முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கட்டழகு முதல் - கட்டியங்காரன் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கட்டழகு முதல் - கட்டியங்காரன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கட்டிச்சுருட்டுதல் | பொருளைச் சுருட்டிக் கட்டுதல் ; கவர்ந்த பொருளைத் திரட்டுதல் ; செய்தொழிலை நிறுத்துதல் . |
| கட்டிப்பிடித்தல் | இறுகத் தழுவுதல் ; செலவை மிகச் சுருக்குதல் . |
| கட்டிப்புகுதல் | கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளுதல் . |
| கட்டிப்புகுந்தவள் | மறுமணம் செய்துகொண்டவள் . |
| கட்டிப்புழுக்கு | வெல்லத்துடன்கூடிய அவரை முதலியவற்றின் புழுக்கு . |
| கட்டிபடுதல் | கட்டியாதல் . |
| கட்டிமேய்த்தல் | கால்நடைகளைக் கட்டி மேயச் செய்தல் ; அடக்கி நடத்துதல் . |
| கட்டிமை | உலோபம் , பிசுனத்தன்மை ; கட்டுப்பாடு . |
| கட்டியக்காரன் | புகழ்வோன் ; அரசனின் சீர்த்தியைப் புகழ்வோன் ; கட்டியம் கூறிப் புகழ்வோன் ; கூத்தில் வரும் கோமாளி . |
| கட்டியங்காரன் | கட்டியக்காரன் ; புகழ்வோன் ; சீவகன் தந்தையாகிய சச்சந்தனுக்கு அமைச்சன் . |
| கட்டழிதல் | நெறிதப்புதல் , நிலைகெடுதல் ; கட்டுக்குலைதல் . |
| கட்டளை | அளவு ; செங்கலச்சு ; உருவங்கள் வார்க்கும் கருவி ; ஒன்றைப்போல அமைக்கும் உரு ; உவமை ; துலாம் ; நிறையறி கருவி ; துலாராசி ; விதி ; முறை ; தரம் ; கோயில் தருமம் ; உரைகல் ; ஒழுங்கு ; எல்லை ; குதிரைக்குப் பூட்டும் கடிவாளம் முதலியன ; ஆணை ; கட்டுப்பாடு ; சமய மூலதத்துவம் உணர்த்தும் நூல் . |
| கட்டளைக்கல் | பொன்னை உரைத்து மாற்றறியப் பயன்படும் உரைகல் ; நிறைகல் , படிக்கல் . |
| கட்டளைக்கலி | எல்லா அடிகளும் ஒற்று நீங்க எழுத்து ஒத்துவரும் கலிப்பா . |
| கட்டளைக்கலித்துறை | கலிப்பா இனவகை . |
| கட்டளைக்கலிப்பா | கலிப்பா இனவகை . |
| கட்டளைக்கோல் | நியாயப் பிரமாணம் . |
| கட்டளைகேட்டல் | நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற இசைவு கேட்டல் . |
| கட்டளைச்சட்டம் | நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற இசைவு கேட்டல் . |
| கட்டளைச்சுவாமி | சைவ மடத்தைச்சார்ந்த கோயில்களை மேற்பார்க்கும் சைவத்துறவி . |
| கட்டளைத்தம்பிரான் | சைவ மடத்தைச்சார்ந்த கோயில்களை மேற்பார்க்கும் சைவத்துறவி . |
| கட்டளையடி | எழுத்துக் கணக்கில் அமைந்த செய்யுளடி . |
| கட்டளையாசிரியம் | எல்லா அடிகளும் ஒற்று நீங்க எழுத்து ஒத்துவரும் அகவல் . |
| கட்டளையிடுதல் | பணித்தல் , ஆணையிடல் . |
| கட்டளைவஞ்சி | எல்லா அடிகளும் ஒற்று நீங்க எழுத்து ஒத்துவரும் வஞ்சிப்பா . |
| கட்டளை வலித்தல் | அவரவர் தன்மையை உறுதிப்படுத்துதல் . |
| கட்டனை மரம் | திமிசுக்கட்டை . |
| கட்டாக்காலி | பட்டிமாடு . |
| கட்டாகட்டி | விடாத்தன்மை , விடாப்பிடி . |
| கட்டாகட்டிமை | மிகுந்த உலோபத்தன்மை ; மிகுந்த கட்டுப்பாடு . |
| கட்டாஞ்சி | முள்வேலமரம் . |
| கட்டாட்டம் | பல்லாங்குழி ஆட்டத்தில் ஒருவகை . |
| கட்டாடி | குறிசொல்வோன் ; வண்ணான் ; வண்ணார் தலைவன் . |
| கட்டாடியார் | கோயிற் பூசாரி . |
| கட்டாண்மை | பேராண்மை , பெருவீரம் . |
| கட்டாணி | உலோபி ; வல்லவன் , பலசாலி ; கடைப்பூட்டாணி ; கயவன் ; பேராசைக்காரன் . |
| கட்டாந்தரை | வெட்டாந்தரை , வெறுந்தரை ; வறண்டு இறுகிய தரை . |
| கட்டாப்பு | வேலியடைத்த நிலம் , காவல் நிலம் . |
| கட்டாம்பாரை | கடல்மீன்வகை . |
| கட்டாயம் | வலாற்காரம் , பலாத்காரம் ; நெருக்கம் ; கட்டுப்பாடு ; அவசியம் ; ஒரு பழைய வரி . |
| கட்டார்ச்சிதம் | வருந்தித் தேடிய பொருள் . |
| கட்டாரம் | குத்துவாள் , கட்டாரி . |
| கட்டாரி | குத்துவாள் ; சூலம் ; எழுத்தாணிப் பூண்டு . |
| கட்டாவணி | கதிர் அறுப்பு . |
| கட்டான் | கட்டங்களுள் காய் வைத்து ஆடும் ஒருவகை விளையாட்டு . |
| கட்டி | இறுகின பொருள் ; மண்கட்டி முதலியன ; கருப்பண்டம் ; சருக்கரைக் கட்டி ; கருப்புக் கட்டி ; கற்கண்டு ; திரளை ; புண்கட்டி ; பிளவை ; பொன் ; திரண்ட மாத்திரளை ; வெல்லம் ; ஒரு புள் ; அகமகிழ்ச்சி . |
| கட்டிக்காத்தல் | கவனித்துப் பாதுகாத்தல் ; விடாது அணுகிக் கீழ்ப்படிந்து நடத்தல் . |
| கட்டிக்கொடுத்தல் | திருமணம் செய்து கொடுத்தல் ; பொதிந்து தருதல் ; ஈடுசெய்தல் ; மிகவும் உதவுதல் . |
| கட்டிக்கொள்ளுதல் | அடிப்படுத்துதல் ; தழுவுதல் ; திருமணஞ் செய்துகொள்ளுதல் ; வசமாக்குதல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; உடுத்தல் ; பறித்தல் ; இலஞ்சங்கொடுத்து வசப்படுத்தல் ; சமாதானஞ் செய்தல் . |
| கட்டழகு | பேரழகு . |
| கட்டழல் | மிகுந்த நெருப்பு , பெருநெருப்பு . |
| கட்டழித்தல் | காவலைக் கெடுத்தல் ; நிலை கெடுத்தல் ; நெறியழித்தல் ; முற்றுமழித்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 239 | 240 | 241 | 242 | 243 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கட்டழகு முதல் - கட்டியங்காரன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், புகழ்வோன், கட்டுப்பாடு, கட்டி, ஒற்று, அடிகளும், நீங்க, எழுத்து, மிகுந்த, கலிப்பா, எல்லா, ஒத்துவரும், சைவத்துறவி, மறுமணம், மேற்பார்க்கும், கோயில்களை, மடத்தைச்சார்ந்த, ஒருவகை, நிலம், கெடுத்தல், கட்டாரி, குத்துவாள், பொருள், கேட்டல், இசைவு, கட்டியக்காரன், செய்தல், கட்டளை, கருவி, உரைகல், தழுவுதல், செய்து, நிறைவேற்ற, தீர்ப்பை, நீதிமன்றத், இனவகை, முதலியன

