முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அட்டிப்பேறு முதல் - அடவிச்சொல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அட்டிப்பேறு முதல் - அடவிச்சொல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அடலார் | பகைவர் ; போர்வீரர் . |
| அடலி | அடுக்களை வேலை பார்க்கும் ஏவற் பெண் . |
| அடலை | சாம்பல் ; திருநீறு ; துன்பம் ; சுடுபாடு ; போர் ; போர்க்களம் . |
| அடலைமுடலை | வீண்பேச்சு . |
| அடவாதி | பிடிவாதக்காரன் ; தீராப் பகையுள்ளவன் . |
| அடவி | காடு ; சோலை ; நந்தவனம் ; திரள் , கூட்டம் தொகுதி . |
| அடவிக்கொல் | காண்க : கோரோசனை . |
| அடவிச்சொல் | காண்க : கோரோசனை . |
| அட்டு | பனாட்டு , பனைவெல்லம் ; சமைக்கப்பட்டது . |
| அட்டுதல் | அழித்தல் ; குற்றுதல் ; இடுதல் ; அள்ளுதல் ; எடுத்தல் ; வடிதல் ; வடித்தல் ; சமைத்தல் ; வார்த்தல் ; சொரிதல் ; சுவைத்தல் ; செலுத்துதல் ; தான சாசனம் அளித்தல் . |
| அட்டுப்பு | காய்ச்சப்பட்ட உப்பு . |
| அட்டும் | ' வரட்டும் ' என்றாற்போல வரும் ஒரு வியங்கோள் விகுதி . |
| அட்டூழியம் | தகாதசெய்கை ; தீம்பு , கொடுமை . |
| அட்டை | நீர்வாழ் உயிர்களுள் ஒன்று ; செருப்பினடி ; காகித அட்டை ; மிகுகனமுள்ள தாள் ; புத்தக மேலுறை . |
| அட்டையாடல் | உடல் துண்டிக்கப்பட்டாலும் அட்டைபோல வீரனின் உடல் வீரச் செயல் காட்டி ஆடுதல் . |
| அட்டோலகம் | உல்லாசம் ; பகட்டு . |
| அடக்கம் | மனமொழிமெய்கள் அடங்குகை ; கீழ்ப்படிவு ; பணிவு ; அடங்கிய பொருள் ; மறை பொருள் ; கொள்முதல் ; பிணம் அடக்கம் செய்தல் . |
| அடக்கம்பண்ணுதல் | உள்ளடக்கி வைத்தல் , மறைத்தல் சேமஞ்செய்தல் ; புதைத்தல் ; பிணம் முதலியவற்றைப் புதைத்தல் . |
| அடக்கல் | மறைத்தல் ; கீழ்ப்படுத்துதல் ; உட்படுத்துதல் ; ஒடுக்கல் ; பணியச் செய்தல் . |
| அடக்கியல்வாரம் | சிலவகைக் கலிப்பாவின் இறுதியில் வரும் சுரிதகம் என்னும் உறுப்பு . |
| அடக்குமுறை | அடக்கியாளும் முறை ; கண்டித்து அடக்குகை . |
| அடகு | இலை ; இலைக்கறி , கீரை ; ஈட்டுப் பொருள் ; கொதுவை ; மகளிர் விளையாட்டு வகை . |
| அடங்கல் | எல்லாம் முழுதும் ; தங்குமிடம் ; பயிர்செய்கைக் கணக்கு ; செய்யத்தக்கது . |
| அடங்கல்முறை | முதல் ஏழு தேவாரத் திருமுறைகளைக் கொண்ட நூல் ; சம்பந்தர் , அப்பர் , சுந்தரர் என்னும் மூவர் பாடிய பக்திப்பாடல்கள் . |
| அடங்கலன் | அடங்காதவன் ; பகைவன் ; மனமடக்க மற்றவன் . |
| அடங்கலும் | அனைத்தும் , முழுதும் ; எல்லோரும் . |
| அடங்காப்பிடாரி | எவர்க்கும் அடங்காதவள் . |
| அடங்காவாரிதி | கடலுப்பு ; மூத்திரம் . |
| அடங்குதல் | அமைதல் ; நெருங்குதல் ; கிடத்தல் ; கீழ்ப்படிதல் ; சுருங்குதல் ; நின்றுபோதல் ; படிதல் ; மறைதல் ; புலன் ஒடுங்குதல் ; உறங்குதல் ; சினையாதல் . |
| அடசுதல் | செறிதல் ; சிறிது விலகுதல் . |
| அடஞ்சாதித்தல் | வன்மங்கொள்ளுதல் . |
| அடடா | வியப்புக்குறிப்பு ; இகழ்ச்சிக் குறிப்பு ; இரக்கக் குறிப்பு . |
| அடத்தி | வாசி , வட்டமாகக் கழிக்கும் காசு ; தரகு ; மொத்த வணிகம் . |
| அடதாளம் | ஏழுவகைத் தாளங்களுள் ஒன்று . |
| அடப்பங்கொடி | கொடிவகை . |
| அடப்பம் | காண்க : அடைப்பம் . |
| அடப்பம்விதை | வாதுமைப பருப்பு . |
| அடப்பன் | பரவர் பட்டப்பெயர் . |
| அடப்பனார் | பரவர் பட்டப்பெயர் . |
| அடம் | ஈனம் ; சஞ்சாரம் ; பொல்லாங்கு ; பிடிவாதம் ; கொட்டைப்பாசி . |
| அடம்பு | அடப்பங்கொடி ; கடம்பு ; கொன்றை . |
| அடயோகம் | நால்வகை யோகங்களுள் ஒன்று . |
| அடர் | தகடு ; தகட்டு வடிவம் ; நெருக்குகை ; செறிவு , நெருக்கம் ; பூவிதழ் . |
| அடர்த்தல் | நெருக்குதல் ; அமுக்குதல் வருத்துதல் ; போர் புரிதல் ; தாக்குதல் ; கொல்லுதல் ; கெடுத்தல் . |
| அடர்த்தி | நெருக்கம் , செறிவு . |
| அடர்தல் | மிகுதல் ; செறிதல் ; நெருங்கல் ; வருந்தல் ; பொருதல் ; துன்புறுதல் ; தட்டி உருவாக்குதல் . |
| அடர்ப்பம் | காண்க : அடர்த்தி . |
| அடர்பு | காண்க : அடர்த்தி . |
| அடர்வு | காண்க : அடர்த்தி . |
| அடர்மை | நொய்ம்மை . |
| அடரடிபடரடி | பெருங்குழப்பம் . |
| அடல் | வலிமை ; வெற்றி ; போர் ; கொலை ; பகை ; மீன்வகை . |
| அடலம் | மாறாமை ; விகாரமடையாமை . |
| அட்டிப்பேறு | தான சாசனத்தால் கொடுக்கப் பட்ட உரிமை . |
| அட்டிமை | ஓமம் ; சீரகம் . |
| அட்டியல் | காண்க : அட்டிகை . |
| அட்டில் | சமையலறை , அடுக்களை , மடைப்பள்ளி , வேள்விச் சாலை . |
| அட்டிற்சாலை | சமையலறை , அடுக்களை , மடைப்பள்ளி , வேள்விச் சாலை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அட்டிப்பேறு முதல் - அடவிச்சொல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, அடர்த்தி, அடுக்களை, ஒன்று, பொருள், போர், பட்டப்பெயர், பரவர், அடப்பங்கொடி, செறிவு, சமையலறை, சாலை, வேள்விச், மடைப்பள்ளி, குறிப்பு, நெருக்கம், புதைத்தல், உடல், அட்டை, வரும், கோரோசனை, அடக்கம், பிணம், முழுதும், என்னும், மறைத்தல், செய்தல், செறிதல்

