முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » எலிச்செவி முதல் - எழில்காட்டுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - எலிச்செவி முதல் - எழில்காட்டுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| எலும்பி | எலும்பு தோன்ற மெலிந்தவள் ; ஒரு மரவகை , காட்டுமஞ்சரி . |
| எலும்பிலி | ஒரு மரவகை ; புழு முதலிய எலும்பில்லாத உயிரினம் . |
| எலும்பு | உடலுக்கு உரம் தரும் உள்ளுறுப்பு , அஸ்தி . |
| எலும்புக்கூடு | எலும்புக் கோவை , கங்காளம் . |
| எலும்புக்கோறை | எலும்புத் துளை . |
| எலும்புச்சீப்பு | தந்தச் சீப்பு ; விலாவெலும்பு . |
| எலும்புப்பிசகல் | எலும்பின் பொருத்து நிலை மாறுகை . |
| எலும்புமுரிவு | எலும்பு ஒடிகை . |
| எலும்புருக்கி | உடம்பை வாட்டி எலும்பை வற்றச் செய்யும் ஒரு நோய் , சயரோகம் ; கருப்பமேகம் , ஒருவகைப் பூடு ; ஒரு மரவகை . |
| எலும்புவிரணம் | எலும்பைப்பற்றிய புண் . |
| எலும்புவீக்கம் | எலும்பைச் சுற்றிய தசையின் வீக்கம் . |
| எலுமிச்சந்துளசி | பெருந்துளசி . |
| எலுமிச்சம்பழச்செண்டு | எலுமிச்சம்பழத்தைத் தலையிலுடைய செண்டுவகை . |
| எலுமிச்சம்பழச்சோறு | எலுமிச்சம்பழத்தின் சாறுவிட்டுப் பிசைந்த சோறு . |
| எலுமிச்சம்பழவுப்பு | உப்புவகை . |
| எலுமிச்சை | ஒரு மரவகை , எலுமிச்சைவகை ; எலுமிச்சம்பழம் ; தித்திப்பெலுமிச்சை . |
| எலுவ | தோழன் ; முன்னிலைப் பெயர் . |
| எலுவல் | தோழன் . |
| எலுவன் | தோழன் . |
| எலுவை | தோழி . |
| எவ் | எவை . |
| எவ்வது | எவ்விதம் , எவ்வாறு . |
| எவ்வம் | துன்பம் ; தீராநோய் ; குற்றம் ; இகழ்ச்சி , இழிவு ; இளிவரவு ; இழிவான சொல் ; மானம் ; கவடம் ; வெறுப்பு . |
| எவ்வரும் | யாவரும் . |
| எவ்வளவு | எத்துணை , எம்மட்டு . |
| எவ்வனம் | இளமை . |
| எவ்வாறு | எவ்வழி ; எப்படி . |
| எவ்வுதல் | எழும்புதல் ; செலுத்துதல் ; தாவுதல் ; துன்பமிழைத்தல் . |
| எவ்வெலாம் | உள்ளனவெல்லாம் . |
| எவ்வெவர் | எவரெவர் . |
| எவ்வெவை | எவையெவை . |
| எவ்வேழு | ஏழேழு ; தனித்தனி ஏழு . |
| எவ்வை | எம் தங்கை ; கவலை . |
| எவட்சாரம் | வெடியுப்பு . |
| எவண் | எவ்விடம் ; எவ்வண்ணம் , எப்படி . |
| எவரும் | யாரும் , எல்லாரும் . |
| எவள் | யாவள் . |
| எவற்றையும் | எல்லாவற்றையும் . |
| எவன் | யாவன் ; எவ்வண்ணம் ; எப்படி ; யாது ; யாவை ; என்ன ; ஏன் ; வியப்பு இரக்கச் சொல் . |
| எவை | யாவை . |
| எவையும் | யாவையும் . |
| எழல் | எழும்பல் ; கிளர்ச்சி ; தோன்றுதல் ; புறப்படுதல் ; உதித்தல் ; மேற்பட்டு வருதல் ; துயரம் . |
| எழவாங்குதல் | தொலைவிற்போதல் . |
| எழாநிலை | யானை கட்டும் கூடம் . |
| எழால் | புல்லாறு என்னும் பறவை ; யாழ் ; யாழ் எழும் இன்னிசை ; மக்கள் மிடற்றிசை . |
| எழில் | அழகு ; இளமை ; வண்ணம் ; தோற்றப்பொலிவு ; உயர்ச்சி ; பருமை ; குறிப்பு ; சாதுரிய வார்த்தை ; வலி . |
| எழில்காட்டுதல் | காண்க : அழகு காட்டுதல் , நொடித்துக் காட்டுதல் . |
| எலிச்செவி | எலியின் செவி போன்ற இலையை உடைய ஒரு செடிவகை , சவரியார் கூந்தல் என்னும் ஒருவகைப் பூண்டு ; கொடியாள் கூந்தல் என்னும் கொடி . |
| எலிச்செவிக்கள்ளி | கள்ளிவகை . |
| எலிச்செவித்துத்தி | எலிச்செவிப் பூண்டு . |
| எலித்திசை | வடமேற்கு . |
| எலித்துருமம் | தான்றிமரம் . |
| எலித்துன் | எலி தோண்டிய பொந்து . |
| எலிப்பகை | பூனை . |
| எலிப்பயல் | காண்க : எலியன் . |
| எலிப்பயறு | வயல் வரப்பில் காணப்படும் காட்டுப் பயறுவகை . |
| எலிப்பாகம் | எலியாமணக்கு , காட்டாமணக்கு . |
| எலிப்பிடுக்கன் | ஒரு பூண்டுவகை . |
| எலிப்புலி | காணக : எலிப்பகை . |
| எலிப்பொந்து | காண்க : எலிவளை . |
| எலிப்பொறி | எலியைப் பிடிக்கும் எந்திரம் . |
| எலியளை | காண்க : எலிவளை . |
| எலியன் | பொடியன் , சிறு பையன் . |
| எலியாமணக்கு | காண்க : எலிப்பாகம் . |
| எலியால் | காண்க : எலிப்பாகம் . |
| எலியாலங்காய் | காட்டாமணக்கு விதை . |
| எலியிடுக்கி | காண்க : எலிப்பொறி . |
| எலியெலும்பன் | குறைந்த வலிமையுடையவன் . |
| எலியொட்டி | ஒட்டொட்டி ; ஒட்டங்காய்ப் புல் . |
| எலியோட்டி | குருக்குப் பூண்டு . |
| எலியோடி | நடுமுகட்டிலே வைக்கும் உருட்டு மரம் . |
| எலிவளை | நிலத்தினடியில் தங்க எலி தோண்டும் புரை . |
| எலிவாணம் | வாணவகை . |
| எலு | கரடி ; பிஞ்சு ; தோழமை . |
| எலும்பன் | எலும்பு தோன்ற மெலிந்தவன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 199 | 200 | 201 | 202 | 203 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எலிச்செவி முதல் - எழில்காட்டுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மரவகை, எலும்பு, எப்படி, சொல், எலிப்பாகம், தோழன், பூண்டு, எலிவளை, என்னும், எலிப்பகை, எலியாமணக்கு, எலிப்பொறி, காட்டாமணக்கு, கூந்தல், எலியன், யாழ், எவ்வாறு, ஒருவகைப், தோன்ற, இளமை, எவ்வண்ணம், அழகு, யாவை, காட்டுதல்

