முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » உழைத்துக்கொடுத்தல் முதல் - உள்ளபசுமை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - உழைத்துக்கொடுத்தல் முதல் - உள்ளபசுமை வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
உள்வாரம் | மனவிருப்பம் ; அந்தரங்கச் சார்பு ; மேல்வாரம் ; விளைச்சலில் நிலமுடையானுக்கு வரும் பங்கு . |
உள்விழுதல் | உள்ளாதல் ; குறைதல் ; சுருங்குதல் ; அடங்குதல் ; உள்ளே போதல் ; காரியத்தின் பொருட்டு நட்புச்செய்தல் ; உள்வீழ்தல் . |
உள்வீழ்தல் | சுருங்குதல் ; குறைதல் . |
உள்வெக்கை | உள்ளே பற்றியுள்ள வெப்பம் . |
உள்வெட்டு | உயர்ந்த மாற்றுப்பொன் ; உரையாணியின் உள்வெட்டுக் குறி ; மரத்தின் உட்பகுதிப் பலகை . |
உள்வெண்டயம் | அரசர் ஏறும் குதிரைக்குக் காலில் அணியும் பித்தளை வளையம் ; பொதி மாட்டின் முதுகில் வைக்கும் அணை . |
உள்வெதுப்பு | காண்க : உள்வெக்கை . |
உள்ள | உண்டாயிருக்கிற ; உண்மையான . |
உள்ளக்கருத்து | மனத்தினுள்ளம் , உள்நோக்கம் ; உள்ளத்தில் கருதும் எண்ணங்கள் . |
உள்ளக்களிப்பு | மனமகிழ்ச்சி . |
உள்ளக்காட்சி | மானதக் காட்சி , எண்ணத்திரையில் காணும் பொருள்கள் . |
உள்ளக்குறிப்பு | காண்க : உள்ளக்கருத்து . |
உள்ளகம் | நெஞ்சு , மனம் . |
உள்ளங்கால் | உள்ளடி , காலடியின் கீழ்ப்பாகம் . |
உள்ளங்கை | அகங்கை ; கையின் நடுப்பகுதி . |
உள்ளங்கைநெல்லிக்கனி | பொருள்தெளிவு . |
உள்ளடக்கம் | எண்ணங்களை வெளிவிடாமை ; உள்ளே மறைத்துவைத்த பொருள் , உட்பொதி பொருள் . |
உள்ளடக்குதல் | உட்படச்செய்தல் ; மறைத்தல் . |
உள்ளடங்குதல் | உட்பட்டிருத்தல் . |
உள்ளடி | உள்ளங்கால் ; அண்மை ; கமுக்கம் ; நெருங்கிய சுற்றம் . |
உள்ளடிக்குள் | வீட்டில் உள்ளவர்களுக்குள்ளே . |
உள்ளடிநிலம் | மதகடிநிலம் ; ஏரியை அடுத்துள்ள நிலம் . |
உள்ளடை | உள்ளீடாக இடப்படும் பொருள் . |
உள்ளது | உள்பொருள் ; உண்மை ; மெய் ; உண்மைப்பொருள் ; ஆன்மா ; ஏற்பட்டது , விதிக்கப்பட்டது . |
உள்ளந்தண்டு | கழத்தெலும்பு . |
உள்ளந்தாள் | உள்ளங்கால் . |
உள்ளநாள் | வாழ்நாள் , ஆயுட்காலம் ; ஓரிடத்தில் இருக்கும் காலம் . |
உள்ளநிகழ்ச்சி | மனக்கருத்து . |
உள்ளநெறி | சம்பவப் பிரமாணம் , பொருளின் இயற்கைக் குணத்தைச் சுட்டிச் சொல்வதாகிய ஓர் அளவை . |
உள்ளநோய் | மனநோய் , மனக்கவலை . |
உள்ளப்புணர்ச்சி | தலைவனும் தலைவியும் உள்ளத்தால் கூடும் கூட்டம் , இருவருள்ளமும் ஒன்று படுகை . |
உள்ளபசுமை | ஐயமற்ற உண்மை ; மெய்வாழ்வு |
உழைத்துக்கொடுத்தல் | பணி செய்து பொருள் ஈட்டிக் கடன் முதலியன தீர்த்தல் ; பெற்றோர் முதலியோரைப் பேணுதல் ; வீணாகப் பாடுபடுதல் . |
உழைதல் | துன்பமுறல் ; இரைதல் . |
உழைப்பறித்தல் | சேற்றில் உழலுதல் ; வருந்தி முயலுதல் . |
உழைப்பாளி | உழைப்பவர் ; முயற்சியுள்ளவர் . |
உழைப்பு | முயற்சி ; வருந்திப் பாடுபடுகை ; வருந்தியீட்டுகை ; சம்பாத்தியம் . |
உழைமண் | காண்க : உழமண் . |
உழையர் | பக்கத்தார் ; ஏவலாளர் ; அமைச்சர் , மந்திரிமார் ; ஒற்றர் . |
உழையிருந்தான் | உடனிருப்போன் ; அமைச்சன் ; நோயாளிக்கு உதவிபுரிபவன் . |
உழையோர் | உழையர் ; மந்திரிகளின் நட்பாளர் . |
உழைவு | யாழின் உள்ளோசை . |
உள் | உள்ளிடம் ; உள்ளம் ; மனம் ; இடம் ; மறை ; மனவெழுச்சி ; ஒரு குறிப்புவினைப் பகுதி ; தொழிற்பெயர் விகுதி ; ஏழாம வேற்றுமை உருபு ; உள்ளான் என்னும் பறவை . |
உள்குதல் | உள்ளுதல் , நினைத்தல் ; உள்ளழிதல் ; மடிதல் . |
உள்படுதல் | மனமொப்பி நடத்தல் ; அறிதல் ; அடங்கியிருத்தல் . |
உள்பொருள் | உள்ள பொருள் , உலகத்தில் உளவாயிருக்கும் பொருள் . |
உள்மருந்து | உள்ளுக்கு அருந்தும் மருந்து . |
உள்மனை | ஊர்க் குடியிருப்பு மனை . |
உள்மானம் | சிற்றெல்லை . |
உள்வட்டம் | நாணயமாற்றில் பெறும் ஊதியம் . |
உள்வணக்கம் | மனவணக்கம் , மானதபூசை ; அந்தரங்க வழிபாடு . |
உள்வயிரம் | மரங்களின் உட்பக்கத்து வயிரம் , அகக்காழ் ; மனத்தில் நெடுங்காலமாக உள்ள சினம் , உட்பகை , செற்றம் . |
உள்வரி | வேற்று வடிவம் , மாறுவேடம் ; சிறிய அளவுள்ள வரி ; சிற்றாயம் . |
உள்வலிப்பு | ஒருவகை நோய் . |
உள்வழக்கு | உள்ளதை உண்டு என்பது . |
உள்வழிகடந்தோன் | கடவுள் . |
உள்வளைவு | உட்கவிவு . |
உள்வாங்குதல் | உள்ளே மீளுதல் ; உள்ளுக்கு இழுத்தல் ; தோற்றுவித்தல் . |
உள்வாசல் | முற்றம் . |
உள்வாய் | உட்பக்கம் ; வாயின் உட்பகுதி ; ஏரியின் உட்பக்கம் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 174 | 175 | 176 | 177 | 178 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உழைத்துக்கொடுத்தல் முதல் - உள்ளபசுமை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பொருள், உள்ளே, உள்ளங்கால், உள்ள, காண்க, உள்பொருள், உண்மை, உழையர், உட்பக்கம், உள்ளுக்கு, மனம், உள்வீழ்தல், சுருங்குதல், உள்வெக்கை, உள்ளக்கருத்து, குறைதல், உள்ளடி