தமிழ் - தமிழ் அகரமுதலி - உவமைத்தொகை முதல் - உழப்பு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உழக்குதல் | கலக்குதல் ; மிதித்தல் ; உழுதல் ; விளையாடுதல் ; கொன்று திரிதல் ; வெல்லுதல் . |
| உழக்குருட்டுதல் | சூதாடுதல் . |
| உழக்கோல் | உழவுக்கம்பு , தாற்றுக்கோல் . |
| உழத்தல் | செய்தல் ; பயிலுதல் ; பழகுதல் ; முயலுதல் ; வெல்லுதல் ; வருந்துதல் ; பட்டனுபவித்தல் ; துவைத்தல் . |
| உழத்தி | உழவர்சாதிப் பெண் , மருதநிலப் பெண் . |
| உழத்திப்பாட்டு | உழவுபற்றிய செய்திகளைக் கூறும் ஒருவகைச் சிற்றிலக்கியவகை . |
| உழப்பன் | கள்ள நியாயம் பேசுகிறவன் . |
| உழப்பு | முயற்சி , ஊக்கம் ; வருத்தம் ; பழக்கம் ; வலிமை . |
| உவர் | உப்பு ; உப்புச்சுவை ; களர்நிலம் ; உழைமண் ; கடல் ; இனிமை ; உயர்திணைப் பலர்பாலில் வரும் ஒரு சுட்டுப்பெயர் . |
| உவர்க்கடல் | உப்புநீர்க் கடல் . |
| உவர்க்கம் | கடற்கரை . |
| உவர்க்களம் | காண்க : உவர்நிலம் . |
| உவர்க்காரம் | சவர்க்காரம் . |
| உவர்ச்சங்கம் | முட்சங்குப்பூண்டு . |
| உவர்த்தரை | காண்க : உவர்நிலம் . |
| உவர்த்தல் | உப்புக்கரித்தல் ; துவர்த்தல் ; அருவருத்தல் ; வெறுத்தல் . |
| உவர்நிலம் | களர்நிலம் ; உப்பளம் . |
| உவர்நீர் | உப்புநீர் , உப்புச்சுவையுள்ள நீர் . |
| உவர்ப்பு | உப்புச்சுவை ; துவர்ப்பு ; இகழ்ச்சி ; வெறுப்பு ; அவாவின்மை ; உயிரால் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளுள் இனி நுகரக் கிடக்கும் வினையின் பயன்கள் . |
| உவர்மண் | உப்புச்சேர்ந்த மண் , உழைமண் ; களர்நிலம் . |
| உவரகம் | உப்புச்சேர்ந்த மண் , உழைமண் ; களர்நிலம் . |
| உவராகம் | மறைப்பு , கிரகணம் ; மறைப்புக் காலம் . |
| உவரி | உவர்நீர் , உப்புநீர் ; கடல் ; சிறுநீர் . |
| உவருண்டான் | களர்நிலத்தில் பயிரிடப்படும் ஒருவகை நெல் . |
| உவரோதம் | உவர்க்கடல் ; இடையூறு . |
| உவல் | தழை ; சருகு |
| உவலை | தழை ; சருகு ; மரக்கொம்பு ; இழிவு ; துன்பம் ; வம்புச்சொல் . |
| உவவனம் | உபவனம் , சோலை , உய்யானம் , பூந்தோட்டம் . |
| உவவு | உவப்பு ; நிறைமதி ; மறைமதி . |
| உவள் | உயர்திணைப் பெண்பாலில் வரும் ஒரு சுட்டுப்பெயர் ; அவளுக்கும் இவளுக்கும் இடையில் உள்ளவள் ; முன் நிற்பவள் . |
| உவளகம் | அந்தப்புரம் ; சிறைச்சாலை ; காவற்கூடம் ; மதில் ; ஒருபக்கம் ; அகழி ; பள்ளம் ; வாயில் ; குளம் ; உப்பளம் ; இடைச்சேரி ; விரிவு ; நீர்நிலை ; பிரித்தல் . |
| உவளித்தல் | தூய்மை செய்தல் ; துப்புரவாக்கல் . |
| உவளுதல் | துவளுதல் ; நடுங்குதல் ; பரத்தல் . |
| உவற்றுதல் | சுரக்கச் செயதல் . |
| உவறுதல் | ஊறுதல் , சுரத்தல் . |
| உவன் | உயர்திணை ஆண்பாலில் வரும் ஒரு சுட்டுப்பெயர் ; அவனுக்கும் இவனுக்கும் இடையில் உள்ளவன் ; முன் நிற்பவன் ; பின்புறத்துள்ளவன் . |
| உவன்றி | நீர்நிலை . |
| உவனாயம் | துவைத்துக் கட்டும் மருந்து . |
| உவனித்தல் | அம்பெய்யத் தொடங்குதல் ; தூய்மை செய்தல் ; ஈரமாதல் . |
| உவனிப்பு | ஈரம் . |
| உவா | வெள்ளுவா , முழுமதிநாள் ; காருவா , அமாவாசை ; கடல் ; உகாமரம் . |
| உவாத்தி | கற்பிப்போன் , ஆசிரியன் , உபாத்தியாயன் ; வேதமோதுவிப்போன் . |
| உவாத்திகன் | கற்பிப்போன் , ஆசிரியன் , உபாத்தியாயன் ; வேதமோதுவிப்போன் . |
| உவாத்திமை | கற்பிக்கும் தொழில் . |
| உவாத்தியாயன் | காண்க : உவாத்தி . |
| உவாத்தியாயனி | ஆசிரியை . |
| உவாத்து | காண்க : உவாத்தி . |
| உவாதி | எல்லை ; கடுந்துன்பம் , பெருந்துன்பம் . |
| உவாந்தம் | காருவா , அமாவாசை ; வெள்ளுவா , பௌர்ணிமை . |
| உவாய் | ஒரு மரம் , உவாத்தேக்கு . |
| உவாலம்பம் | பழிப்பு , தூடணை . |
| உவாலம்பனம் | பழிப்பு , தூடணை . |
| உவாவுதல் | நிறைதல் . |
| உவாளி | பூட்டை ; அறுகு . |
| உவித்தல் | அவித்தல் . |
| உவிதல் | சாதல் ; அவிதல் , நீர்வற்றி யவிதல் ; காற்றில்லாமல் புழுங்கல் . |
| உவியல் | சமைத்த கறி . |
| உவை | அஃறிணைப் பன்மைப் படர்க்கைச் சுட்டுப் பெயர் ; உங்குள்ளவை , உவ்விடத்துள்ளவை . |
| உழக்கு | காற்படி ; மிதிப்பு ; கவறு உருட்டும் உழக்கு ; சிலம்பம் . |
| உழுக்கு | (வி) கலக்கு ; மிதி ; சிலம்பம் பழகு . |
| உவமைத்தொகை | உவமையுருபுதொக்கதொடர்மொழி ; மதிமுகம் , கயற்கண் என்றாற்போல வருவது . |
| உவமையாகுபெயர் | உவமையான பொருளின் பெயர் உவமேயத்திற்கு ஆகிவருவது ; 'பாவை வந்தாள்' என்பதுபோல வருவது . |
| உவமையின்மை | ஒப்பின்மை , இறைவன் எண் குணங்களுள் ஒன்று . |
| உவமையுருபு | காண்க : உவமவுருபு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 172 | 173 | 174 | 175 | 176 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உவமைத்தொகை முதல் - உழப்பு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, களர்நிலம், கடல், வரும், சுட்டுப்பெயர், உவர்நிலம், உவாத்தி, செய்தல், உழைமண், ஆசிரியன், உபாத்தியாயன், கற்பிப்போன், அமாவாசை, வேதமோதுவிப்போன், காருவா, பெயர், சிலம்பம், வருவது, உழக்கு, வெள்ளுவா, தூடணை, பழிப்பு, சருகு, உவர்க்கடல், உப்பளம், உயர்திணைப், உப்புச்சுவை, பெண், உவர்நீர், உப்புநீர், முன், நீர்நிலை, இடையில், வெல்லுதல், உப்புச்சேர்ந்த, தூய்மை

