தமிழ் - தமிழ் அகரமுதலி - ஊற்று முதல் - ஊனக்கண் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஊன்றித்தாங்குதல் | கோலை ஊன்றித் தோணியைத் தள்ளுதல் . |
| ஊன்றி நடத்தல் | உறுதியாய் நடத்தல் ; கோலை ஊன்றி நடத்தல் . |
| ஊன்றிப்படித்தல் | கருத்துப் பதியுமாறு மனத்தை ஒருவழிப்படுத்திப் படித்தல் ; நிறுத்திப் படித்தல் . |
| ஊன்றிப்பார்த்தல் | கருத்தாய்ப் பார்த்தல் ; உற்றுநோக்குதல் ; ஆராய்ந்து பார்த்தல் . |
| ஊன்றிப்பெய்தல் | விடாமல் ஓங்கிப் பெய்தல் . |
| ஊன்று | சார்பு . |
| ஊன்று | (வி) வேரூன்று ; நிறுத்து ; நடு ; தாங்கு ; அழுத்து ; நிலைபெறு ; இறுகப் பிடி . |
| ஊன்றுகட்டு | ஊன்றும்படி கட்டிய விறகுகட்டு . |
| ஊன்றுகால் | உதைகால் , நடுகால் ; தாங்கும் முட்டுக்கால் . |
| ஊன்றுகோல் | பற்றுக்கோடு ; கைத்தடி . |
| ஊன்றுதல் | நிலைபெறுதல் ; சென்று தங்குதல் ; நடுதல் ; நிலைநிறுத்துதல் ; பற்றுதல் ; தீண்டுதல் ; தாங்குதல் ; முடிவுசெய்தல் ; அமுக்குதல் ; தள்ளுதல் ; உறுத்துதல் ; குத்துதல் ; |
| ஊனக்கண் | தசையால் ஆன கண் ; கட்பொறி ; குருட்டு விழி ; உயிரைப்பற்றிய அறிவு ; குறையுணர்வு . |
| ஊற்று | சுரக்கை ; கசிவு ; நீரூற்று ; ஊன்றுகோல் ; பற்றுக்கோடு , ஆதரவு . |
| ஊற்று | (வி) ஊற்றுஎன் ஏவல் ; சிந்து ; எண்ணெயூற்று ; வார் ; சுர . |
| ஊற்றுக்கண் | ஊற்றுத்துளை ; நிலத்தடியில் நீர் ஊற்றுள்ள இடம் ; கண்களிலிருந்து எப்போதும் நீர் வடிந்துகொண்டிருக்கும் மாட்டு நோய் வகை . |
| ஊற்றுக்களம் | பலரும் வந்துசேரும் இடம் . |
| ஊற்றுக்குழி | ஊற்றுப் பள்ளம் , நீர் ஊறுதலையுடைய குழி . |
| ஊற்றுக்கோல் | காண்க : ஊன்றுகோல் . |
| ஊற்றுண்ணுதல் | நீர் ஒழுகி வடிதல் . |
| ஊற்றுத்துளை | நீர்நிலை ; நீர் இறைக்கும் துரவு . |
| ஊற்றுத் தோண்டுதல் | ஊற்று உண்டாவதற்காகத் தோண்டுகை . |
| ஊற்றுதல் | வார்த்தல் ; வடித்தல் ; வெளியே விடுதல் . |
| ஊற்றுப்பட்டை | நீர் இறைக்கும் பட்டை . |
| ஊற்றுப்பறி | மடு முதலியவற்றில் மீன்பிடிக்கும் கருவி . |
| ஊற்றுப்பூ | தேங்காய்ப் பிண்ணாக்கு . |
| ஊற்றுப்பெட்டி | எண்ணெய் ஊற்றுதற்குக் கருவியான பெட்டி , எண்ணெய் ஊற்றும் கூடை . |
| ஊற்றுப் பெயர்தல் | ஊற்றுத் திரும்புதல் . |
| ஊற்றுப்போடுதல் | ஆற்றில் ஊற்றுக்குழி தோண்டுதல் . |
| ஊற்றுமரம் | எண்ணெயூற்று மரம் , செக்குலக்கை . |
| ஊற்றெடுத்தல் | ஊற்றுத் தோன்றுதல் ; ஊற்றுத் தோண்டுதல் . |
| ஊற்றெண்ணெய் | வடித்தெடுக்கும் எண்ணெய் . |
| ஊற்றெழுதல் | ஊற்றுப் பெயர்தல் . |
| ஊறணி | ஊற்று ; கசிவுநிலம் ; சேற்றுநிலம் ; வருவாய் . |
| ஊறல் | ஊறுதல் ; நீரூற்று ; சாறு ; பால் முதலியன சுரத்தல் ; மருந்திலூறல் ; மருந்தின் சாரம் ; பஞ்சலோகக்கலப்பு ; களிம்பு ; வருவாய் ; நீர்வற்றாப் பசுமை ; தோலின் மீதுண்டாகும் ஒரு நோய் . |
| ஊறவைத்தல் | ஊறும்படி வைத்தல் ; நீரில் பதம் பெறச் செய்தல் . |
| ஊறற்பதம் | பச்சைப் பதம் . |
| ஊறற்பாக்கு | நீரில் ஊறிய பாக்கு . |
| ஊறு | உறுகை ; தொடுஉணர்வு ; இடையூறு ; கொலை ; உடம்பு ; காயம் ; வல்லூறு ; நாசம் . |
| ஊறுகறி | உப்பு முதலியன சேர்த்து ஊற வைக்கும் காய் ; உப்பு , காரம் இவற்றில் பதப்படுத்தும் உணவுவகை ; அடைகாய் . |
| ஊறுகாய் | உப்பு முதலியன சேர்த்து ஊற வைக்கும் காய் ; உப்பு , காரம் இவற்றில் பதப்படுத்தும் உணவுவகை ; அடைகாய் . |
| ஊறுகோள் | காயம் , புண் , கொலை . |
| ஊறுதல் | நீரூறுதல் ; கசிதல் ; செவ்வியுறுதல் ; சுரத்தல் ; பெருகுதல் ; தேறுதல் ; சாரமேறுதல் ; பால் முதலியன சுரத்தல் ; நீர் பெருகுதல் ; மெலிந்தவுடல் தேறுதல் ; வாய் ஊறுதல் ; பலவழியினும் பொருள் வந்தடைதல் ; உள்ளிறங்கல் ; நனைதல் ; இடைவிடாது சுரத்தல் ; ஊறுகாய்ப் பதமாதல் . |
| ஊறுபாடு | துன்பம் ; தீமை ; புண்படுகை ; காயம் ; சேதம் . |
| ஊறுபுண் | ஆறிவரும் புண் . |
| ஊறெண்ணெய் | உச்சியில் ஊறும் எண்ணெய் . |
| ஊறை | சவ்வரிசி . |
| ஊன் | தசை , இறைச்சி ; கொழுப்பு ; உடம்பு . |
| ஊன்கணார் | மாந்தர் ; அறிவில்லாதவர் . |
| ஊன்செய்கோட்டம் | உடல் . |
| ஊன்றக்கட்டுதல் | பலப்படுத்தல் . |
| ஊன்றி | ஒரு பாம்புவகை . |
| ஊன்றிக்கேட்டல் | உன்னிப்பாய்க் கேட்டல் , கருத்தாய்ச் செவிகொடுத்தல் , மிகக் கருத்தாகக் கேட்டல் ; உற்றுக்கேட்டல் ; அழுத்தி வினாதல் . |
| ஊன்றிக்கொள் | (வி) நிலைபெறு ; சார்ந்திரு . |
| ஊன்றிச்சொல்லுதல் | தெளிவாய்ப் பேசுதல் , உறுதியாய்ச் சொல்லுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 186 | 187 | 188 | 189 | 190 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஊற்று முதல் - ஊனக்கண் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நீர், ஊற்றுத், எண்ணெய், ஊற்று, முதலியன, சுரத்தல், உப்பு, காயம், தோண்டுதல், ஊற்றுப், ஊன்றுகோல், ஊன்றி, நடத்தல், ஊறுதல், சேர்த்து, உடம்பு, கொலை, பதம், அடைகாய், புண், பெருகுதல், தேறுதல், உணவுவகை, பதப்படுத்தும், காய், கேட்டல், காரம், இவற்றில், வைக்கும், பெயர்தல், நிலைபெறு, பற்றுக்கோடு, நீரூற்று, ஊன்று, பார்த்தல், தள்ளுதல், படித்தல், எண்ணெயூற்று, ஊற்றுத்துளை, கோலை, வருவாய், பால், இறைக்கும், ஊற்றுக்குழி, இடம், நோய், நீரில்

