தமிழ் - தமிழ் அகரமுதலி - உச்சிவீடு முதல் - உட்கோபம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உசா | ஆராய்ச்சி , ஆலோசனை , ஒற்றன் ; ஒற்றர் சூழ்ச்சி ; வினா ; மூக்குத்தி . |
| உசாக்கையர் | ஆராய்வோர் ; ஆலோசனை செய்வோர் . |
| உசாத்துணை | உற்ற துணைவர் . |
| உசாதல் | காண்க : உசாவுதல் . |
| உசாவுதல் | ஆராய்தல் ; விணாவுதல் , கேட்டல் . |
| உசார் | விழிப்பு . |
| உசி | கூர்மை ; விருப்பம் . |
| உசிதம் | தகுதி ; மேன்மை ; உயர்ந்தது ; அழகு ; வளைகை ; கூப்பிடுகை ; நீர் . |
| உசிதன் | பாண்டியன் . |
| உசிப்பித்தல் | சேர்த்தல் . |
| உசிர் | உயிர் . |
| உசிரம் | செவ்வியம் ; இடபம் ; கதிர் ; மிளகு ; இலாமிச்சை வேர் . |
| உசில் | காண்க : உசிலை . |
| உசிலம் | காண்க : உசிலை . |
| உசிலித்தல் | கூட்டுப்பொடி கலந்து தாளித்தல் . |
| உசிலை | சீக்கிரிமரம் . |
| உசீரம் | இலாமிச்சை வேர் ; வெட்டிவேர் . |
| உசு | உளு என்னும் புழு . |
| உசுப்புதல் | எழுப்புதல் ; வெருட்டுதல் . |
| உசும்புதல் | அசைதல் ; அதட்டுதல் . |
| உசுவாசநிசுவாசம் | மூச்சுப் போக்குவரவு . |
| உசுவாசம் | உட்சுவாசம் , மூச்சை உள்ளே இழுத்தல் . |
| உசூர் | அரசியல் நடத்தும் இடம் . |
| உஞ்சட்டை | மெலிவு . |
| உஞ்சம் | காண்க : உஞ்சவிருத்தி . |
| உஞ்சல் | ஊஞ்சல் . |
| உஞ்சவிருத்தி | உதிர்ந்த நெல் முதலானவற்றைப் பொறுக்கிச் சேர்த்து வாழ்தல் ; அரிசிப் பிச்சையெடுத்து நடத்தும் வாழ்க்கை . |
| உஞ்சு | நாயைக் கூப்பிடும் ஒலிக்குறி . |
| உஞற்று | ஊக்கம் ; முயற்சி ; இழுக்கு ; வழக்கு . |
| உஞற்றுதல் | முயலுதல் ; செய்தல் ; தூண்டுதல் . |
| உட்கட்டு | வீட்டின் உட்பகுதி ; அந்தப்புரம் ; சிறுமியர் குழந்தைப் பருவத்தில் அணியும் ஒரு வகைச் சிறுதாலி ; மாதர் கழுத்திற் கட்டும் ஒரு மணிவடம் , உட்கட்டுமணி . |
| உட்கண் | அறிவு , ஞானம் . |
| உட்கதவு | திட்டிக் கதவு . |
| உட்கந்தாயம் | நிலக்கிழாருக்குக் கட்டும் வரி . |
| உட்கரணம் | காண்க : அந்தக்கரணம் . |
| உட்கரு | உள்ளே அடங்கியிருக்கும் பொருள் . |
| உட்கருத்து | உட்பொருள் ; கருந்துரை ; ஆழ்ந்த கருத்து ; மனக்கருத்து . |
| உட்கருவி | அந்தக்கரணம் ; அவை : மனம் , புத்தி , சித்தம் , அகங்காரம் . |
| உட்கள்ளம் | உள் வஞ்சகம் ; புண்ணினுள் நஞ்சு . |
| உட்காய்ச்சல் | உள்ளாக அடிக்கும் சுரம் ; உள்ளெரிச்சல் . |
| உட்கார் | பகைவர் . |
| உட்கார்தல் | அமர்தல் , வீற்றிருத்தல் . |
| உட்காருதல் | அமர்தல் , வீற்றிருத்தல் . |
| உட்கிடக்கை | காண்க : உட்கருத்து . |
| உட்கிடை | உட்கருத்து ; பேரூருள் அடங்கிய சிற்றூர் . |
| உட்கிராந்துதல் | வேரூன்றுதல் ; மெலிதல் . |
| உட்கு | அச்சம் ; நாணம் ; மிடுக்கு ; மதிப்பு . |
| உட்குத்தகை | கீழ்க்குத்தகை . |
| உட்குற்றம் | காண்க : உட்பகை . |
| உட்குறிப்பு | உள்ளக் குறிப்பு , மனக்குறிப்பு . |
| உட்கூதல் | உட்குளிர் , உடம்பினுள்ளாக உண்டாகும் குளிர் . |
| உட்கை | உள் உளவாள் ; உட்பக்கம் ; உள்ளங்கை ; உட்கைச்சுற்று . |
| உட்கைச்சுற்று | நாட்டியத்தில் இடக்கைப் புறமாகச் சுற்றுகை . |
| உட்கொள்ளல் | தன்னகத்துக் கொள்ளுதல் ; உட்கருதுதல் ; உண்ணுதல் ; உள்ளிழுத்தல் . |
| உட்கொள்ளுதல் | தன்னகத்துக் கொள்ளுதல் ; உட்கருதுதல் ; உண்ணுதல் ; உள்ளிழுத்தல் . |
| உட்கோட்டை | உள் அரண் . |
| உட்கோபம் | வெளியிலே தோன்றாமல் உள்ளடங்கிய சினம் . |
| உச்சிவீடு | உச்சிவேளையில் மழை விட்டிருக்கை , இடைவிடுகை . |
| உச்சிவெளி | உச்சிவேளையில் மழை விட்டிருக்கை , இடைவிடுகை . |
| உச்சிவெறி | உச்சிவேளையில் மழை விட்டிருக்கை , இடைவிடுகை . |
| உச்சிவேர் | மூலவேர் , ஆணிவேர் . |
| உச்சீவனம் | உய்தல் , பிழைத்தல் |
| உச்சீவித்தல் | பிழைத்தல் ; இறப்பினின்று தப்பிப் பிழைத்தல் ; ஈடேறுதல் . |
| உச்சுக்காட்டுதல் | நாயை ஏவல் . |
| உச்சுக்கொட்டுதல் | வெறுப்புக்குறி காட்டுதல் . |
| உச்சுதல் | இலக்கில் காய் முதலியன எறிதல் ; சூழ்ச்சியால் வெல்லுதல் ; பிறர் பொருளைக் கவர்தல் . |
| உச்சுவாசம் | மூச்சை உள்ளே வாங்குகை , மூச்சை உள்ளிழுத்தல் . |
| உச்சூடை | கொடிக்கம்பத்தின் நுனி . |
| உச்சைச்சிரவம் | இந்திரன் குதிரை . |
| உசகம் | ஆமணக்கஞ் செடி . |
| உசம் | நகரம் . |
| உசரிதம் | நெருஞ்சில் . |
| உசவு | மசகு , வைக்கோற் கரியும் எண்ணெயும் சேர்ந்த கலவை ; இயந்திரங்களுக்கு இடும் மைக்குழம்பு . |
| உசவுதல் | காண்க : உசாவுதல் ; |
| உசற்காலம் | வைகறை , சூரியன் உதிப்பதற்கு முன் ஐந்து நாழிகைக் காலம் . |
| உசனன் | சுக்கிரன் , வெள்ளியாகிய கோள் . |
| உசனார் | சுக்கிரன் , வெள்ளியாகிய கோள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 147 | 148 | 149 | 150 | 151 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உச்சிவீடு முதல் - உட்கோபம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பிழைத்தல், உள்ளிழுத்தல், இடைவிடுகை, விட்டிருக்கை, உட்கருத்து, உள்ளே, மூச்சை, உச்சிவேளையில், உசிலை, உசாவுதல், உண்ணுதல், உட்கருதுதல், சுக்கிரன், கோள், வெள்ளியாகிய, கொள்ளுதல், அமர்தல், உஞ்சவிருத்தி, நடத்தும், வேர், இலாமிச்சை, கட்டும், அந்தக்கரணம், உட்கைச்சுற்று, வீற்றிருத்தல், ஆலோசனை, தன்னகத்துக்

