தமிழ் - தமிழ் அகரமுதலி - ஒட்டர் முதல் - ஒட்டுவிடுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஒட்டுக்குடி | ஒதுக்குக் குடி , பிறரை அண்டியிருக்குங் குடி . |
| ஒட்டுக்குடுமி | உச்சிக் சிறுகுடுமி . |
| ஒட்டுக்கும் | முழுதும் . |
| ஒட்டுக்கேட்டல் | காண்க : ஒற்றுக்கேட்டல் . |
| ஒட்டுக்கொடுத்தல் | அணுக இடங்கொடுத்தல் ; கேட்டது கொடுத்தல் ; உறுதிபண்ணித் தருதல் . |
| ஒட்டுச்சல்லடம் | குறுங்காற் சட்டை . |
| ஒட்டுச்செடி | ஒட்டொட்டிச் செடி , ஒட்டுக்கட்டி உண்டாக்கும் செடி . |
| ஒட்டுடந்தை | ஒட்டுப்பற்று ; சிறுதொடர்பு ; தூரவுறவு . |
| ஒட்டுத்தரவு | சுற்றறிக்கை . |
| ஒட்டுத்திண்ணை | சிறு திண்ணை , வீட்டைச் சார்ந்த சிறு திண்ணை ; மிகச் சிறிய தெருத் திண்ணை . |
| ஒட்டுத்துணி | ஒட்டு வைத்துத் தைக்கப்படும் துணித்துண்டு . |
| ஒட்டுத்துத்தி | துத்திப்பூண்டுவகை ; செடிவகை . |
| ஒட்டுத்தையல் | ஒட்டுத் துணியிட்டுத் தைக்கும் தையல் . |
| ஒட்டுதல் | ஒட்டவைத்தல் ; பொருத்துதல் ; சார்தல் ; பந்தயம் கட்டுதல் ; துணிதல் ; கிட்டுதல் ; கூட்டுதல் ; இணைத்தல் ; தாக்குதல் ; உடன்படுதல் ; ஆணையிடுதல் ; நட்பாக்குதல் ; வஞ்சினங்கூறல் ; பதுங்கி நிற்றல் ; அடை கொடுத்தல் ; சுருங்குதல் ; வற்றுதல் . |
| ஒட்டுநர் | நண்பர் , மித்திரர் . |
| ஒட்டுப்பழம் | ஒட்டுமரத்தின் பழம் . |
| ஒட்டுப்பற்று | ஒட்டுடன்பாடு ; ஆசாபாசம் ; ஒட்டுடந்தை ; ஒட்டுரிமை ; சிறு உறவு . |
| ஒட்டுப்புதவம் | இரட்டைக் கதவு . |
| ஒட்டுப்புல் | சார்ந்த பொருள்களின்மேல் தொற்றிக்கொள்ளும் புல்வகை . |
| ஒட்டுப்புழு | புறாமுட்டி என்னும் செடிவகை . |
| ஒட்டுப்பொறுக்குதல் | சிந்தினவற்றைத் திரட்டுதல் . |
| ஒட்டுப்போடுதல் | துண்டு வைத்து இணைத்தல் ; சமயம் பார்த்தல் . |
| ஒட்டுமயிர் | குடுமியுடன் கூடாத மயிர் , காண்க : இடுமயிர் . |
| ஒட்டுமொத்தம் | முழுமொத்தம் , முழுமையும் . |
| ஒட்டுரிமை | ஒட்டுடன்பாடு , உடந்தை , சிறு தொடர்பு ; நட்பு . |
| ஒட்டுவட்டில் | ஆராதனை வட்டில் . |
| ஒட்டுவாரொட்டி | ஒட்டுநோய் , தொற்றுநோய் . |
| ஒட்டுவிடுதல் | பொருத்து நீங்குதல் ; பற்று விடுதல் . |
| ஒட்டர் | ஒட்ட நாட்டார் ; மண்வேலை செய்வோர் . |
| ஒட்டரம் | ஒரு நாடு , ஒரிசா நாட்டின் பழைய பெயர் . |
| ஒட்டல் | ஒட்டுதல் ; ஒன்றுசேர்த்தல் ; உடன்பாடு ; தாக்குதல் ; கிடைத்தல் ; வைத்தல் ; குறுகல் ; வற்றல் ; பந்தயம் ; உள்ளொடுங்குகை . |
| ஒட்டலன் | உடன்பாடில்லாதவன் ; பகைவன் ; மெலிந்தவன் . |
| ஒட்டற்காது | சுருங்கிய செவி ; ஒட்டவைத்த காது . |
| ஒட்டன் | மண்வேலை முதலியன செய்யும் ஒருவகைச் சாதியான் ; ஒருவகை நெல் . |
| ஒட்டாக்கொற்றி | கன்றை அணுகவிடாத பசு ; அன்பில்லாதவள் . |
| ஒட்டம்பாரை | காண்க : ஒட்டகப்பாரை . |
| ஒட்டார் | பகைவர் . |
| ஒட்டாரங்காட்டுதல் | பிடிவாதம் பண்ணுதல் . |
| ஒட்டாரம் | பிடிவாதம் , முரட்டுத்தனம் . |
| ஒட்டி | ஒட்டி நிற்கும் பொருள் ; ஒட்டொட்டிப் பூண்டு ; ஒரு கடல்மீன்வகை . |
| ஒட்டிக்கிரட்டி | ஒன்றுக்கு இரண்டு பங்கு . |
| ஒட்டிக்கொடுத்தல் | உறுதிபண்ணித் தருதல் . |
| ஒட்டிடுதல் | பந்தயம் போடுதல் ; சத்தியஞ் செய்தல் ; ஆணையிடுதல் . |
| ஒட்டியக்கரு | சூனிய வித்தை . |
| ஒட்டியத்தோட்டி | குப்பை வாருவோன் . |
| ஒட்டியம் | ஒரு மந்திர வித்தை ; ஒரு நாடு ; ஒட்டர மொழி ; ஒரு மாந்திரிக நூல் . |
| ஒட்டியமேளம் | ஒட்டார் இசைக்கும் ஒருவகை வாத்தியம் . |
| ஒட்டியன் | ஒட்டிய நாட்டான் ; ஒட்டரநாட்டு அரசன் . |
| ஒட்டியாணம் | யோகப்பட்டை ; மாதர் இடையணிகளுள் ஒன்று . |
| ஒட்டியாதேவி | ஒட்டியக் காளி ; சூனியக்காரர் வழிபடும் தேவதை . |
| ஒட்டிரட்டி | காண்க : ஒட்டிக்கிரட்டி . |
| ஒட்டினர் | நண்பர் . |
| ஒட்டு | இணைக்கப்பட்டது ; இணைப்பு ; சார்பு ; நட்பு ; மரப்பட்டை ; மரவொட்டு ; ஓரம் ; பறவை பிடிக்கும் கண்ணி ; ஒட்டுக்கடுக்கன் ; ஒட்டுத்திண்ணை ; படை வகுப்பு ; அற்பம் ; நற்சமயம் ; சூள் ; துணை ; இகலாட்டம் ; ஓரணி . |
| ஒட்டுக்கடுக்கன் | சிறுகடுக்கன் . |
| ஒட்டுக்கண் | இமை ஒட்டும் நோயுள்ள கண் . |
| ஒட்டுக்கணவாய் | ஒரு மீன்வகை . |
| ஒட்டுக்காய்ச்சல் | தொற்றுசுரம் ; உடம்போடு ஒட்டிய காய்ச்சல் . |
| ஒட்டுக்குஞ்சு | சிறுகுஞ்சு ; பேன்குஞ்சு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 218 | 219 | 220 | 221 | 222 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒட்டர் முதல் - ஒட்டுவிடுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சிறு, காண்க, திண்ணை, பந்தயம், ஒருவகை, ஒட்டுடன்பாடு, நாடு, மண்வேலை, நட்பு, ஒட்டுரிமை, ஒட்டார், ஒட்டிய, ஒட்டுக்கடுக்கன், வித்தை, ஒட்டிக்கிரட்டி, பிடிவாதம், ஒட்டி, நண்பர், இணைத்தல், ஒட்டுடந்தை, ஒட்டுப்பற்று, செடி, தருதல், கொடுத்தல், உறுதிபண்ணித், ஒட்டுத்திண்ணை, சார்ந்த, குடி, தாக்குதல், ஒட்டுதல், செடிவகை, ஒட்டு, ஆணையிடுதல்

