முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அடித்தொழும்பு முதல் - அடிமுட்டாள் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அடித்தொழும்பு முதல் - அடிமுட்டாள் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அடிப்பிச்சை | முதலில் பெறும் பிச்சை ; பிச்சைக்குப் போவோர் கலத்தில் இட்டுக்கொள்ளும் பொருள் ; சிறு மூலதனம் . |
| அடிப்பிடித்தல் | அடிச்சுவட்டைக்கண்டுபிடித்தல் ; முதலிலிருந்து தொடங்குதல் ; பின்தொடர்தல் ; காலைப் பிடித்து வேண்டுதல் ; குறிப்பறிதல் ; துப்பறிதல் ; கறி முதலியன பாண்டத்தில் பற்றுதல் . |
| அடிப்பிரதட்சிணம் | அடியடியாய்ச் சென்று கோயிலை வலம்வருகை . |
| அடிப்புக்கூலி | கதிரடிக்கும் கூலி . |
| அடிப்போடுதல் | தொடங்குதல் . |
| அடிபடுதல் | தாக்குண்ணுதல் , அடிக்கப்படுதல் ; நீக்கப்படுதல் ; பழைமையாதல் ; வழங்குதல் , எட்டுதல் . |
| அடிபணிதல் | காலில் விழுந்து வணங்குதல் , தண்டனிடுதல் . |
| அடிபறிதல் | வேரோடு பெயர்தல் . |
| அடிபாடு | மாடு முதலியவற்றின் உழைப்பு . |
| அடிபார்த்தல் | நிழலை அளந்து பொழுது காணல் ; ஏற்றசமயம் நோக்குதல் . |
| அடிபிடி | சண்டை . |
| அடிபிழைத்தல் | நெறிதவறி நடத்தல் ; பெரியவர்களுககுத் தவறு செய்தல் . |
| அடிபிறக்கிடுதல் | பின்வாங்குதல் ; புறங்காட்டுதல் , தோல்வியுறல் . |
| அடிபுதையரணம் | செருப்பு , மிதியடி . |
| அடிபெயர்த்தல் | காலை நகர்த்தி வைத்தல் ; விலகுதல் . |
| அடிமடக்கு | பொருள் வேறுபட்டோ படாமலோ செய்யுளின் அடி மீண்டும்மீண்டும் வருதல் . |
| அடிமடி | உள்மடி ; ஆடையின் உள்மடிப்பு . |
| அடிமடை | முதல்மடை . |
| அடிமடையன் | முழுமூடன் . |
| அடிமண் | கீழ்மண் ; காலடியில் ஒட்டிய மண் . |
| அடிமணை | ஆதாரம் : அடிமணைத்தட்டு ; படகின் உட்பலகை ; வண்டியினுள் பொருத்திய பலகை ; கால்வைக்கும் பலகை . |
| அடிமயக்கு | அடிகள் தடுமாறுதல் ; பாவடிகள் முன்பின்னாதல் . |
| அடிமரம் | கிளைக்கும் வேருக்கும் இடைப்பட்ட மரத்தின் பாகம் ; பாய்மரத்தின் அடிப்பாகம் . |
| அடிமறிமண்டிலம் | அகவற்பா வகையுள் ஒன்று ; எல்லா அடிகளும் ஒத்து முன்பின் மாற்றினும் பொருள் பொருத்தமுற அமையும் ஆசிரியப்பா . |
| அடிமறிமாற்று | பொருள்கோள் எட்டனுள் ஒன்று ; செய்யுளடிகளைப் பொருளுக்கு ஏற்றபடி கொண்டுகூட்டுவது . |
| அடிமனை | சுற்றுச் சுவர் ; கட்டடத்தின் முதன்மைச் சுவர் . |
| அடிமாடு | கொல்லுதற்குரிய மாடு . |
| அடிமாண்டுபோதல் | அறவே ஒழிதல் , முற்றும் அழிதல் . |
| அடிமுட்டாள் | காண்க : அடிமடையன் . |
| அடித்தொழும்பு | குற்றேவல் ; பாதப்பணிவிடை . |
| அடித்தோழி | தலைமைத்தோழி . |
| அடிதடி | சண்டை ; அடிக்குங்கோல் . |
| அடிதண்டம்பிடிதண்டம் | முழுமையாக வசப்பட்ட பொருள் . |
| அடிதண்டா | மண்வெட்டி ; கதவை இறுக்கும் நீண்ட தாழ் . |
| அடிதலை | கீழ்மேல் ; அடிமுடி ; வரலாறு . |
| அடிதாளம் | கைகளால் போடும் தாளம் . |
| அடிதாறு | அடிச்சுவடு . |
| அடிதோறும் | அடிக்கடி ; ஒவ்வோர் அடியிலும் . |
| அடிநகர்தல் | இடம்விட்டுப் பெயர்தல் . |
| அடிநா | நாவின் அடி ; உள்நாக்கு . |
| அடிநாய் | பெரியோர்முன் தன்னைத் தாழ்த்திக் கூறும் சொல் ; ஒரு வகை வணக்கமொழி . |
| அடிநாயேன் | பெரியோர்முன் தன்னைத் தாழ்த்திக் கூறும் சொல் ; ஒரு வகை வணக்கமொழி . |
| அடிநாள் | முதல்நாள் ; ஆதிகாலம் ; தொடக்கம் . |
| அடிநிலை | மரவடி என்னும் பாதக்குறடு , காலணி ; அடிப்படை . |
| அடிநீறு | பாததூளி , காலில் படிந்த துகள் . |
| அடிப்பட்ட சான்றோர் | வழிவழிப் பெரியோர் ; பண்டைப் புலவர் . |
| அடிப்பட்ட வழக்கு | பழைய வழக்கம் . |
| அடிப்படுத்துதல் | கீழ்ப்படுத்துதல் ; பழக்குதல் ; நிலைபெறச் செய்தல் . |
| அடிப்படுதல் | அடிச்சுவடு படுதல் ; கீழ்ப்படுதல் ; பழகுதல் ; அடிமைப்படுதல் . |
| அடிப்படை | ஆதாரம் ; மூலம் ; அடியிற்கிடப்பது ; அடித்தளம் ; படையில் தலைமையாக உள்ள பகுதி . |
| அடிப்பணி | காண்க : அடித்தொழும்பு . |
| அடிப்பதறுதல் | கால் நடுங்குதல் ; நிலை தவறுதல் ; மனங்கலங்குதல் . |
| அடிப்பந்தி | முதற்பந்தி ; உண்போரின் முதல் வரிசை . |
| அடிப்பலம் | மூலவலிமை . |
| அடிப்பலன் | முதற்பயன் . |
| அடிப்பற்றுதல் | தீய்ந்துபோதல் ; பாண்டத்தின் அடியில் பிடித்தல் ; திருவடியைப் பற்றுதல் . |
| அடிப்பாடு | பழக்கம் ; பாதை ; அடிச்சுவடு ; அடிப்பட்ட வழி ; வழக்கு ; உறுதிநிலை ; வரன்முறை ; வரலாறு ; திருவடியில் ஈடுபாடு . |
| அடிப்பாய்தல் | தாவிக் குதித்தல் . |
| அடிப்பாரம் | அடிக்கனம் ; அடிப்படை ; சிரங்கின் வீக்கம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அடித்தொழும்பு முதல் - அடிமுட்டாள் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பொருள், சொல், அடிச்சுவடு, அடிப்படை, அடிப்பட்ட, அடித்தொழும்பு, வரலாறு, பெரியோர்முன், கூறும், வழக்கு, வணக்கமொழி, காண்க, தாழ்த்திக், தன்னைத், ஒன்று, பெயர்தல், காலில், பற்றுதல், தொடங்குதல், மாடு, சண்டை, பலகை, ஆதாரம், அடிமடையன், செய்தல், சுவர்

