தமிழ் - தமிழ் அகரமுதலி - எச்சமிடுதல் முதல் - எட்சி வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
எச்சிற்கல்லை | உண்ட தையல் இலைக்கலம் , எச்சிலிலை . |
எச்சிற்கலப்பு | கணவன் எச்சிலை மனைவி உண்ணும் சடங்கு ; மணமக்கள் ஒருவர்பின் ஒருவர் ஒரு கலத்தில் பாலுண்ணுகை |
எச்சிற்கிதம் பாடுதல் | இழிந்த பொருளுக்காக ஒருவரைப் புகழ்ந்து கூறுதல் ; தகாத நோக்கத்தோடு குற்றத்திற்கு இணங்குதல் . |
எச்சிற்படுத்தல் | எச்சிலாக்குதல் ; புண்படுத்துதல் ; கன்னிமை கெடுத்தல் . |
எச்சிற்படுதல் | உமிழ்நீர் பட்டுத் தூய்மை கெடுதல் . |
எச்சிற் புரட்டுதல் | எச்சிலிடுதல் . |
எச்சிற்பேய் | ஒருவகைப் பேய் ; கொடுமையான சிறுதெய்வம் ; பெருந்தீனிக்காரன் . |
எச்சிற்றழுதணை | எச்சில் தழும்பு , படர்தாமரை என்னும் நோய் . |
எச்சிற்றழும்பு | எச்சில் தழும்பு , படர்தாமரை என்னும் நோய் . |
எச்சிற்றேமல் | எச்சில் தழும்பு , படர்தாமரை என்னும் நோய் . |
எச்சு | உயர்வு ; மிகுதி ; உயர்ந்த ஓசை ; குறைவு ; இசையில் நீண்ட ஓசை ; ஓரு வாத்தியக் கருவி . |
எசகுபிசகு | முறைகேடு , தவறான வழி . |
எசப்புச் செலவு | தரகு கொடுத்தற்குப் பிடிக்குஞ் செலவு . |
எசம் | நரம்பு , நாடி . |
எசமாட்டி | தலைவி , குடும்பத் தலைவி . |
எசமான் | தலைவன் ; கணவன் ; வேள்வித் தலைவன் . |
எசமானன் | தலைவன் ; கணவன் ; வேள்வித் தலைவன் . |
எசமானி | காண்க : எசமாட்டி . |
எசமானிக்கை | தலைமை . |
எசர் | உலைநீர் . |
எசர்கட்டுதல் | உலைநீர் வைத்தல் . |
எசு | எசுர் , நான்மறைகளுள் ஒன்று , இரண்டாம் மறை . |
எசுர்வேதம் | எசுர் , நான்மறைகளுள் ஒன்று , இரண்டாம் மறை . |
எஞ்சணி | சொல்லலங்கார வகையுள் ஒன்று , சொல் வெளிப்படாமல் எஞ்சி நிற்பது ; எஞ்சி நிற்கும் சொல் . |
எஞ்சலார் | புதியவர் . |
எஞ்சலித்தல் | குறைவு செய்தல் . |
எஞ்சாமை | குறையாமை , ஒழியாமை , முழுமை . |
எஞ்சிநிற்றல் | குறைந்த நிற்றல் , தொக்கு நிற்றல் , ஒழிந்து நிற்றல் . |
எஞ்சியசொல்லி னெய்தக் கூறல் | நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று , சொன்னவற்றால் சொல்லாதவற்றையும் உய்த்தறியுமாறு கூறுகை . |
எஞ்சுதல் | குறைதல் ; கெடுதல் ; இறத்தல் , சாதல் , ஒழிதல் ; மிஞ்சுதல் ; தொக்கு நிற்றல் ; கடத்தல் ; செய்யாதொழிதல் ; தனக்குப்பின் உரிமையாக வைத்தல் . |
எஞ்ஞம் | எக்கியம் , ஓமம் , வேள்வி . |
எஞ்ஞான்றும் | எகக்காலமும் , எப்பொழுதும் , எப்போதும் . |
எட்கசி | எள்ளால் செய்யப்பட்ட உணவு , எள்ளுருண்டை . |
எட்கசிவு | எள்ளால் செய்யப்பட்ட உணவு , எள்ளுருண்டை . |
எட்கிடை | எள்ளுக்கிடத்தற்கு வேண்டிய இடம் , எள்ளளவு . |
எட்கை | தென்னை . |
எட்கோது | எள்ளுக்காய்த் தோல் . |
எட்சத்து | நல்லெண்ணெய் . |
எட்சிணி | காண்க : யட்சினி . |
எட்சி | எழுச்சி , உதயம் . |
எச்சமிடுதல் | பறவைகள் மலங்கழித்தல் . |
எச்சரிக்கை | சாக்கிரதை ; விழிப்பாய் இருக்குமாறு குறிப்பிடுதல் ; முன்னறிவிப்பு ; அமைதியாயிருக்கச் சொல்லுகை ; எச்சரிக்கை கூறுகை ; எச்சரிக்கைப் பாட்டு ; |
எச்சரித்தல் | முன்னறிவித்தல் ; விழிக்கப் பண்ணுதல் ; தூண்டுதல் ; கண்டித்தல் ; புத்தி சொல்லுதல் . |
எச்சரிப்பு | எச்சரித்தல் ; முன்னறிவிப்பு . |
எச்சவனுமானம் | காரியங் கொண்டு காரணமறிதல் , ஆற்றில் நீர்வரக் கண்டவன் மலைக் கண் மழையுண்டென அறிதல் போல்வது . |
எச்சவாய் | குதம் , எருவாய் , மலவாய் . |
எச்சவும்மை | மறைந்து நிற்கும் தொடர்புடைய பொருளை விளக்கும் உம்மை , 'சாத்தனும் வந்தான்' என்றாற்போல வரும் உரை . |
எச்சன் | வேள்வி செய்வோன் ; வேள்வித் தலைவன் ; அக்கினி , தீக்கடவுள் ; யாக தேவதை ; வேள்வியின் அதிதேவதையான திருமால் . |
எச்சில் | உமிழ்நீர் ; உமிழ்நீர் பட்டுத் தூய்மை கெடும் பொருள் ; உண்டு கழிந்த மிச்சில் ; மிச்சம் ; மலசலம் முதலியன ; வேள்வித் தீயிலிடும் அரிசி மாவாலாகிய ஓமப் பொருள் ; உச்சிட்டம் |
எச்சில் மாற்றுதல் | எச்சிலிலையை எடுத்தெறிந்துவிட்டு இடத்தைத் துப்பரவு செய்தல் . |
எச்சிலன் | கடும்பற்றுள்ளன் , பிசுனன் |
எச்சிலாக்குதல் | ஒருபொருளின் மேல் வாயெச்சில் படுதல் ; ஒன்றன் தூய்மையைக் கெடுத்தல் . |
எச்சிலார் | எச்சிலுடையவர் ; இழிந்தோர் . |
எச்சிலிடுதல் | உண்ட இடத்தைச் சாணமிட்டு மெழுகுதல் . |
எச்சிலிலை | உணவுண்டு எச்சிலான இலை . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 188 | 189 | 190 | 191 | 192 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எச்சமிடுதல் முதல் - எட்சி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், எச்சில், தலைவன், நிற்றல், ஒன்று, வேள்வித், என்னும், தழும்பு, நோய், சொல், உமிழ்நீர், கணவன், படர்தாமரை, கூறுகை, தொக்கு, எஞ்சி, நிற்கும், செய்தல், உண்ட, வேள்வி, உணவு, முன்னறிவிப்பு, எச்சரித்தல், பொருள், எச்சரிக்கை, எள்ளுருண்டை, செய்யப்பட்ட, இரண்டாம், எள்ளால், வைத்தல், எச்சிலாக்குதல், குறைவு, எச்சிலிடுதல், கெடுதல், பட்டுத், தூய்மை, செலவு, எசமாட்டி, எசுர், நான்மறைகளுள், கெடுத்தல், உலைநீர், தலைவி, காண்க, எச்சிலிலை