தமிழ் - தமிழ் அகரமுதலி - எதிரேற்றம் முதல் - எமன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| எந்திரம் | சூத்திரப்பொறி ; மதிலுறுப்பு ; கரும்பு ஆலை ; தேர்ச்சக்கரம் ; குயவன் திரிகை ; பஞ்சு கொட்டும் எந்திரம் ; செக்கு ; தீக்கடைகோல் ; மந்திரச் சக்கரம் . |
| எந்திரவாவி | எந்திரக் கிணறு , நீரை நிரப்பவும் வடிக்கவும் உரிய பொறியையுடைய நீர்நிலை . |
| எந்திரவில் | தானே எய்யும் விற்பொறி . |
| எந்திரவூசல் | பிறராட்டாத நிலையில் தானே ஆடும் பொறியமைந்த ஊசல் . |
| எந்திரவூர்தி | சூத்திரத்தால் தானே இயங்கும் ஊர்தி . |
| எந்திரவெழினி | பொறியினால் எழவும் விழவும் கூடியபடி அமைக்கப்பட்ட திரை . |
| எந்திரன் | தேர் . |
| எந்திரி | பாவையை ஆட்டுவிப்போன் . |
| எந்து | என்ன ; எப்படி ; ஏன் . |
| எந்தை | எம் தந்தை ; எம் தலைவன் ; எம் தமையன் . |
| எந்தைபெயரன் | எம் தந்தையின் பெயர் தாங்கிய என் மகன் . |
| எப்படி | எவ்வண்ணம் , எவ்விதம் , எவ்வாறு . |
| எப்பொழுது | எக்காலம் , எப்பபோது . |
| எப்பொழுதும் | எக்காலமும் , எல்லாக் காலமும் . |
| எப்போது | காண்க : எப்பொழுது . |
| எப்போதும் | காண்க : எப்பொழுதும் . |
| எப்போழ்து | காண்க : எப்பொழுது . |
| எப்போழ்தும் | காண்க : எப்பொழுதும் . |
| எம் | ' யாம் ' என்பது பொருள் வேற்றுமைப்பட வரும்பொழுது திரியும் நிலை ; எம்முடைய ; உளப்பாட்டுத் தன்மைப் பன்மை விகுதி . |
| எம்பர் | எவ்விடம் . |
| எம்பரும் | எவ்விடத்தும் . |
| எம்பி | எமக்குப்பின் பிறந்தவன் , எம் தம்பி , இளையவன் . |
| எம்பிராட்டி | எங்கள் தலைவி . |
| எம்பிரான் | எங்கள் தலைவன் ; எங்கள் தேவன் ; கடவுள் . |
| எம்புகம் | நிலக்கடம்பு . |
| எம்பெருமான் | காண்க : எம்பிரான் . |
| எம்பெருமான்வெட்டு | ஒரு பழைய நாணயவகை . |
| எம்பெருமானார் | இராமானுசர் . |
| எம்மர் | எம்முடையோர் , எமது சுற்றத்தார் . |
| எம்மவர் | எம்முடையோர் , எமது சுற்றத்தார் . |
| எம்மனை | எம் தாய் , தாய் |
| எம்மனோர் | எம்மை ஒத்தவர் , எம்மோடொத்தவர் ; நாங்கள் . |
| எம்மான் | எம் தந்தை ; எம் கடவுள் : எம் மகன் . |
| எம்முன் | எம் தமையன் . |
| எம்மை | எப்பிறப்பு ; எம் தலைவன் ; எவ்வுலகு . |
| எம்மையோர் | காண்க : எம்மவர் . |
| எம்மோன் | எம் தலைவன் . |
| எமகணம் | எமனுடைய கூட்டத்தார் . |
| எமகாதகன் | பெருந்திறல் படைத்தவன் . |
| எமகிங்கரன் | எமனுடைய ஏவல் செய்வோன் , எமனுடைய வேலையாள் . |
| எமதங்கி | சமதக்கினி , பரசுராமனின் தந்தை . |
| எமதருமன் | யமன் . |
| எமதூதன் | யமனுடைய தூதன் ; நல்லபாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று . |
| எமதூதி | நாகப்பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று . |
| எமநாகம் | ஊமத்தை ஓமம் . |
| எமநாமம் | ஊமத்தை ஓமம் . |
| எமபாசம் | யமனுடைய கயிறு . |
| எம்புரம் | யமனுடைய தலைநகர் , வைவச்சுத நகரம் . |
| எமர் | எம்மவர் ; எம்போலியர் . |
| எமரங்கள் | எம்மவர்கள் , எம் சுற்றத்தவர்கள் . |
| எமரன் | எம்மைச் சேர்ந்தவன் ; எமன் . |
| எமராசன் | யமன் . |
| எமன் | யமன் , எம்முடையன் , சுற்றத்தான் . |
| எதிரேற்றம் | மாறாக எதிரே போதல் ; போருக்கு எதிரேறிச் செல்லுகை . |
| எதிரேற்றல் | எதிர்கொள்ளுதல் , எதிர்கொண்டு வரவேற்றல் ; பிறன்மேல் வருவதைத் தானேற்றல் ; எதிர்த்தல் ; எதிரேவல் ; தடுத்தல் . |
| எதிரேறு | வலிமை ; எதிர்கொள்ளல் . |
| எதிரொலி | மாற்றொலி . |
| எதிரொலித்தல் | பிரதித்தொனி செய்தல் , எதிரொலி காணல் . |
| எது | யாது . |
| எதுகுலகாம்போதி | ஒரு பண்வகை . |
| எதுகுலம் | யதுகுலம் , யதுவின் மரபுவழி . |
| எதுகை | எதுகைத்தொடை , செய்யுளடிகளிலாயினும் சீர்களிலாயினும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாமெழுத்து ஒன்றிவருவது ; பொருத்தம் . |
| எதுகைத்தொடை | எதுகைத்தொடை , செய்யுளடிகளிலாயினும் சீர்களிலாயினும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாமெழுத்து ஒன்றிவருவது ; பொருத்தம் . |
| எதோள் | எவ்விடம் . |
| எதோளி | எவ்விடம் . |
| எந்த | வினா , வினாப் பொருளில் வரும் பெயர்ச் சொல்லுக்கு முன்வரும் ஓர் இடைச்சொல் . |
| எந்திரக்கிணறு | நீரை நிறைத்தற்கும் வடித்தற்குமுரிய பொறியையுடைய கிணறு . |
| எந்திரகாரன் | சூத்திரக்காரன் . |
| எந்திரநாழிகை | நீர் வீசும் ஒருவகைக் கருவி . |
| எந்திரப்பொருப்பு | பல்வகைப் பொறிகள் அமைக்கப்பட்ட செய்குன்று . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 195 | 196 | 197 | 198 | 199 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எதிரேற்றம் முதல் - எமன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தலைவன், எவ்விடம், எப்பொழுதும், எங்கள், எமனுடைய, எதுகைத்தொடை, யமனுடைய, யமன், எப்பொழுது, எம்மவர், தானே, தந்தை, எமன், எதிரொலி, கிணறு, ஓமம், ஒன்று, ஊமத்தை, செய்யுளடிகளிலாயினும், சீர்களிலாயினும், ஒன்றிவருவது, பொருத்தம், இரண்டாமெழுத்து, நிற்க, முதலெழுத்து, அளவொத்து, பற்களுள், நீரை, கடவுள், எம்முடையோர், எம்பிரான், அமைக்கப்பட்ட, தமையன், எப்படி, எமது, சுற்றத்தார், பொறியையுடைய, மகன், எம்மை, தாய், எந்திரம், நச்சுப்

