தமிழ் - தமிழ் அகரமுதலி - உழப்புதல் முதல் - உழைத்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உழுதல் | நிலத்தைக் கிளைத்தல் ; கிண்டுதல் ; மயிரைக் கோதுதல் . |
| உழுதுண்போர் | வேளாளருள் தாமே பயிரிட்டு உண்ணும் ஒருவகையார் . |
| உழுதூண் | பயிர்த்தொழில் செய்து வாழ்தல் . |
| உழுந்து | உளுந்து . |
| உழுநர் | உழவர் . |
| உழுபடை | கலப்பை . |
| உழுவம் | எறும்பு . |
| உழுவல் | முறைமை ; குணம் ; இடைவிடாத அனபு , எழமையுந் தொடரும் அன்பு ; புணர்ச்சி . |
| உழுவலன்பு | பல பிறப்புகளில் தொடர்ந்து வந்த அன்பு , எழுமையும் தொடர்ந்த அன்பு . |
| உழுவளைப்பு | தொகுப்பு ; உழவின் சால்வளைவு . |
| உழுவான் | பிள்ளைப்பூச்சி . |
| உழுவித்துண்போர் | வேளாளருள் பிறரைக் கொண்டு பயிர் செய்வித்து வாழ்வோர் . |
| உழுவை | புலி ; ஒரு மீன்வகை ; நன்னீர் உளுவை மீன் ; குண்டலவுழுவை ; தும்பிலி . |
| உழை | இடம் ; பக்கம் ; யாழின் ஒரு நரம்பு ; மான் ; பசு ; பூவிதழ் ; ஏழனுருபு ; உவர்மண் ; விடியற்காலம் ; கதிரவன் மனைவியருள் ஒருத்தி ; வாணாசுரன் மகள் ; இடைச்சுரம் . |
| உழை | (வி) உழை என்னும் ஏவல் , பாடுபடு . |
| உழைக்கலம் | பொன் , வெள்ளி முதலியவற்றால் செய்த ஆளும் பாண்டங்கள் . |
| உழைச்சுற்றாளன் | பக்கத்தில் நின்று ஏவல் கேட்போன் . |
| உழைச்செல்வான் | நோயாளியின் பக்கத்திலிருந்து மருந்து முதலியன கொடுப்போன் ; மருத்துவனோடு உதவிக்குச் செல்பவன் . |
| உழைத்தல் | வருந்தல் ; பாடுபடுதல் ; ஈட்டுதல் ; பேசலால் எழும் ஒலி . |
| உழப்புதல் | மழுப்புதல் ; குழப்பிப் பேசுதல் ; போலிவாதஞ் செய்தல் ; காலங்கடத்துதல் . |
| உழம்புதல் | பல ஒலிகள் கலந்தொலித்தல் ; குழும்புதல் . |
| உழமண் | உவர்மண் , அழுக்கெடுக்கும் மண் . |
| உழல்தல் | அசைதல் ; அலைதல் ; சுழலுதல் ; சுற்றித்திரிதல் ; நிலைகெடுதல் . |
| உழலுதல் | அசைதல் ; அலைதல் ; சுழலுதல் ; சுற்றித்திரிதல் ; நிலைகெடுதல் . |
| உழலை | தாபம் ; உழலைமரம் ; கதவின் குடுமி ; செக்கினுறுப்பாகிய பிழிமரம் ; குறுக்கு மரம் ; கணையமரம் ; பெருவேட்கை ; ஒரு நோய் . |
| உழலைமரம் | மாட்டின் கழுத்திற் கட்டும் கட்டை ; செக்குலக்கை ; குறுக்குமரம் . |
| உழலைவேலி | வழிநடைப்பட்டுப் போகிறவர்களுக்கு இடங்கொடுத்துப் பின் உழன்று கொண்டு தன் நிலையில் நிற்கும் உழலைமரம் பொருந்திய வழியினையுடைய வேலி . |
| உழவடை | உழவு நிலத்தின் குடியுரிமை ; குடிப்பாத்தியம் . |
| உழவடைத்தல் | உழுவதற்காக நிலத்தை ஒப்படைத்தல் . |
| உழவன் | உழுபவன் ; மருதநிலத்தவன் ; உழவுமாடு ; வீரன் . |
| உழவாரப்படை | புல் செதுக்குங் கருவிவகை . |
| உழவாரம் | புல் செதுக்குங் கருவிவகை . |
| உழவு | நிலத்தை உழும்தொழில் , வேளாண்மை ; உடம்பினால் உழைக்கை . |
| உழவுகட்டி | உழும்போது பெயரும் மண்கட்டி . |
| உழவுகட்டுதல் | முதற்சால் போதல் ; உழுதல் . |
| உழவுகுண்டை | உழவுமாடு , உழவெருது . |
| உழவுகோல் | தாற்றுக்கோல் ; குதிரைச்சம்மட்டி . |
| உழவுசால் | உழவிடும் வளையம் , உழுகலப்பையினால் கீறப்பட்ட பிளவு . |
| உழவுமழை | உழுதற்கு வேண்டிய பருவமழை . |
| உழவோன் | உழவன் . |
| உழற்சி | சுழற்சி ; மனச்சுழற்சி ; சுற்றித்திரிகை ; ஆடுகை ; வருத்தம் . |
| உழற்றல் | நீர்வேட்கை . |
| உழற்றி | சுழற்சி ; மிகுதாகம் ; வருத்தம் . |
| உழற்று | (வி) சுழற்று ; கைகாலுழற்று ; காலத்தை வருத்தத்தோடு கழி ; வருந்திப் புரள் . |
| உழற்றுதல் | உழலச்செய்தல் ; அலையச்செய்தல் ; சுழற்றுதல் ; உடம்பு நோயாற் புரளுதல் ; வருந்துதல் . |
| உழறுதல் | கலங்குதல் ; அளைதல் ; கலக்குதல் ; சுழலுதல் ; உலாவல் ; மோதும்படி தள்ளுதல் ; உருக்காட்டுதல் . |
| உழன்றறுத்தல் | கடினவேலை செய்தல் ; பழகித் தேர்ச்சிபெறல் |
| உழன்றி | மாட்டின் கழத்தில் மாட்டும் கட்டை . |
| உழால் | உழுதல் , கிண்டுதல் . |
| உழி | இடம் ; பக்கம் ; ஏழனுருபு ; பொழுது ; அளவு . |
| உழிஞ்சில் | வாகைமரம் ; உன்னமரம் . |
| உழிஞை | சிறுபூளை ; கொற்றான் ; பகைவரது அரணை வளைப்போர் சூடும் மாலை ; உழிஞைத் திணை . |
| உழிதரல் | அலைதல் , திரிதல் ; சுழலல் . |
| உழு | பிள்ளைப்பூச்சி ; உழவு . |
| உழு | (வி) ஏருழு ; நிலத்தைக் கிளை . |
| உழுத்தமா | உழுந்திலிருந்து எடுத்த மா . |
| உழுத்தல் | பதனழிதல் . |
| உழுத்து | ஓர் அணிகலம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 173 | 174 | 175 | 176 | 177 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உழப்புதல் முதல் - உழைத்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சுழலுதல், உழலைமரம், உழவு, உழுதல், அலைதல், அன்பு, நிலத்தை, நிலத்தைக், கட்டை, மாட்டின், உழவன், உழவுமாடு, சுழற்சி, வருத்தம், கருவிவகை, செதுக்குங், புல், கிண்டுதல், நிலைகெடுதல், ஏழனுருபு, பக்கம், இடம், கொண்டு, உவர்மண், ஏவல், சுற்றித்திரிதல், வேளாளருள், அசைதல், செய்தல், பிள்ளைப்பூச்சி

