முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அடுக்குக்குலைதல் முதல் - அடைத்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அடுக்குக்குலைதல் முதல் - அடைத்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அடைசுபலகை | செருகுபலகை , கதவுநிலைகளின்மேல் வைக்கும் சூரியப்பலகை . |
| அடைசொல் | காண்க : அடைமொழி ; சொல்லின் இறுதிநிலையாகிய விகுதி . |
| அடைத்த குரல் | கம்மிய குரல் . |
| அடைத்தது | இட்ட கட்டளை . |
| அடைத்தல் | சேர்த்தல் ; தடுத்தல் ; பூட்டல் ; அடைக்கப்படுதல் ; மறைத்தல் ; சாத்துதல் ; சிறைவைத்தல் , காவல் செய்தல் ; வேலியடைத்தல் . |
| அடுகலன் | சமையற் பாண்டம் . |
| அடுகளம் | போர்க்களம் , சண்டை செய்யுமிடம் . |
| அடுகிடைபடுகிடை | நினைத்தது பெறுமளவும் நீங்காது படுத்துக்கிடக்கை ; நோய்வாய்ப்படுகை . |
| அடுகுவளம் | உணவு ; அடுக்கிவைக்கப்பட்ட உணவுப்பெட்டி . |
| அடுகை | காண்க : அடுதல் . |
| அடுகைமனை | காண்க : அடுக்களை . |
| அடுங்குன்றம் | யானை . |
| அடுசில் | காண்க : அடிசில் . |
| அடுசிலைக்காரம் | செந்நாயுருவி . |
| அடுத்தடுத்து | ஒன்றன்மேல் ஒன்றாய் ; அடிக்கடி . |
| அடுத்தணித்தாக | அண்மையாக . |
| அடுத்தல் | கிட்டல் ; சேர்தல் ; மேன்மேல் வருதல் ; சார்தல் ; ஏற்றதாதல் ; அடைதல் ; பொருத்தல் . |
| அடுத்துமுயல்தல் | இடைவிடாது முயலுதல் . |
| அடுத்துவரலுவமை | உவமைக்கு உவமை கூறல் . |
| அடுத்தூண் | வாழ்வுக்கு விடப்பட்ட நிலம் . |
| அடுத்தேறு | மிகை . |
| அடுதல் | கொல்லுதல் ; தீயிற் பாகமாக்குதல் ; சமைத்தல் ; வருத்துதல் ; போராடுதல் ; வெல்லுதல் ; காய்ச்சுதல் ; குற்றுதல் ; உருக்குதல் . |
| அடுநறா | காய்ச்சிய சாராயம் . |
| அடுப்பங்கரை | அடுப்பின் பக்கம் ; அடுக்களை . |
| அடுப்பாங்கரை | அடுப்பின் பக்கம் ; அடுக்களை . |
| அடுப்பம் | கனம் ; நெருங்கிய உறவு . |
| அடுப்பு | சேர்க்கை ; பரணி நாள் ; நெருப்பு எரியும் அடுப்பு . |
| அடுப்பூதி | சமையல் செய்பவன்(ள்) . |
| அடும்பு | அடம்பு ; அடப்பங்கொடி . |
| அடை | இலை ; வெற்றிலை ; கனம் ; அப்பம் ; கரை ; முளை ; வழி ; பண்பு ; பொருந்துகை ; அடைகாக்கை ; அடைக்கலம் ; அடுத்து நிற்பது ; பொருளுணர்த்தும் சொல்லை அடுத்து நின்று சிறப்பிக்கும் சொல் . |
| அடைக்கலக்குருவி | சிட்டுக்குருவி . |
| அடைக்கலங்குருவி | சிட்டுக்குருவி . |
| அடைக்கலாங்குருவி | சிட்டுக்குருவி . |
| அடைக்கப்புடைக்க | விரைவாக . |
| அடைக்கலம் | புகலிடம் ; கையடை ; அடைக்கலப் பொருள் . |
| அடைக்கலம்புகல் | சரணம்புகல் ; அடிமையாதல் . |
| அடைக்காய் | பாக்கு ; தாம்பூலம் . |
| அடைகட்டுதல் | நீரைத் தடுக்க வரம்பு உண்டாக்குதல் ; வண்டி நகராதபடி சக்கரத்தின்முன் தடை வைத்தல் ; ஊர்திகளின் சக்கரத்தைத்தூக்க முட்டுக்கொடுத்தல் . |
| அடைகடல் | கடற்கரை . |
| அடைகரை | கரைப்பக்கம் . |
| அடைகல் | பட்டடைக்கல் ; அடிப்படைக் கல் ; மதகு அடைக்கும் கல் . |
| அடைகாத்தல் | கோழி முதலியவை குஞ்சு பொரிக்க முட்டையை அணைத்துக் காத்தல் , பறவைகள் அவயம் காத்தல் . |
| அடைகாய் | காண்க : அடைக்காய் . |
| அடைகிடத்தல் | காண்க : அடைகாத்தல் ; தங்கியிருத்தல் . |
| அடைகுடி | சார்ந்த குடும்பம் ; பயிரிடும் குடி . |
| அடைகுத்துதல் | அடைமானம் வைத்தல் . |
| அடைகுளம் | வாய்க்கால் இல்லாத குளம் ; நீர் தேங்கிக் கிடக்கும் குளம் . |
| அடைகுறடு | கம்மியர் பட்டடை ; பற்றுக்குறடு . |
| அடைகொள்ளுதல் | ஒற்றியாகப் பெறுதல் ; அடைக்கலப் பொருளைக் காக்க ஒருப்படுதல் . |
| அடைகொளி | அடையைப் பெற்ற பெயர் , அடைச்சொல்லைக்கொண்டு நிற்கும் சொல் . |
| அடைகோழி | அடைகாக்கும் கோழி . |
| அடைச்சுதல் | செருகுதல் ; மலர்சூட்டல் ; உடுத்துக் கொள்ளுதல் ; பொத்துதல் ; அடைவித்தல் . |
| அடைசல் | பொருள் நெருக்கம் ; காண்க : அடைசுதல் . |
| அடைசாரல் | பருவகாலத்து அடைமழை . |
| அடைசீலை | பாளச்சீலை . |
| அடைசுதல் | ஒதுங்குதல் ; கிட்டுதல் ; செருகுதல் ; நெருங்குதல் ; பொருந்துதல் ; நிறைவாதல் ; ஒதுக்குதல் ; கதுப்புக்குள் வைத்துக்கொள்தல் . |
| அடுக்குக்குலைதல் | நிலையழிதல் . |
| அடுக்குத்தொடர் | ஒரேசொல் அடுக்கி வருவது . |
| அடுக்குதல் | அடுக்கல் ; ஒன்றன்மேல் ஒன்றாகவைத்தல் ; வரிசைப்பட வைத்தல் . |
| அடுக்குப்பாத்திரம் | ஒன்றனுள் ஒன்றாய்ச் செருகப்பட்ட பாண்ட அடுக்கு . |
| அடுக்குமெத்தை | ஒன்றன்மேல் ஒன்றாய் உள்ள பல மாடிக் கட்டடம் ; அடுக்கடுக்காய் உள்ள பஞ்சணை . |
| அடுகலம் | சமையற் பாண்டம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அடுக்குக்குலைதல் முதல் - அடைத்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வைத்தல், சொல், சிட்டுக்குருவி, அடுக்களை, ஒன்றன்மேல், அடைக்காய், அடைசுதல், பொருள், உள்ள, செருகுதல், அடைகாத்தல், அடைக்கலப், காத்தல், கோழி, குளம், அடைக்கலம், அடுதல், பாண்டம், சமையற், குரல், ஒன்றாய், அடுப்பின், அடுப்பு, கனம், பக்கம், அடுத்து

