தமிழ் - தமிழ் அகரமுதலி - ககமாரம் முதல் - கச்சபம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கங்கைக்குலம் | வேளாளர்மரபு , வேளாளர்குலம் . |
| கங்கைகோத்திரம் | வேளாளர்மரபு , வேளாளர்குலம் . |
| கங்கைதனயன் | காண்க : கங்காசுதன் . |
| கங்கைதூவி | மேகம் . |
| கங்கைபெற்றோன் | முருகன் ; வீடுமன் ; விநாயகன் . |
| கங்கைமாத்திரர் | சிறுவர் விளையாட்டில் வழங்கிய ஒரு பெயர் . |
| கங்கைமைந்தன் | காண்க : கங்காசுதன் . |
| கங்கையோன் | துருசு . |
| கங்கைவேணியன் | கங்கையைச் சடையில் வைத்திருக்கும் சிவன் . |
| கச்சகம் | குரங்கு . |
| கச்சங்கட்டுதல் | கச்சை கட்டுதல் ; ஒரு செயலை முடிக்க முனைந்து நிற்றல் . |
| கச்சங்கம் | ஒப்பந்தம் . |
| கச்சட்டம் | உடைமடிப்பு ; கோவணம் . |
| கச்சடா | இழிவு ; போக்கிரித்தன்மை . |
| கச்சந்தி | கோணிப்பை . |
| கச்சந்தியவிழ்த்தல் | பொய்மூட்டை அவிழ்த்தல் . |
| கச்சபம் | ஆமை ; நவநிதியுள் ஒன்று ; மற்போர் நிலையுள் ஒன்று . |
| ககமாரம் | மணித்தக்காளி . |
| ககரம் | க' என்னும் எழுத்து . |
| ககராசன் | காண்க : ககபதி . |
| ககவசுகம் | ஆலமரம் . |
| ககனசாரி | விண்ணில் இயங்குவோர் . |
| ககனசாரிகை | விண்ணில் இயங்குகை ; பரத நாட்டிய உறுப்புள் ஒன்று . |
| ககனம் | வானம் ; வளிமண்டலம் ; துறக்கம் ; காடு ; படை ; பறவை . |
| ககனாக்கிரகம் | அண்டமுகடு . |
| ககனாரவிந்தம் | வான்தாமரை ; கொட்டைப் பாசி . |
| ககு | தீச்செய்கை உள்ளவன் , கொடியவன் . |
| ககுஞ்சலம் | காண்க : சாதகப்புள் . |
| ககுத்து | திமில் ; எருத்துத் திமில் ; எருத்தின் பிடர் . |
| ககுதி | முத்திரை குத்தின எருது . |
| ககுபம் | திசை ; மருதமரம் ; கருமருது . |
| ககுளம் | ஒருவகை இசையளவை . |
| ககேசன் | கருடன் ; சூரியன் . |
| ககேசுரன் | கருடன் ; சூரியன் . |
| ககேந்திரன் | கருடன் ; சூரியன் . |
| ககோதரம் | பாம்பு . |
| ககோளசாத்திரம் | வானநூல் . |
| ககோளம் | வானவட்டம் , வானமண்டலம் . |
| கங்கடகம் | கவசம் , சட்டை . |
| கங்கடம் | கவசம் , சட்டை . |
| கங்கணங்கட்டுதல் | ஒருசெயலை முடித்தற்கு முனைந்து நிற்றல் ; விருது கட்டுதல் ; காப்புக் கட்டுதல் . |
| கங்கணம் | காப்புநாண் ; கடகம் ; கைவளை ; நீர்வாழும் பறவைவகை . |
| கங்கதம் | சீப்பு . |
| கங்கபத்திரம் | அம்பு ; பருந்தின் இறகு . |
| கங்கம் | சீப்பு , தீப்பொறி ; பருந்து ; கழுகு ; பெருமரம் ; வேள்வித்தூண் ; வரம்பு ; கோளகபாடாணம் ; தமிழ்நாட்டை அடுத்துள்ள ஒரு நாடு . |
| கங்கர் | பருக்கைக் கல் ; சுக்கான் கல் ; ஓர் அரச குலத்தார் . |
| கங்கரம் | மோர் . |
| கங்கவி | பருந்து . |
| கங்கன் | சீயகங்கன் என்னும் அரசன் ; பிறவிச் சீர்பந்த பாடாணம் . |
| கங்காசுதன் | கங்கையின் புதல்வன் ; முருகன் ; வீடுமன் . |
| கங்காணம் | காண்க : கண்காணம் . |
| கங்காணி | காண்க : கண்காணி . |
| கங்காதரன் | கங்கையைத் தலையிலே தாங்கியிருக்கும் சிவன் . |
| கங்காதேவி | கங்கையாற்றுக்குரிய தெய்வம் . |
| கங்காநீலன் | நீலநிறமுள்ள குதிரைவகை . |
| கங்காபட்டாரகி | கோயில்களில் சிவனுக்கணியும் கங்கை வடிவமான தலையணி . |
| கங்காளம் | எலும்பு ; முழுவெலும்பு ; தசை கழிந்த எலும்புக்கூடு ; பெருங்கலம் ; பிணம் . |
| கங்காளமாலி | எலும்புகளை மாலையாக அணிந்த சிவன் . |
| கங்காளன் | சிவன் ; துருசு . |
| கங்காளி | காளி ; பார்வதி ; ஏழை . |
| கங்கானம் | குதிரை . |
| கங்கில் | காளசின்னத்தின் உறுப்பு . |
| கங்கு | வயலின் வரம்பு ; வரம்பின் பக்கம் ; கரை ; எல்லை ; அணை ; வரிசை ; தீப்பொறி ; தீப்பற்றிய துரும்பு ; பனைமட்டையி னடிப்புறம் ; ஒருவகை விளையாட்டிற் குறிக்கும் எல்லை ; கழுகு ; பருந்து ; கருந்தினை . |
| கங்குகரை இல்லாமை | அளவின்மை . |
| கங்குமட்டை | பனைமட்டையின் அடிக்கருக்கு . |
| கங்குரோகம் | கொப்புள நோய்வகை . |
| கங்குல் | இரவு , இருள் ; இடையாமம் ; பரணி நாள் . |
| கங்குல்வாணர் | இரவில் திரியும் பழக்கமுடையவர் , அரக்கர் . |
| கங்குல்விழிப்பு | கூகை . |
| கங்குவடலி | அடிக்கருக்கு மட்டையுள்ள பனைமரம் . |
| கங்கை | ஏழு புண்ணிய ஆறுகளுள் ஒன்று ; சிவன் மனைவி ; நவச்சாரம் . |
| கங்கைக்குணன் | நவச்சாரம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 235 | 236 | 237 | 238 | 239 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ககமாரம் முதல் - கச்சபம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சிவன், ஒன்று, பருந்து, கருடன், சூரியன், கட்டுதல், கங்காசுதன், சீப்பு, சட்டை, தீப்பொறி, நவச்சாரம், அடிக்கருக்கு, கவசம், வரம்பு, கழுகு, எல்லை, கங்கை, திமில், துருசு, வீடுமன், முருகன், வேளாளர்குலம், முனைந்து, நிற்றல், வேளாளர்மரபு, விண்ணில், என்னும், ஒருவகை

