முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » எரிபொழுது முதல் - எருமைத் தக்காளி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - எரிபொழுது முதல் - எருமைத் தக்காளி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| எருத்துப்பூட்டு | ஏர்ப்பூட்டு ; நல்ல நாளில் ஏர் பூட்டி உழத் தொடங்குதல் . |
| எருத்துமாடு | எருது , காளை ; பொதிமாடு . |
| எருத்துவாலன் | நீண்ட வாலுள்ள ஒரு குருவிவகை ; கோரைக்கிழங்கு . |
| எருதடித்தல் | உழுதல் ; சூடடித்தல் , நெற்கதிரைக் கடாவிட்டுத் துவைத்தல் . |
| எருது | இடபம் , காளைமாடு ; இடபராசி . |
| எருதுகட்டி | சல்லிக்கட்டில் காளையை மடக்குவோன் . |
| எருதுகட்டு | சல்லிக்கட்டு . |
| எருதுமறித்தல் | பசுவுடனே காளை சேர்த்தல் , எருது பொலிதல் . |
| எருந்தி | இப்பி , கிளிஞ்சில் . |
| எருந்து | உரல் ; காண்க : எருந்தி . |
| எருமணம் | செங்குவளை ; சாணி நாற்றம் . |
| எருமன்றம் | எருக்குவித்து வைக்கும் இடம் ; இடையர் சேரியிலுள்ள அம்பலம் . |
| எருமுட்டை | காய்ந்த சாணம் , வறட்டி . |
| எருமை | எருமைமாடு , காரான் ; எருமைமறம் ; யமன் . |
| எருமைக்கடா | ஆண் எருமை . |
| எருமைக்கடாரி | பெண் எருமை . |
| எருமைக்கப்பல் | புகையிலைவகை . |
| எருமைக் கற்றாழை | ஒருவகைக் கற்றாழை . |
| எருமைக் காஞ்சொறி | ஒருவகைக் காஞ்சொறிப்பூடு . |
| எருமைக்கொற்றான் | ஒருவகைக் கொற்றான் கொடி . |
| எருமைச்சுறா | ஒரு மீன்வகை . |
| எருமைத் தக்காளி | சீமைத் தக்காளி , பெருந் தக்காளி . |
| எரிபொழுது | மாலைவேளை ; செவ்வானப் பொழுது . |
| எரிமணி | ஒளியுள்ள மணி , மாணிக்கம் . |
| எரிமருந்து | எரித்தெடுக்கும் மருந்து ; உறைப்பான மருந்து ; வெடிமருந்து |
| எரிமலர் | முருக்கமலர் ; செந்தாமரை . |
| எரிமலை | நெருப்பைக் கக்கும் மலை . |
| எரிமுகி | சேங்கொட்டை மரம் . |
| எரியல் | எரிவு ; ஒளிவிடுகை ; எரிந்தது . |
| எரியவிட்ட மருந்து | நீற்றின பற்பம் . |
| எரியவிழித்தல் | சினத்தோடு நோக்குதல் . |
| எரியாடி | ஊழித்தீயில் நின்று ஆடுவோன் , அழலைக் கையிலேந்தி ஆடுபவன் , சிவன் . |
| எரியூட்டுதல் | தீக்கொளுத்துதல் , நெருப்புக்கு இரையாக்குதல் ; வேள்வித் தீ வளர்த்து வழிபடல் . |
| எரியோம்புதல் | வேள்வி செய்தல் . |
| எரியோன் | அக்கினிதேவன் , தீக்கடவுள் . |
| எரிவட்டம் | காண்க : எரிபரல்வட்டம் . |
| எரிவண்டு | எரிச்சலுண்டாக்கும் வண்டு , பட்ட இடம் எரியும் வண்டு ; கண்ணில் அடிக்கும் வண்டு . |
| எரிவந்தம் | எரிச்சல் ; சினம் . |
| எரிவளர்ப்போர் | வேள்வித்தீ வளர்ப்போர் . |
| எரிவனம் | சுடுகாடு |
| எரிவிரியன் | எரிச்சலை உண்டாக்கும் விரியன் பாம்புவகை . |
| எரிவிழித்தல் | தீக்கண்ணாற் பார்த்தல் , சினந்து நோக்குதல் . |
| எரிவிளக்குறுத்தல் | நடைவிளக்கெரித்துத் தண்டித்தல் , குற்றவாளியின் தலைமேல் எரியும் விளக்கை வைத்து நகரைச் சுற்றிவரச் செய்யும் தண்டனை . |
| எரிவு | எரிகை , உடலெரிச்சல் ; பொறாமை ; சினம் . |
| எரு | உரம் ; சாணி ; வறட்டி ; பசளை ; மலம் . |
| எருக்கட்டுதல் | பயிரிடும் நிலத்தில் எருவிடும் பொருட்டு ஆடு மாடு முதலியவற்றைக் கிடைவைத்தல் . |
| எருக்கட்டு | கிடைவைத்த கொல்லை . |
| எருக்கட்டுதல் | கிடைவைத்தல் ; சாணம் சேர்த்தல் . |
| எருக்கம் | எருக்கஞ்செடி ; எருக்கம்பூமாலை . |
| எருக்கழித்துக் கொடுத்தல் | வைக்கோலில் சாணியிட்டுக் கொடுத்து மாட்டின் விற்பனையை உறுதிப்படுத்துதல் . |
| எருக்களம் | எருவிருக்குமிடம் , எருச் சேமிக்கும் இடம் . |
| எருக்கு | எருக்கஞ்செடி ; வெள்ளெருக்கு ; துன்பம் . |
| எருக்குதல் | வருத்துதல் ; கொல்லுதல் ; வெட்டுதல் ; தாக்குதல் , அடித்தல் ; அழித்தல் ; சுமத்துதல் ; தாக்கி ஒலியெழச் ; செய்தல் . |
| எருக்குரல் | தாக்குதலால் ஏற்பாடும் ஒலி . |
| எருக்கொடுத்தல் | காண்க : எருக்கழித்துக் கொடுத்தல் . |
| எருச்சாட்டி | எருவிட்ட நிலம் . |
| எருத்தடி | செய்யுளின் ஈற்றயலடி . |
| எருத்தம் | கழுத்து ; பிடர் ; தோள் , கலிப்பாவின் உறுப்புகளுள் ஒன்றாகிய தரவு ; செய்யுளின் ஈற்றயலடி . |
| எருத்தன் | காளைபோன்ற வலிமையுடையவன் . |
| எருத்து | கழுத்து ; தரவு என்னும் கலிப்பாவின் முதலுறுப்பு ; செய்யுளின் ஈற்றயலடி . |
| எருத்துக்காளை | இளவெருது . |
| எருத்துத்திமில் | மாட்டுக்கொண்டை , விடையின் முரிப்பு ; மாட்டின் முசுப்பு . |
| எருத்துப்புரை | மாட்டுக்கொட்டில் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 197 | 198 | 199 | 200 | 201 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எரிபொழுது முதல் - எருமைத் தக்காளி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், தக்காளி, ஒருவகைக், மருந்து, எருது, வண்டு, செய்யுளின், எருமை, இடம், ஈற்றயலடி, காண்க, எருக்கஞ்செடி, கிடைவைத்தல், தரவு, எருக்கட்டுதல், கலிப்பாவின், கழுத்து, எருக்கழித்துக், சினம், மாட்டின், கொடுத்தல், எரிவு, சாணி, எருந்தி, சேர்த்தல், காளை, சாணம், வறட்டி, செய்தல், நோக்குதல், கற்றாழை, எருமைக், எரியும்

