தமிழ் - தமிழ் அகரமுதலி - ஒத்தாசை முதல் - ஒப்பமிடுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஒப்படியிருக்கை | இருக்கைவகை ஒன்பதனுள் ஒன்று |
| ஒப்படை | ஒப்புக்கொடுக்கை ; கட்டளையை நிறைவேற்றுகை . |
| ஒப்படைத்தல் | ஒப்புக்கொடுத்தல் ; சேர்ப்பித்தல் ; ஈடுகொடுத்தல் ; பரிந்துரைத்தல் . |
| ஒப்பணி | உவமையணி . |
| ஒப்பணிதல் | அலங்கரித்தல் . |
| ஒப்பந்தம் | உடன்படிக்கை ; இசைவு ; ஒப்புரவு ; மத்திமம் ; கட்டுப்பாடு ; சமன் ; ஒப்பாக |
| ஒப்பம் | ஒப்பு ; ஒருதன்மை ; சமம் ; மெருகு ; அலங்காரம் ; கையொப்பம் ; கைச்சாத்து ; கட்டளை ; அழைப்புப் பத்திரம் ; அதிகாரப்பத்திரிகை . |
| ஒப்பமிடுதல் | சமமாக்குதல் ; மணி முதலியன துலக்குதல் ; அழகு செய்தல் ; கையெழுத்துப்போடுதல் ; அதிகாரப் பத்திரிகையில் ஒப்பம் வைத்தல் . |
| ஒத்திகை | ஒத்திருக்கை ; நாடகத்தை முன் ஆடிப்பார்க்கை ; உதவி . |
| ஒத்திசை | ஒத்த இசை ; விட்டிசையாதிருக்கும் பண் . |
| ஒத்திபோடுதல் | தள்ளிவைத்தல் . |
| ஒத்து | தாளவொற்று ; ஓரிசைக் குழல் , நாகசுரத்தில் சுருதிகூட்டும் ஓர் ஊதுகுழல் ; அந்தரக்கொட்டு ; ஒத்திசை ; கையணிவகை |
| ஒத்து | (வி) தாளம்போடு ; விலகு . |
| ஒத்துக்கொடுத்தல் | பொறுப்பேற்றல் ; கணக்குகட்கு வகைசொல்லுதல் . |
| ஒத்துக்கொள்ளுதல் | சம்மதித்தல் ; பிழையை ஒப்புக்கொள்ளுதல் ; கணக்கிலேற்றுக்கொள்ளுதல் ; இணங்குதல் ; ஏற்றதாதல் . |
| ஒத்துதல் | தாளம் போடுதல் ; தாக்குதல் ; ஒற்றுதல் ; விலகுதல் . |
| ஒத்துநடத்தல் | ஒரே மாதிரியாய் நடத்தல் , இசைந்தொழுகுதல் . |
| ஒத்துப்பாடுதல் | இசையப் பாடுதல் ; பிறர் சொல்லுவன எல்லாவற்றையும் உடன்பட்டு உரைத்தல் . |
| ஒத்துப்பார்த்தல் | சரிபார்த்தல் . |
| ஒத்துப்பிடித்தல் | ஒத்தூதுதல் . |
| ஒத்துப்போடுதல் | தாளம் போடுதல் . |
| ஒத்துவருதல் | இணங்கி வருதல் . |
| ஒத்துவாக்கியம் | ஒத்த சொற்றொடர் , சொல்லிலாயினும் பொருளிலாயினும் ஒத்திருக்கும் வேறு சொற்றொடர் . |
| ஒத்துவாழ்தல் | மனமொத்து வசித்தல் . |
| ஒத்துழைக்கை | பலர்கூடி மனமொத்து வினை செய்தல் . |
| ஒத்துழைத்தல் | பலர்கூடி மனமொத்து வினை செய்தல் . |
| ஒத்துழைப்பு | பலர்கூடி மனமொத்து வினை செய்தல் . |
| ஒத்துழையாதார் | பிற கொள்கையாரோடு இணங்கி நடவாதவர் . |
| ஒத்துழையாமை | பிற கொள்கையாரோடு இணங்கி நடவாமை . |
| ஒத்தெழுத்திடுதல் | யாவரும் மனமொத்து கையெழுத்திடுதல் . |
| ஒதளை | காசுக்கடடி , ஒரு மருந்து |
| ஒதி | ஒதியமரம் . |
| ஒதிமரம் | ஒதியமரம் . |
| ஒதுக்கம் | மறைவிடம் ; தனிமை ; பதுங்குகை ; பின்னிடுகை ; நடை ; ஒழுக்கம் ; சாவடி ; மகளிர் ; பூப்பு ; ஓர் அபசுரம் , தாழ்மை ; இருப்பிடம் . |
| ஒதுக்கல் | ஒதுங்கச்செய்தல் கணக்கு வழக்குத் தீர்த்தல் ; நீக்கல் ; எழுச்சி . |
| ஒதுக்கிடம் | ஒதுங்கும் இடம் , மறைவிடம் ; புகலிடம் , அண்டி வாழுமிடம் |
| ஒதுக்கிப்போடுதல் | தீர்த்துவிடுதல் ; ஓரமைப்பிலிருந்து நீக்கிவிடுதல் ; விசாரணையைத் தள்ளிவைத்தல் ; சொத்தை மறைத்து வைத்தல் . |
| ஒதுக்கு | மறைப்பு ; விலகியிருப்பது ; ஒண்டியிருத்தல் ; புகலிடம் ; நடை |
| ஒதுக்குக்கடல் | குடாக்கடல் ; இயற்கையில் அமைந்த துறைமுகம் . |
| ஒதுக்குதல் | ஒதுங்கச் செய்தல் ; விலக்குதல் ; புடவை முதலியன ஒதுக்குதல் ; தீர்த்தல் ; தனியாகச் செய்தல் ; மறைத்தல் ; காத்தல் ; சேர்த்தல் ; கொல்லுதல் . |
| ஒதுக்குப்பச்சை | புழுங்கலில் வேகாத நெல் . |
| ஒதுக்குப்புறம் | ஒதுங்கும் வெளியிடம் , மறைவு ; தனித்த இடம் . |
| ஒதுக்குப்பொதுக்குப்பண்ணுதல் | ஒரு பொருளை மோசஞ்செய்தல் ; ஒன்றை மறைத்துவைத்தல் |
| ஒதுங்குதல் | விலகுதல் ; கரையிற் சார்தல் ; பின்னடைதல் ; சரணம் புகுதல் ,அடைக்கலம் புகுதல் ; பதுங்கல் ; சாதல் ; நடத்தல் ; ஒடுங்குதல் ; வறுமைப்படுத்தல் ; தீர்தல் |
| ஒதுப்புறம் | காண்க : ஒதுக்குப்புறம் . |
| ஒப்ப | ஓர் உவமவுருபு , போல . |
| ஒப்பக்கதிர் | கம்மக் கருவிகளுள் ஒன்று , பணியை ஒப்பனை செய்யும் கருவி ; அணிகலன்களை மெருகிடும் கருவி . |
| ஒப்பங்கூறு | பாகப்பத்திரம் . |
| ஒப்பங்கொடுத்தல் | அழுத்துதல் ; கட்டளை கொடுத்தல் . |
| ஒப்படி | ஓரிருக்கை ; அறுவடை ; ஒருவகைக் கூட்டு நிதி ; |
| ஒத்தாசை | உதவி . |
| ஒத்தாப்பு | ஒதுக்கு , மறைவு ; குடில் . |
| ஒத்தாழிசை | கலிப்பாவின்வகை |
| ஒத்திக்கை | ஒத்திருக்கை ; நாடகத்தை முன் ஆடிப்பார்க்கை ; உதவி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 220 | 221 | 222 | 223 | 224 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒத்தாசை முதல் - ஒப்பமிடுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், செய்தல், மனமொத்து, உதவி, வினை, பலர்கூடி, இணங்கி, மறைவிடம், தீர்த்தல், ஒதியமரம், ஒதுங்கும், கொள்கையாரோடு, இடம், மறைவு, புகுதல், கருவி, ஒதுக்குப்புறம், ஒதுக்குதல், புகலிடம், ஒதுக்கு, சொற்றொடர், நடத்தல், ஒத்திருக்கை, நாடகத்தை, முன், வைத்தல், முதலியன, ஒப்பம், கட்டளை, ஆடிப்பார்க்கை, ஒத்திசை, போடுதல், விலகுதல், தாளம், ஒத்து, ஒத்த, தள்ளிவைத்தல், ஒன்று

