம்பி, நீர், மருந்து, முதலிய, கைத்தாளம்

