முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » ஒட்டுவித்தை முதல் - ஒத்தாங்கு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - ஒட்டுவித்தை முதல் - ஒத்தாங்கு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஒடு | ஒடுமரம் ; நிலப்பாலை ; முதுபுண் ; புடைகொண்ட புண் ; எண்ணுப் பொருளில் வரும் ஓரிடைச்சொல் ; காண்க : ஒடுக்கட்டி ; மூன்றாம் வேற்றுமையுருபு . |
| ஒடுக்கட்டி | அக்குட்புண் ; கழலைக்கட்டி . |
| ஒடுக்கத்தம்பிரான் | அணுக்கர் , சைவ மடாதிபதிக்கு உட்காரியம் பார்க்கும் தம்பிரான் . |
| ஒடுக்கம் | அடக்கம் ; குறுக்கம் ; சுருக்கம் ; புழுக்கம் ; சிறிது சிறிதாகக் குறைதல் ; நெருக்கமான இடம் ; பதுக்கம் ; மறைவிடம் ; தனியிடம் ; வழிபாடு ; முடிவு ; ஒன்றில் அடங்குகை ; இடைஞ்சல் . |
| ஒடுக்கிடம் | மறைவிடம் ; சுருக்கமான இடம் ; தனியிடம் . |
| ஒடுக்கு | அடக்கம் ; இடுக்குமூலை ; ஒடுக்கமாயிருப்பது ; நெளிவு . |
| ஒடுக்குச்சீட்டு | பணம் செலுத்தியவருக்குக் கொடுக்கும் பற்றுச்சீட்டு . |
| ஒடுக்குத்துண்டு | பணம் செலுத்தியவருக்குக் கொடுக்கும் பற்றுச்சீட்டு . |
| ஒடுக்குதல் | அடக்குதல் ; வருத்துதல் ; குறைத்தல் ; சிறுகுதல் ; செறித்தல் ; சுருங்கப் பண்ணுதல் ; உடம்பையொடுக்கல் ; இறையிறுத்தல் ; கீழ்ப்படுத்துதல் . |
| ஒடுக்குப்படி | ஒரு பழைய வரி . |
| ஒடுக்குமாடு | கொள்ளைப் பொருள் . |
| ஒடுக்குவாய் | ஒடுங்கின வாய் ; கோணல் வாய் . |
| ஒடுக்கெடுத்தல் | நெளிவெடுத்தல் . |
| ஒடுகு | ஒடுமரம் ; நிலப்பாலை . |
| ஒடுங்க | ஓர் உவமவுருபு . |
| ஒடுங்கல் | அடங்கல் ; சுருங்குதல் . |
| ஒடுங்கி | ஆமை . |
| ஒடுங்குதல் | அடங்குதல் ; குறைதல் ; சுருங்குதல் ; குவிதல் ; சோர்தல் ; கீழ்ப்படிதல் ; பதுங்கல் ; ஒதுங்குதல் ; ஒளி மங்குதல் . |
| ஒடுத்தங்குதல் | புண்ணிற் சீழ் தங்குதல் . |
| ஒடுதடங்கல் | நெளிவு , வளைவு . |
| ஒடுப்பை | நிலப்பாலை . |
| ஒடுவடக்கி | குப்பைமேனி ; திராய்மரம் ; பெருந்தும்பை . |
| ஒடுவை | ஒடுமரம் . |
| ஒடை | உடைமரம் , குடைவேலமரம் . |
| ஒண்டன் | நரி ; ஆண் நரி . |
| ஒண்டி | ஒன்றி , தனிமை ; துணையில்லாதவன்(ள்) ; ஊற்றாணி என்னும் கலப்பை உறுப்பு . |
| ஒண்டிக்கட்டை | தனிமையானவன் . |
| ஒண்டிக்காரன் | தனிமையானவன் . |
| ஒண்டிக்குடி | மற்றொரு குடும்பத்தோடு ஒட்டி வாழ்தல் , ஒட்டுக் குடித்தனம் . |
| ஒண்டுக்குடி | மற்றொரு குடும்பத்தோடு ஒட்டி வாழ்தல் , ஒட்டுக் குடித்தனம் . |
| ஒண்டியாணி | கலப்பையில் கொழுப் படிவதற்காக அடிக்கப்படும் இருப்பாணி . |
| ஒண்டுக்கேட்டல் | காண்க : ஒற்றுக்கேட்டல் . |
| ஒண்டுதல் | சார்தல் ; பதுங்குதல் ; சரண்புகுதல் ; ஒன்றுதல் . |
| ஒண்ணுதல் | இயலுதல் ; தக்கதாதல் ; கூடுதல் ; ஒளியுடைய நெற்றி . |
| ஒண்மை | விளக்கம் ; இயற்கையழகு ; நன்மை ; மிகுதி ; ஒழுங்கு ; நல்லறிவு . |
| ஒத்தணம் | காண்க : ஒற்றடம் . |
| ஒத்தது | ஒப்பானது ; தகுதியானது . |
| ஒத்தபடி | ஏற்றவாறு . |
| ஒத்தபண்புரைப்போர் | தூதர் . |
| ஒத்தமலங்கொட்டுதல் | இடக்குச் செய்தல் . |
| ஒத்தல் | நடு ; பொருத்தல் ; ஒத்துதல் ; தகுதியாதல் ; ஒற்றுமைப்படுதல் ; கேள்வியால் தெளிந்தவற்றில் மனம் ஊன்றி நிற்கை . |
| ஒத்தவழி | ஏற்றவழி , தக்கநெறி , நேர்வழி . |
| ஒத்தறுத்தல் | தாளம் போடுதல் ; தாள வரையறை செய்தல் . |
| ஒத்தன் | ஒருத்தன் . |
| ஒத்தாங்கு | ஒப்ப , ஒத்தபடி . |
| ஒட்டுவித்தை | இடத்தைவிட்டுப் பெயராது இருக்கச் செய்யும் வித்தை . |
| ஒட்டுவைத்தல் | ஆணையிடல் ; பறவைகளைப் பிடிக்க ஒட்டுப் பிசின் வைத்தல் ; கண்ணி வைத்தல் ; அகழி தோண்டுதல் . |
| ஒட்டுறவு | உரித்துறவு ; நெருங்கிய சம்பந்தம் . |
| ஒட்டை | ஒட்டகம் ; ஒட்டைச்சாண் ; பத்து விரற்கிடை ; சமானம் ; விளையாட்டில் உதவுவோன் . |
| ஒட்டைத்திருக்கை | திருக்கை மீன்வகை . |
| ஒட்டொட்டி | காண்க : ஒட்டங்காய்ப்புல் . |
| ஒட்டோலக்கம் | பெருங் கூட்டம் ; பகட்டு , இடம்பம் ; வெற்றி . |
| ஒட்பம் | அறிவு ; அழகு ; நன்மை ; மேன்மை . |
| ஒடி | கவண் ; காட்டுப்புதர் . |
| ஒடிசல் | முறிந்தது ; ஒல்லியாயிருப்பவன் (ள்) . |
| ஒடிசில் | காண்க : ஒடி . |
| ஒடித்தல் | முரித்தல் , அழித்தல் ; தகர்த்தல் ; ஒளி செய்தல் . |
| ஒடிதல் | முரிதல் ; கெடுதல் ; அழிதல் ; இடையறுதல் . |
| ஒடிபு | முறிகை ; கெடுகை ; குறைவு ; குற்றம் ; அழிவு ; தவிர்வு . |
| ஒடியல் | முறிகை ; முரிதல் ; பனங்கிழங்கின் காய்ந்த பிளவு . |
| ஒடியல்மா | பனங்கிழங்கின் மா . |
| ஒடியெறிதல் | காட்டுப்புதர்களை அழித்தல் ; மரக்கொம்பைப் பாதி குறைத்தல் ; குற்றுயிராக்கல் ; வலைவீசல் . |
| ஒடிவு | இடைமுறிகை ; இடைமுறிபட்டது . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 219 | 220 | 221 | 222 | 223 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒட்டுவித்தை முதல் - ஒத்தாங்கு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒடுமரம், செய்தல், நிலப்பாலை, ஒட்டுக், குடித்தனம், வாழ்தல், ஒட்டி, குடும்பத்தோடு, நன்மை, ஒத்தபடி, முரிதல், முறிகை, அழித்தல், வைத்தல், மற்றொரு, பனங்கிழங்கின், வாய், மறைவிடம், தனியிடம், இடம், குறைதல், ஒடுக்கட்டி, அடக்கம், நெளிவு, பணம், குறைத்தல், சுருங்குதல், பற்றுச்சீட்டு, கொடுக்கும், செலுத்தியவருக்குக், தனிமையானவன்

