தமிழ் - தமிழ் அகரமுதலி - ஊருணி முதல் - ஊற்றால் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஊற்றால் | மீன் பிடிக்கும் கூடு ; கோழிக்குஞ்சுகளை அடைக்கும் கூடை ; உரோகிணி நாள் . |
| ஊரெறிதல் | ஊரைக் கொள்ளையிடுதல் . |
| ஊரெறிபறை | பாலைநிலத்துப் பறை . |
| ஊரேறு | ஊர்ப்பன்றி ; பட்டிமாடு . |
| ஊரை | மலைநெல் . |
| ஊரோசம் | ஊரில் பரந்த புகழ் . |
| ஊலுகம் | காண்க : உலூகம் . |
| ஊழ் | பழைமை ; பழவினை ; தலைவிதி , பழவினைப்பயன் ; முறைமை ; குணம் ; தடவை ; முதிர்ச்சி ; மலர்ச்சி ; முடிவு ; வெயில் ; சூரியன் ; பகை . |
| ஊழ்குதல் | எண்ணுதல் , நினைத்தல் ; தியானித்தல் . |
| ஊழ்த்தசை | புலால் . |
| ஊழ்த்தல் | இறைச்சி ; முடைநாற்றம் ; நரகம் ; பருவம் ; முதிர்தல் ; பதங்கெடல் ; நினைத்தல் ; உதிர்தல் ; மூடுதல் ; சிந்துதல் . |
| ஊழ்த்துணை | மனைவி . |
| ஊழ்தல் | முதிர்தல் . |
| ஊழ்பாடு | முடிவுபடுகை . |
| ஊழ்முறை | நியதி , வினைப்பயன்முறை . |
| ஊழ்மை | முறைமை . |
| ஊழ்விதி | பழவினைப் பயன் . |
| ஊழ்விணை | பழவினை ; உழுவலன்பு . |
| ஊழ்வினைப்பயன் | கருமபலன் . |
| ஊழகம் | வைகறை . |
| ஊழம் | வைகறை . |
| ஊழல் | அருவருப்பானது , ஆகாதது ; நரகம் ; தாறுமாறு ; கெட்டது ; குழப்படி செய்கை ; பணமோசடி செய்கை . |
| ஊழலத்தி | ஒரு மரவகை . |
| ஊழலாற்றி | ஒரு மரவகை . |
| ஊழலித்தல் | பதனழிதல் ; அருவருத்தல் ; இளைத்தல் ; மெலிதல் ; சோர்தல் ; நாற்றமடைந்து கெடுதல் . |
| ஊழற்சதை | பெருகித் தளர்ந்த சதை . |
| ஊழனிலம் | சேற்றுநிலம் . |
| ஊழி | முடிவுகாலம் ; யுகமுடிவு , கடல் பெருகி உலகம் அழியும் காலம் ; நெடுங்காலம் ; பூமி ; விதி ; முறைமை ; வாழ்நாள் . |
| ஊழிக்காய்ச்சல் | தொற்றுக்காய்ச்சல் . |
| ஊழிக்காரம் | இதள் , பாதரசம் . |
| ஊழிக்கால் | ஊழிக்காற்று , உலகமுடிவுக் காலத்தில் தோன்றும் காற்று . |
| ஊழிக்காலம் | உலகம் அழியும் காலம் . |
| ஊழிக்காற்று | உலகம் அழியும் காலத்துத் தோன்றும் பெருங்காற்று ; நச்சுக்காற்று . |
| ஊழித்தீ | வடவையனல் , உலக முடிவுக் காலத்தில் தோன்றும் நெருப்பு . |
| ஊழிநாயகன் | உலகை அழிக்கும் கடவுள் ; ஊழிக்காலத்தும் அழியாது இருக்கும் இறைவன் . |
| ஊழிநோய் | பெருவாரிநோய் , தொற்றுநோய் . |
| ஊழிமுதல்வன் | கடவுள் . |
| ஊழியக்காரன் | வேலைக்காரன் ; அடியான் . |
| ஊழியம் | தொண்டு ; சிறைப்பட்டோர் செய்யும் வேலை . |
| ஊழியமறியல் | கடுங்காவல் . |
| ஊழிய மானியம் | பொதுப்பணி செய்வார்க்காக விடப்படும் நிலம் . |
| ஊழியன் | அடிமை ; பணியாள் . |
| ஊழியான் | நெடுங்கால வாழ்க்கையுடையான் ; கடவுள் . |
| ஊழில் | அருவருப்பைக் கொடுக்கும் சேறு . |
| ஊழிலை | இலைச்சருகு . |
| ஊழுறுதல் | குடைதல் . |
| ஊழை | பித்தம் . |
| ஊழைக்குருத்து | துளசிப்பூண்டு . |
| ஊளன் | நரி ; ஆண் நரி . |
| ஊளா | நெடுவாய்மீன் . |
| ஊளான் | நரி ; கடல்மீன்வகை . |
| ஊளி | நெடுவாய்மீன் ; சத்தம் ; நாய் நரி முதலியன கத்தும் ஒலி ; பசி . |
| ஊளை | நரி முதலியவற்றின் கூப்பீடு ; தீ நாற்றம் ; ஊத்தை . |
| ஊளைக்காது | சீழ்வடியும் காது . |
| ஊளையிடுதல் | நாய் நரி முதலியவை கூக்குரலிடுதல் . |
| ஊற்காரம் | கக்குதல் , வாயாலெடுத்தல் . |
| ஊற்றங்கால் | வயல் , தோட்டம் முதலியவற்றில் நீர் வடியும்படி இடும் சிறு கால்வாய் . |
| ஊற்றங்கோல் | காண்க : ஊன்றுகோல் . |
| ஊற்றம் | பற்றுக்கோடு ; அசைவின்றி நிற்றல் ; வலிமை ; மனவெழுச்சி ; மேம்பாடு ; பழக்கம் ; இடையூறு ; கேடு ; தொடுவுணர்ச்சி ; புகழ் ; அறிவு . |
| ஊற்றருகி | நீர் . |
| ஊற்றாணி | கலப்பையுறுப்புள் ஒன்று . |
| ஊற்றாம்பெட்டி | காண்க : ஊற்றுப்பெட்டி . |
| ஊருணி | ஊரினருக்கு உண்ணும் நீர் உதவும் நீர் நிலை ; ஊரையடுத்த குளம் ; ஊரார் நீர் முகக்கும் குளம் . |
| ஊருணை | புருவநடுச் சுழி . |
| ஊருத்தம்பம் | தொடையில் உண்டாகும் ஒரு வகை வாதநோய் . |
| ஊருத்தம்பை | வாழைமரம் . |
| ஊருவாரக்கொடி | வெள்ளரி . |
| ஊரெழுச்சி | ஊரார் திரண்டெழுகை ; ஊர்க்கலகம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 185 | 186 | 187 | 188 | 189 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஊருணி முதல் - ஊற்றால் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நீர், தோன்றும், கடவுள், அழியும், உலகம், முறைமை, காண்க, பழவினை, ஊரார், நெடுவாய்மீன், நாய், காலத்தில், குளம், ஊழிக்காற்று, செய்கை, வைகறை, முதிர்தல், மரவகை, புகழ், காலம், நினைத்தல், நரகம்

