தமிழ் - தமிழ் அகரமுதலி - எமி முதல் - எரிபொத்துதல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
எரிப்பு | கார்ப்புச் சுவை ; பொறாமை ; நெஞ்செரிப்பு ; எரிக்கை . |
எரிப்புறம் | நரகம் . |
எரிப்பூ | எரிபோலும் நிறமுள்ள பூ . |
எரிபடுவன் | பிளவை நோய்வகை . |
எரிபந்தம் | தீவட்டி ; உடலெரிச்சல் . |
எரிபரல்வட்டம் | ஏழு நரகத்துள் ஒன்று . |
எரிபிடாரி | எரிச்சலுடையவள் ; உக்கிரமாகாளி , கொற்றவை . |
எரிபுழு | தொட்டால் எரிச்சலுண்டாக்கும் புழு கம்பளிப்பூச்சி . |
எரிபொத்துதல் | நெருப்பு மூட்டுதல் . |
எய்தல் | அடைதல் , சேர்தல் ; அம்பைச் செலுத்தல் ; நிகழ்தல் ; சம்பவித்தல் ; பெறுதல் . |
எய்துதல் | அணுகுதல் ; அடைதல் , சேர்தல் ; பணிதல் ; நீங்குதல் ; பொருந்துதல் ; நிகழ்தல் ; உண்டாதல் ; போதியதாதல் ; பயன் நுகர்தல் . |
எய்ப்பன்றி | முள்ளம்பன்றி . |
எய்ப்பாடி | வேடர் ஊர் . |
எய்ப்பினில்வைப்பு | கேட்டில் உதவும் பொருள் , இளைத்த காலத்தில் உதவுதற்காகச் சேர்த்து வைக்கும் பொருள் சேமநிதி ; தான் தளர்ந்தும் பிறரைத் தாங்குவது . |
எய்ப்பு | இளைப்பு தளர்ச்சி , ஒடுக்கநிலை ; வறுமைக்காலம் . |
எய்ப்போத்து | ஆண் முள்ளம்பன்றி . |
எய்ம்மான் | காண்க : எய்ப்பன்றி . |
எய்யாமை | அறியாமை . |
எயில் | மதில் ; ஊர் ; நகரம் . |
எயில்காத்தல் | அகத்தோன் உள்ளிருந்து கோட்டையைக் காத்து நிற்பக் கூறும் புறத்துறை . |
எயிற்றம்பு | அலகம்பு . |
எயிற்றி | எயினச்சாதிப் பெண் , பாலைநிலப் பெண் , வேட்டுவப் பெண் . |
எயிற்றுவலி | பல்ல¦று வளர்தலால் உண்டாகும் நோவு . |
எயிறதைப்பு | பல்லின் அடிவீக்கம் . |
எயிறலைத்தல் | பற்கடிப்பு , பல்லைக் கடித்தல் ; சினத்தால் பல்லைக் கடித்தல் . |
எயிறிலி | சூரியன் . |
எயிறு | பல் ; பல்லின் விளிம்பு ; யானைக்கோடு ; பன்றிக்கொம்பு ; கணு . |
எயிறுதின்றல் | பற்கடித்தல் ; சினத்தால் பல்லைக் கடித்தல் . |
எயிறுதின்னுதல் | பற்கடித்தல் ; சினத்தால் பல்லைக் கடித்தல் . |
எயின் | வேடச்சாதி , பாலைநில மக்கள் , மறவர் . |
எயின்கடன் | பலிக்கடன் . |
எயின்சேரி | வேடரது ஊர் . |
எயினன் | வேடன் . |
எரங்காடு | பாழ்நிலம் ; பருத்தி விளைதற்குரிய செழித்த புன்செய் நிலம் . |
எரி | நெருப்பு ; வேள்வித் தீ ; தீக்கடைகோல் ; ஒளி ; அக்கினிதேவன் ; நரகம் ; கார்த்திகை ; புனர்பூசம் ; கந்தகம் ; இடபராசி ; கேட்டை ; வால்மீன்வகை . |
எரி | (வி) எரிஎன் ஏவல் ; ஒளிர் ; அழல் ; பொறாமைகொள் ; சினங்கொள் ; வயிறெரி . |
எரிக்கொடி | நெருப்பின் கொழுந்து ; முடக்கொற்றான் ; சோதிக்கொடி . |
எரிகதிர் | சுடுகதிர் ; கதிரவன் , சூரியன் . |
எரிகரும்பு | விறகு . |
எரிகறி | சுண்டற்கறி . |
எரிகாசு | காசுக்கட்டி . |
எரிகாலி | காட்டாமணக்கு . |
எரிகுஞ்சி | செம்மயிர் . |
எரிகுட்டம் | குட்டநோய்வகை . |
எரிகுடல் | எரிவயிறு , மிகு பசி . |
எரிகுடலன் | மிகுந்த பசியுடையவன் . |
எரிகும்பவாயு | வயிற்றுநோய்வகை . |
எரிகுன்மம் | குன்மநோய்வகை . |
எரிகொள்ளி | கொள்ளிக்கட்டை , கடைக்கொள்ளி . |
எரிச்சல் | எரிவு ; அழற்சி ; உறைப்பு ; சினம் ; பொறாமை ; பெருங்காயம் ; வெறுப்பு . |
எரிசனம் | நரகர் , நிரயத்திருப்போர் . |
எரிசாலை | மருந்துப் பூண்டுவகை . |
எரிசுடர் | எரியும் நெருப்பு ; மிக்க ஒளி ; செவ்வொளி ; தீ ; விளக்கு . |
எரித்தல் | தீயில் வேகச்செய்தல் ; அழற்றுதல் ; செரிக்கச் செய்தல் ; விளக்கை எரியச்செய்தல் ; மருந்து முதலியன புடமிடுதல் . |
எரிதல் | சுடருண்டாதல் ; ஒளிவிடுதல் ; எரிச்சலுண்டாதல் ; பொறாமை கொள்ளுதல் ; சினத்தல் ; துயரமடைதல் . |
எரிதுரும்பு | காண்க : எரிகரும்பு . |
எரிதூவுதல் | தீப்பற்றுதல் . |
எரிதைலம் | கடைச்சரக்கிட்டுக் காய்ச்சிய எண்ணெய் . |
எரிந்துவிழுதல் | சினமாகப் பேசுதல் ; மூர்க்கங் காட்டுதல் . |
எரிநகை | வெட்சிமலர் . |
எரிநரகம் | காண்க : எரிபரல்வட்டம் . |
எமி | தனிமை ; கூடியிருப்போன்(ள்) . |
எமுனை | யமுனையாறு . |
எய் | முள்ளம்பன்றி ; அம்பு ; ஓர் உவமவுருபு . |
எய் | (வி) எய்என் ஏவல் , அம்பு செலுத்து . |
எய்த்தல் | இளைத்தல் ; குறைவடைதல் ; மேய் வருந்துதல் ; ஓய்தல் ; வறுமையடைதல் ; காலூன்றி நிற்கும்படி நீர் ஆழமில்லாது இருத்தல் ; அறிதல் . |
எய்த | நன்றாக ; நிரம்ப . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 196 | 197 | 198 | 199 | 200 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எமி முதல் - எரிபொத்துதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பல்லைக், கடித்தல், பொறாமை, பெண், சினத்தால், முள்ளம்பன்றி, காண்க, நெருப்பு, பற்கடித்தல், சூரியன், ஏவல், எரிகரும்பு, அம்பு, நரகம், எரிபரல்வட்டம், சேர்தல், பொருள், அடைதல், பல்லின், எய்ப்பன்றி, நிகழ்தல்