தமிழ் - தமிழ் அகரமுதலி - உலறுதல் முதல் - உலோகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உலுப்புதல் | உதிர்த்தல் |
| உலுப்பை | உணவுப்பண்டம் ; கோயில் முதலியவற்றிற்கு அனுப்பும் காணிக்கை ; பெரியவர்களுக்கு அனுப்பும் ஊண்பண்டம் ; அடைந்தோர்க்கு அளிக்கும் பண்டம் ; சிறுகாய் ; பண்டம் வைக்கும் பை |
| உலுவம் | வெந்தயம் |
| உலுவா | காண்க : உலுவம் ; பெருஞ்சீரகம் . |
| உலுவாவரிசி | தவசவகை |
| உலூகம் | கோட்டான் , கூகை , பேராந்தை ; ஒருவகைப் பரி ; உரல் ; குங்கிலியம் |
| உலூகலம் | உரல் ; மரஉரல் ; குங்கிலியம் ; கல்லாலமரம் |
| உலூதம் | எறும்பு ; சிலந்திப்பூச்சி |
| உலூதை | எறும்பு ; சிலந்திப்பூச்சி |
| உலை | உலைக்களம் , கொல்லனுலை ; நெருப்பு உள்ள அடுப்பு ; பாகங்செய்ய வைக்கும் நீருலை ; கம்மியர் உலை ; உலைப்பாண்டம் ; உலைதல் ; உலைச்சாலை ; அரிசியிடுவதற்கு அடுப்பில் வைக்கும் நீர் ; மனநடுக்கம் |
| உலை | (வி) உலைஎன் ஏவல் ; அழி ; கெடு ; கலை ; வருத்து |
| உலைக்களம் | கொல்லன் உலைக்கூடம் ; உலோகங்கள் உருக்குமிடம் |
| உலைக்குறடு | கம்மியர் கருவியுள் ஒன்று , உலைமுகத்தில் இரும்பு எடுக்கும் இடுக்கி |
| உலைச்சல் | அலைவு ; கலக்கம் |
| உலைசல் | கெடுதல் , கேடு |
| உலைத்தண்ணீர் | காண்க : உலைநீர் |
| உலைத்தல் | அலைத்தல் ; அழித்தல் ; கெடுத்தல் ; கலைத்தல் ; முறியடித்தல் ; மனத்தைக் கலக்கல் |
| உலைத்துருத்தி | கொல்லன் உலையில் உள்ள அடுப்பு ஊதும் துருத்தி |
| உலைதல் | அலைதல் ; நிலைகுலைதல் ; அழிதல் ; கெடுதல் ; பலங்குறைதல் ; மனங்கலங்கல் ; வருந்துதல் ; அஞ்சுதல் ; கலைந்துபோதல் . |
| உலைநீர் | சோறு சமைப்பதற்குக் கொதிக்க வைக்கும் நீர் ; காய்ந்த இரும்பைத் தோய்க்கும் நீர் |
| உலைப்பு | அலைப்பு ; முறியடிக்கை ; வருத்துகை ; அழிவு |
| உலைமுகம் | கொல்லன் உலைக்கூடம் . |
| உலைமூக்கு | கொல்லன் உலையில் துருத்தி வைக்கும் தொளை |
| உலைமூடி | உலைப்பானையின் மேல்மூடி |
| உலையாணிக்கோல் | உலைமுகத் திருப்புக்கோல் , சூட்டுக்கோல் |
| உலையேற்றுதல் | உலைவைத்தல் , உலைப்பானையை அடுப்பில் வைத்தல் |
| உலைவு | அழிவு ; நடுக்கம் ; வறுமை ; கலக்கம் ; தோல்வி ; அலைவு ; ஊக்கக்குறைவு |
| உலைவைத்தல் | உலையேற்றுதல் , உலைப்பானையை அடுப்பில் வைத்தல் ; பிறனுக்குக் கேடு சூழ்தல் |
| உலோகக்கட்டி | உலோகங் கலந்த கட்டி ; பஞ்சலோகத்தையுருக்கிக் கூட்டிய கட்டி . |
| உலோகபாலர் | காண்க : உலகபாலர் |
| உலோகம் | உலகம் ; மாழை ; பஞ்சலோகம் ; பொன் முதலிய தாதுப்பொருள் ; கனிப்பொருள் |
| உலறுதல் | காய்தல் ; வற்றுதல் ; சிதைதல் ; பொலிவழிதல் ; சினத்தல் ; உரை தடுமாறல் ; வருந்துதல் |
| உலா | ஊர்வலம் , பவனி ; உலா வருவதைப்பாடும் நேரிசைக் கலிவெண்பாவாலாய ஒரு சிற்றிலக்கியவகை |
| உலாங்கம் | உலாகுமம் , மனோசிலை |
| உலாங்கிலி | காவட்டம்புல் ; கிலுகிலுப்பை |
| உலாங்கு | காவட்டம்புல் ; கிலுகிலுப்பை |
| உலாஞ்சுதல் | அசைந்தாடுதல் ; தலைசுற்றுதல் |
| உலாத்து | உலாவுகை . |
| உலாத்துக்கட்டை | கதவு நின்றாடும் சுழியாணி , முளையாணி , கதவின் குடுமி |
| உலாத்துக்கதவு | பிணையல் கதவு |
| உலாத்துதல் | உலாவுதல் ; உலாவச்செய்தல் ; பரவச்செய்தல் |
| உலாப்போதல் | ஊர்வலம் வருதல் |
| உலாம் | ஓர் உவமச்சொல் |
| உலாமடல் | ஒரு சிற்றிலக்கியவகை , ஒரு பெண்ணைக் கனவில் கூடியவன் விழித்தபின் அவள் பொருட்டு மடலூர்வதாகக் கலிவெண்பாவினால் பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகை |
| உலாவருதல் | சஞ்சரித்தல் ; ஊர்வலம் வருதல் ; இயங்குதல் ; ஓடிப்பரவுதல் ; சூழ்தல் ; சாரிபோதல் ; மெல்ல நடத்தல் ; அசைதல் |
| உலாவுதல் | சஞ்சரித்தல் ; ஊர்வலம் வருதல் ; இயங்குதல் ; ஓடிப்பரவுதல் ; சூழ்தல் ; சாரிபோதல் ; மெல்ல நடத்தல் ; அசைதல் |
| உலிமணி | நாயுருவி |
| உலிற்கள் | வெண்கலம் |
| உலு | தினை முதலியவற்றின் பதர் |
| உலுக்குதல் | குலுக்குதல் ; அசைத்தல் ; நடுங்குதல் . |
| உலுக்குமரம் | மிண்டிமரம் ; நெம்புகட்டை . |
| உலுங்குதல் | கணீர்' என்று ஒலித்தல் |
| உலுத்தத்தனம் | கடும்பற்றுள்ளம் , உலோபகுணம் |
| உலுத்தம் | கடும்பற்றுள்ளம் , உலோபகுணம் |
| உலுத்தன் | பொருளாசைக்காரன் , உலோபி ; புல்லன் ; வேடன் |
| உலுத்துதல் | உதிர்த்தல் |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 170 | 171 | 172 | 173 | 174 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலறுதல் முதல் - உலோகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், வைக்கும், கொல்லன், ஊர்வலம், அடுப்பில், சூழ்தல், வருதல், நீர், காண்க, கிலுகிலுப்பை, காவட்டம்புல், கட்டி, உலைவைத்தல், உலைப்பானையை, வைத்தல், சிற்றிலக்கியவகை, உலாவுதல், நடத்தல், அசைதல், கடும்பற்றுள்ளம், உலோபகுணம், மெல்ல, சாரிபோதல், உலையேற்றுதல், சஞ்சரித்தல், இயங்குதல், ஓடிப்பரவுதல், கதவு, உலையில், சிலந்திப்பூச்சி, உலைக்களம், உள்ள, அடுப்பு, எறும்பு, குங்கிலியம், அனுப்பும், பண்டம், உலுவம், உரல், கம்மியர், உலைதல், உலைநீர், உதிர்த்தல், துருத்தி, வருந்துதல், கேடு, கெடுதல், உலைக்கூடம், அலைவு, கலக்கம், அழிவு

