தமிழ் - தமிழ் அகரமுதலி - எதிர்நூல் முதல் - எதிரேவல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| எதிர்வு | எதிர்ப்படுகை ; எதிர்காலம் ; நேரவிருப்பது . |
| எதிர்வெட்டு | மறுதலை , மறுப்பு . |
| எதிர்வைத்தல் | சரிவைத்தல் . |
| எதிர | ஓர் உவமவுருபு . |
| எதிரடையோலை | அடையோலை எழுதித் தருபவருக்குக் கொடுக்கும் ஆதரவுச்சீட்டு . |
| எதிரதாக்காத்தல் | வரக்கடவதாகிய ஒன்றை முன்னே அறிந்து அதன் காரணத்தை விலக்குதல் . |
| எதிரதுதழீஇய எச்சவும்மை | எதிர்காலச் செயலை விளக்கி நிற்கும் இடைச்சொல் ; ' சாத்தனும் வருவான் ' என்றால் ' கொற்றுனும் வருவான் ' என்பது வெளிப்படுதல் போல்வது . |
| எதிரது தழுவுதல் | உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்று , முன்னில்லாதனவாயினும் தற்கால வழக்காயின் அவற்றை ஏற்றுக் கொள்ளுதல் . |
| எதிரது போற்றல் | உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்று , முன்னில்லாதனவாயினும் தற்கால வழக்காயின் அவற்றை ஏற்றுக் கொள்ளுதல் . |
| எதிரம்பு கோத்தல் | ஒருவர் எய்யும் அம்பிற்கு எதிராக அம்பு விடுகை ; எதிர்த்து நிற்றல் . |
| எதிரழற்சி | எரிப்புண்டாக்கும் மருந்து . |
| எதிராசன் | துறவிகளுள் சிறந்தவராகிய இராமானுசர் . |
| எதிராப்பு | கழலாதபடி வைக்கும் ஆப்பு . |
| எதிராளி | பகைவன் ; எதிர்வழக்காடி , பிரதிவாதி ; எதிரிடைக்காரன் , போட்டி போடுபவன் ; சமமாயிருப்பவன் . |
| எதிரி | பகைவன் ; எதிர்வழக்காடி , பிரதிவாதி ; எதிரிடைக்காரன் , போட்டி போடுபவன் ; சமமாயிருப்பவன் . |
| எதிரிடுதல் | எதிர்ப்படுதல் ; எதிர்த்தல் ; மாறுபடுதல் . |
| எதிரிடை | எதிர்க்கை ; பகை ; போட்டி ; சமமாயிருப்பது ; எதிரிடை முறி . |
| எதிரிடைச்சீட்டு | காண்க : எதிரடையோலை |
| எதிரிடைமுறி | காண்க : எதிரடையோலை . |
| எதிரிலி | எதிரில்லாதவன் , எதிர்ப்பார் எவரும் இல்லாதவன் ; ஒப்பில்லாதவன் . |
| எதிருத்தரம் | மறுமொழி . |
| எதிருரைத்தல் | எதிர்த்துப் பேசுதல் ; மறுமொழி உரைத்தல் . |
| எதிரூன்றுதல் | எதிரூன்றல் , போருக்கு உறுதியாய் எதிர்நிற்றல் . |
| எதிரெடுத்தல் | காண்க : எதிர்(ரு)க்கெடுத்தல் . |
| எதிரேவல் | ஒருவன் செய்த ஏவலின்பொருட்டு மாறாக அவன் மீது ஏவுகை ; ஏவலையெடுக்கச் செய்கை . |
| எதிர்நூல் | பிறர் கொள்கையை மறுக்கும் நூல் , தன்கோள் நிறுவிப் பிறன்கோள் மறுப்பது . |
| எதிர்ப்படுதல் | முன்தோன்றுதல் ; சந்தித்தல் ; ஒப்பாதல் ; நேரிடுதல் , நேரே வருதல் . |
| எதிர்ப்பாடு | நேரிடுதல் , சந்திக்கை . |
| எதிர்ப்பாய்ச்சல் | எதிராகப் பாய்கை ; எதிரான நீரோட்டம் . |
| எதிர்ப்பு | எதிர்க்கை ; சகுனம் . |
| எதிர்ப்பை | காண்க : குறியெதிர்ப்பை |
| எதிர்பார்த்தல் | ஒன்றை நோக்கியிருத்தல் ; வரவு பார்த்திருத்தல் ; பிறருதவி நோக்கல் . |
| எதிர்மலர் | புதிய மலர் . |
| எதிர்மறுப்பு | முன்னொடுபின் முரணக் கூறுகை . |
| எதிர்மறை | எதிர்மறுப்பு , உடன்பாட்டிற்கு மாறானது , முரண் . |
| எதிர்மறையிடைநிலை | எதிர்மறைப் பொருளைக் காட்டும் ஆ , அல் , இல் என்னும் இடை நிலைகள் . |
| எதிர்மறையிலக்கணை | தனக்கு எதிர்மறையாகிய பொருளைக் குறிப்பாலுணர்த்துவது . |
| எதிர்மறையும்மை | எதிர்மறைப் பொருளில் வரும் உம் என்னும் இடைச்சொல் . |
| எதிர்மறைவினை | உடன்பாட்டிற்கு மாறாக வினைச்சொல் . |
| எதிர்மீன் | நீர்ப்பாய்ச்சலுக்கு எதிரே வரும் மீன் . |
| எதிர்முகம் | நேரெதிர் , முன்னிலை . |
| எதிர்முகவேற்றுமை | விளிவேற்றுமை . |
| எதிர்முறி | காண்க : எதிரிடைமுறி |
| எதிர்மூச்சுப்போடுகை | எதிரெதிராக நின்று மூச்சு வாங்க நெற்குற்றுகை . |
| எதிர்மை | எதிர்காலத்தில் நிகழ்வது . |
| எதிர்மொழி | மறுமொழி ; மறுப்புரை ; வழக்கில் எதிர்வழக்காடி கொடுக்கும் பதிலுரை . |
| எதிர்வ | முன்னே வருவன . |
| எதிர்வட்டி | செலுத்தும் மூலத்தொகைக்கு ஏற்பக் கழிக்கும் வட்டி . |
| எதிர்வரவு | பிற்காலத்து வருகை . |
| எதிர்வழக்காடி | வழக்குத் தொடுத்தோனுக்கு எதிராக வழக்காடுபவன் , பிரதிவாதி . |
| எதிர்வழக்கு | எதிர்வாதம் , பிரதிவாதம் . |
| எதிர்வாக்கு | பதிலுரை . |
| எதிர்வார்த்தை | பதிலுரை . |
| எதிர்வாதம் | பிரதிவாதியின் வாதம் ; மாறுபடக் கூறுகை . |
| எதிர்வாதி | எதிர் வழக்காடி , வழக்கிற் பிரதிவாதி ; தன் பக்கத்துக்கு எதிராக வாதிப்பவன் ; எதிர்க்கட்சி பேசுவோன் . |
| எதிர்வாய் | ஏரியின் முன்வாய் . |
| எதிர்விற்பனை | போட்டி வாணிகம் . |
| எதிர்வினை | எதிர்காலத்துச் செய்கை , எதிர் காலத்தில் நேரவிருக்கும் செயல்கள் ; எதிர்மறை வினை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 194 | 195 | 196 | 197 | 198 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எதிர்நூல் முதல் - எதிரேவல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பிரதிவாதி, எதிர்வழக்காடி, போட்டி, எதிர், எதிராக, மறுமொழி, எதிரடையோலை, பதிலுரை, செய்கை, எதிர்க்கை, மாறாக, எதிரிடைமுறி, கொடுக்கும், நேரிடுதல், எதிர்மறுப்பு, என்னும், வரும், எதிர்வாதம், பொருளைக், எதிர்மறைப், கூறுகை, எதிர்மறை, உடன்பாட்டிற்கு, எதிரிடை, சமமாயிருப்பவன், முன்னில்லாதனவாயினும், தற்கால, வழக்காயின், ஒன்று, முப்பத்திரண்டனுள், வருவான், எதிரது, உத்தி, அவற்றை, ஏற்றுக், எதிரிடைக்காரன், போடுபவன், இடைச்சொல், ஒன்றை, முன்னே, கொள்ளுதல், பகைவன், எதிர்ப்படுதல்

