தமிழ் - தமிழ் அகரமுதலி - ஊர்த்துவம் முதல் - ஊருடையான் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஊர்ப்புகைச்சல் | ஊரில் கெட்ட நிமித்தமாகத் தோன்றும் புகை நிறம் ; ஊர் வதந்தி . |
| ஊர்ப்புரட்டு | பெரும்பொய் . |
| ஊர்ப்புரளி | ஊர்க்குழப்பம் ; ஊர்ப்புரட்டு , பெரும்பொய் . |
| ஊர்ப்புல் | கோரைவகை . |
| ஊர்ப்புலம் | ஆமணக்கு . |
| ஊர்ப்புள் | காண்க : ஊர்க்குருவி . |
| ஊர்ப்பொருத்தம் | ஊர்ப்பெயரின் முதலெழுத்துக்கும் குறிகேட்போன் பெயரின் முதலெழுத்துக்கும் அமையும் பொருத்தம் . |
| ஊர்மச்சி | காண்க : ஊமைச்சி . |
| ஊர்மணியம் | ஊர் மேற்பார்வை ; ஊரை மேற்பார்ப்பவன் . |
| ஊர்மன்றம் | ஊரிலேயுள்ள மன்றம் , ஊர்ப் பொதுவிடம் . |
| ஊர்மன்று | ஊரிலேயுள்ள மன்றம் , ஊர்ப் பொதுவிடம் . |
| ஊர்மாணியம் | ஊர்ப் பொது ஊழியத்துக்காக விடப்பட்ட நிலம் . |
| ஊர்மி | அலை . |
| ஊர்முகம் | படைகள் போர் செய்யுமிடம் . |
| ஊர்வசி | காண்க : உருப்பசி . |
| ஊர்வரப்பன் | வெள்ளரி . |
| ஊர்வரை | யானை . |
| ஊர்வலம் | ஊரை வலப்பக்கமாகச் சுற்றி வருதல் ; உலாவருதல் . |
| ஊர்வன | எழுவகைப் பிறப்புள் ஒன்று , ஊர்ந்து செல்லும் இயல்புடைய உயிரிகள் . |
| ஊர்வாரி | ஊர்ச் சலதாரை . |
| ஊர்வாரியம் | சிற்றூர்ச் சபை , கிராம சபை . |
| ஊர்வெண்பா | பாட்டுடைத் தலைவனது ஊரிணைப் பத்து வெண்பாவினால் சிறப்பித் துரைக்கும் சிற்றிலக்கியவகை . |
| ஊரண்டினார் | கள்ளி . |
| ஊரணி | காண்க : ஊருணி . |
| ஊரதிசயங்காட்டி | ஊரிலுள்ள அரிய பொருள்களைப் புதியோர்க்கு காட்டுபவன் , வழிகாட்டி . |
| ஊரமை | ஊர்ப் பொதுச்செயல்களை நிருவகிக்கை . |
| ஊரல் | ஊர்வது ; கிளிஞ்சில் ; குளுவை என்னும் ஒரு நீர்ப்பறவை ; தினவு ; ஊறுதல் ; தேமல் வகை ; படர்தாமரை நோய் ; ஈரம் ; பசுமை ; காய்ந்து வருகிற புண் ; உரிஞ்சல் ; ஊர்தல் . |
| ஊரவர் | ஊரார் . |
| ஊரற்புண் | ஆறாப்புண் ; காய்ந்துவரும் புண் . |
| ஊரறுகு | அறுகுவகை . |
| ஊரன் | மருதநிலைத் தலைவன் ; சுந்தரமூர்த்தி நாயனார் . |
| ஊரா | ஊர்ப்பசு . |
| ஊராட்சி | ஊர் ஆளுகை ; ஒரு பழைய வரி . |
| ஊராண்மை | ஊரை ஆளும் தன்மை ; உபகாரியாந் தன்மை , ஒப்புரவு ; மிக்க செயல் ; ஊரின்கண் மேம்பாடுடைமை ; பகைமேற் செல்லுகை . |
| ஊராநற்றேர் | வானவூர்தி , ஆகாயவிமானம் . |
| ஊரார் | ஊரவர் ; அயலார் . |
| ஊராளன் | ஊராட்சி செய்யும் ஒர் அதிகாரி . |
| ஊராளி | ஊரதிகாரி ; உழவுத் தொழில் புரிவோன் ; ஒரு மலைச்சாதி ; வரிக்கூத்து வகை . |
| ஊரி | புல்லுருவி ; சங்கு ; இளமை ; மேகம் ; நத்தைவகை . |
| ஊரிடுவரிப்பாடு | ஊரார் விதித்துக்கொண்ட நிலவரி . |
| ஊரிலிகம்பலை | ஊர்கலிகம்பலை ; ஊர்க்கலகம் . |
| ஊரின்னிசை | தலைவனுடைய ஊரை இன்னிசை வெண்பாவினால் சிறப்பித்துரைக்கும் சிற்றிலக்கியவகை . |
| ஊரு | தொடை . |
| ஊருகட்டி | ஊரவை கூடுவதற்கு மரத்தைச் சுற்றி அமைக்கும் திண்ணை . |
| ஊருகால் | நத்தை ; சங்கு . |
| ஊருசன் | வைசியன் . |
| ஊருடை | முருங்கைமரம் . |
| ஊருடைமுதலியார் | முருங்கைமரம் . |
| ஊருடைமூலி | முருங்கைமரம் . |
| ஊருடையான் | ஊருக்கு உரிமையுடைய தலைவன் ; ஊர்க்கணக்கன் . |
| ஊர்த்துவம் | மேல் ; மேல்நோக்கம் ; மேற்புறம் ; சைவபேதம் பதினாறனுள் ஒன்று . |
| ஊரத்துவலோகம் | மேலுலகம் . |
| ஊர்த்துவாங்கம் | அரைக்கு மேற்பட்ட உறுப்பு . |
| ஊர்தருதல் | ஊர்தல் ; வீசுதல் ; மிகுதல் . |
| ஊர்தல் | நகருதல் ; பரவுதல் ; தினவுறுதல் ; நெருங்குதல் ; வடிதல் ; ஏறிச் செல்லுதல் ; கழலுதல் ; ஏறுதல் . |
| ஊர்தி | ஏறிச் செலுத்தப்படுவது , வாகனம் ; எருது , குதிரை , சிவிகை , வண்டி முதலிய வாகனங்கள் ; விமானம் ; ஆரூடம் . |
| ஊர்நத்தம் | ஊரில் வீடுகள் கட்டுவதற்காக விடப்பட்டுள்ள இடம் ; குடியிருப்பு ; ஊர் . |
| ஊர்நேரிசை | பாட்டுடைத் தலைவனது ஊரைச் சிறப்பித்து நேரிசை வெண்பாவினால் பாடப்படும் சிற்றிலக்கியவகை . |
| ஊர்ப்பட்டது | மிகுந்தது . |
| ஊர்ப்பன்றி | நாட்டுப்பன்றி . |
| ஊர்ப்பாக்கு | திருமண அழைப்புக்காக வைக்கும் தாம்பூலம் . |
| ஊர்ப்பாடு | பிறருடைய வேலை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 184 | 185 | 186 | 187 | 188 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஊர்த்துவம் முதல் - ஊருடையான் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஊர்ப், காண்க, சிற்றிலக்கியவகை, வெண்பாவினால், ஊர்தல், ஊரார், முருங்கைமரம், ஊரவர், புண், ஊராட்சி, ஏறிச், சங்கு, தன்மை, தலைவன், தலைவனது, ஊரிலேயுள்ள, முதலெழுத்துக்கும், பெரும்பொய், ஊர்ப்புரட்டு, மன்றம், பொதுவிடம், பாட்டுடைத், ஒன்று, சுற்றி, ஊரில்

