முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » ஒருகாலில் நிற்றல் முதல் - ஒருபடம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - ஒருகாலில் நிற்றல் முதல் - ஒருபடம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஒருசாலைமாணாக்கர் | ஒரே பள்ளியிற் பயின்ற மாணாக்கர் . |
| ஒருசிறிது | மிகச் சிறிது , அற்பம் . |
| ஒருசிறை | ஒரு பக்கம் ; ஒரு பகுதி ; ஒதுக்கிடம் ; வேறிடம் . |
| ஒருசிறைநிலை | சொல்லப்பட்ட பொருள் ஒரு வழி நிற்க பாடல் அமைந்துள்ள முறை . |
| ஒருசீரானவன் | ஒரே தன்மையாக இருப்பவன் . |
| ஒருசேர | ஒருமிக்க . |
| ஒருசொல் | உறுதிச்சொல் ; பல சொல்லாயிருந்தும் ஒரு சொல் நீர்மைப்பட்டது |
| ஒருசொல் வாசகன் | சொன்னசொல் தவறாதவன் . |
| ஒருசொன்னீர்மை | சொற்கள் இணைந்து ஒரு பொருளே தருந்தன்மை |
| ஒருத்தல் | ஆண்விலங்கு ; யானை , எருமை , கவரி , புலி , புல்வாய் , மரை , மான் , இவற்றின் ஆண் |
| ஒருத்தன் | ஒருவன் ; ஒப்பற்றவன் . |
| ஒருத்தி | ஒரு பெண் . |
| ஒருத்து | மனவொருமைப்பாடு . |
| ஒருதரம் | ஒருமுறை , ஒரு தடவை ; ஒரேவிதம் |
| ஒருதலை | இன்றியமையாமை ; கட்டாயம் ; நிச்சயம் ; ஓரிடம் ; ஒருசார்பு ; ஒரு பக்கம் . |
| ஒருதலைக் காமம் | ஒரு பக்கமான காதல் , ஆண் பெண் இருவருள் ஒருவர் மட்டுங் கொள்ளுங் காதல் . |
| ஒருதலை துணிதல் | ஒன்றுக்கொன்று மாறுபாடான இரண்டு கொள்கைகளில் ஒன்றை ஏற்றலாகிய உத்தி . |
| ஒருதலை நோவு | ஒற்றைத் தலைவலி . |
| ஒருதலைப்படுதல் | ஒரு முடிவுபெறுதல் . |
| ஒருதலையுள்ளுதல் | அவத்தை பத்தனுள் ஒன்றாகிய இடைவிடா நினைவு . |
| ஒருதலை வழக்கு | ஒரு பக்கத்தைப்பற்றிய நியாயம் , பட்சபாதமான தீர்ப்பு . |
| ஒருதன்மை | ஒருவிதம் ; ஒப்பற்ற தன்மை ; மாறாத்தன்மை ; மாறாமை . |
| ஒருதனி | ஒப்பில்லாத தனி ; தன்னந்தனி . |
| ஒருதாரை | ஒரேநிலை ; ஒருமிக்க ; இடையீடில்லாத நீரொழுக்கு ; ஒருபக்கக் கூர்மை . |
| ஒருதிறம்பற்றுதல் | ஒருபக்கமாக இருத்தல் . |
| ஒருநாயகம் | ஒரு ஆட்சி , தனி ஆட்சி . |
| ஒருநாளைக்கொருநாள் | நாள் செல்லச் செல்ல . |
| ஒருநெறிப்படுதல் | ஒரு வழிப்படுதல் . |
| ஒருப்படுத்துதல் | ஒன்றுகூட்டுதல் ; வழிவிடுதல் ; முடிவுசெய்தல் ; உடன்படச்செய்தல் . |
| ஒருப்படுதல் | ஒருதன்மையாதல் ; ஒன்றுகூடுதல் ; துணிதல் ; முயலுதல் ; பிறர் கருத்துக்கு உடன்படுதல் ; நட்புக்கொள்ளுதல் . |
| ஒருப்பாடு | ஒருமைப்படுகை ; ஒருதன்மையாதல் ; மனமொன்றுபடுகை ; முயற்சி ; மனத்திண்மை ; ஒன்றிநிற்கை ; உடன்பாடு . |
| ஒருபடம் | இடுதிரை , படுதா , மறைப்பு . |
| ஒருகாலில் நிற்றல் | உறுதியாயிருத்தல் . |
| ஒருகாலிலி | குபேரன் ; சனி |
| ஒருகாலும் | எந்தக் காலத்திலும் . |
| ஒருகிடை | கிடந்த கிடை , படுத்த படுக்கை ; ஒரு பக்கமாய் சாய்ந்து படுக்கை |
| ஒருகுடி | தாயத்தார் . |
| ஒருகுழையவன் | பலராமன் |
| ஒருகுறி | ஒருமுறை |
| ஒருகூட்டு | ஒருசேர்க்கை , ஒருசேர்மானம் , ஒன்றிப்பு . |
| ஒருகை | ஒரு கட்சி ; ஒரு பக்கம் ; ஒற்றுமைப்பட்ட குழு . |
| ஒருகை பார்த்தல் | வெல்ல முயலுதல் . |
| ஒருகையாயிருத்தல் | எதிர்க்கட்சிக்குப் பகைமையாய் ஒன்றுபட்டிருத்தல் . |
| ஒருகோலுடையார் | ஒரு கோலை ஏந்திய துறவியார் . |
| ஒருங்கியல் அணி | புணர்நிலையணி ; வினை , பண்பு என்பவை காரணமாக இரு பொருளுக்கு முடிக்கும் சொல் ஒன்றாகப் புணர்ந்து நிற்கச் சொல்லும் அணி |
| ஒருங்கு | முழுமை ; முழுதும் ; எல்லாம் ; எல்லாங்கூடி நிற்கை ; அடக்கம் ; ஒரு காலத்தில் ; ஒருசேர ; ஒருதன்மை ; அழிவு . |
| ஒருங்குதல் | ஒருபடியாதல் ; ஒன்றுகூடுதல் ; ஒருவழிப்படல் ; ஒதுங்குதல் ; ஒடுங்குதல் ; அழிதல் . |
| ஒருங்கே | முழுதும் ; ஒருசேர . |
| ஒருச்சரித்தல் | ஒரு பக்கமாய்ச் சாய்த்தல் ; ஒரு பக்கமாய்ச் சாய்தல் . |
| ஒருச்சாய்த்தல் | ஒரு பக்கமாய்ச் சாய்த்தல் ; ஒரு பக்கமாய்ச் சாயப்பண்ணல் . |
| ஒருசந்தி | ஒருவேளை ; ஒரு பொழுதுண்ணல் , ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் உணவு கொள்ளும் வழக்கம் . |
| ஒருசாய்வு | ஒருபக்கம் ; ஒருமிக்க ; இடைவிடாமை . |
| ஒருசாயல் | உரு ஒப்பு , வடிவால் ஒத்திருத்தல் . |
| ஒருசார் | ஒரு பக்கம் , பட்சபாதம் ; ஒரு கட்சி |
| ஒருசாராசிரியர் | ஆசிரியருள் ஒரு கொள்கையினர் . |
| ஒருசாரார் | ஒரு புடையார் , ஒருபக்கத்தவர் ; சிலர் . |
| ஒருசாலுழுதல் | ஒரு முறை உழுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 222 | 223 | 224 | 225 | 226 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒருகாலில் நிற்றல் முதல் - ஒருபடம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒருதலை, பக்கம், பக்கமாய்ச், ஒருமுறை, ஒருமிக்க, சொல், ஒருசேர, ஒருகை, முயலுதல், படுக்கை, முழுதும், சாய்த்தல், ஒன்றுகூடுதல், கட்சி, துணிதல், ஒருசொல், முறை, பெண், காதல், ஆட்சி, ஒருதன்மை, ஒருதன்மையாதல்

