தமிழ் - தமிழ் அகரமுதலி - உடலுநர் முதல் - உடுப்பு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உடனிகழ்ச்சி | ஒருங்கு நடைபெறுதல் . |
| உடனிகழ்தல் | ஒருங்கு நடைபெறுதல் . |
| உடனிகழ்வான் | துணைவன் . |
| உடனிகழ்வு | காண்க : உடனிகழ்ச்சி . |
| உடனிலை | கூடி நிற்கை , கூடியிருத்தல் ; உடனிருந்த இருவரைப் பாடும் ஒரு புறத்துறை ; தம்முள் இயைந்து நிற்றல் ; வேற்றுநிலை இல்லாதது . |
| உடனிலைச் சிலேடை | ஒரு பாட்டு நேரே வரும் பொருளையன்றி வேறு ஒரு பொருளும் கொண்டு நிற்கும் அணி . |
| உடனிலைச் சொல் | காண்க : ஒப்புமைக் கூட்டம் . |
| உடனிலைமெய்ம்மயக்கம் | ர ,ழ என்பவை ஒழிந்த பதினாறு மெய்களுள் ஒவ்வொன்றும் தன்னுடன் தான் நின்று மயங்குகை . |
| உடனுக்குடன் | அப்போதைக்கப்போது . |
| உடனுறை | கூடி வாழ்தல் ; ஒரு நிலத்தில் உடனுறைகின்ற கருப்பொருளால் பிறிதுபொருள் பயப்ப மறைத்துக்கூறும் இறைச்சிப்பொருள் . |
| உடனுறைவு | ஒன்றாக வாழ்தல் ; புணர்ச்சி . |
| உடனே | தாமதமின்றி ; ஒருசேர ; முழுக்க . |
| உடனொத்தவன் | சமானமானவன் . |
| உடு | விண்மீன் ; அகழி ; அம்பு ; அம்புத்தலை ; அம்பினிறகு ; ஓடக்கோல் ; சீக்கிரிமரம் ; ஆடு . |
| உடுக்கு | ஒருவகைச் சிறு பறை ; இடைசுருங்கு பறை . |
| உடுக்கை | இடைசுருங்கு பறை ; சீலை ; உடுத்தல் . |
| உடுக்கோன் | விண்மீன்களுக்கு அரசனான சந்திரன் . |
| உடுகாட்டி | காண்க : பொன்னாங்காணி . |
| உடுண்டுகம் | வாகைமரம் . |
| உடுத்தாடை | சிற்றாடை . |
| உடுத்துதல் | ஆடையணிவித்தல் . |
| உடுப்பு | ஆடை ; அங்கி முதலியன . |
| உடலுநர் | பகைவர் . |
| உடலுருக்கி | கணைச்சூடு . |
| உடலெடுத்தல் | பிறத்தல் ; உடல் நன்றாகத்தேறுதல் ; உடல் கொழுத்தல் . |
| உடலெழுத்து | மெய்யெழுத்து . |
| உடலோம்பல் | உடம்பை நன்முறையில் வளர்த்தல் , உடலைப் போற்றுதல் . |
| உடற்கரித்தல் | தோள்தட்டுதல் . |
| உடற்கருவி | மெய்காப்பணி ; கவசம் . |
| உடற்காப்பு | மெய்காப்பணி ; கவசம் . |
| உடற்காவல் | மெய்காப்பணி ; கவசம் . |
| உடற்குறை | உறுப்புக் குறை ; தலையற்ற உடல் , கவந்தம் . |
| உடற்கூறு | உடலிலக்கணம் . |
| உடற்கொழுப்பு | குடற்கொழுப்பேறுதல் ; உணவில் வெறுப்புண்டாக்கும் ஒருவகை நோய் . |
| உடற்சி | கோபம் ; பெருஞ்சினத்தோடு பொருதல் ; பகைத்தல் . |
| உடற்றல் | பெருஞ்சினம் . |
| உடற்றுதல் | வருத்துதல் ; சினமூட்டுதல் ; போரிடுதல் ; கெடுத்தல் ; செலுத்துதல் . |
| உடறுதல் | சினத்தல் . |
| உடன் | ஒக்க , ஒருசேர , அப்பொழுதே ; மூன்றாம் வேற்றுமையின் சொல்லுருபு . |
| உடன்கட்டையேறுதல் | இறந்த கணவனுடன் மனைவியும் ஈமத்தீயில் புகுந்து இறத்தல் . |
| உடன்கற்றல் | ஒருவருடன் கற்றல் ; ஒரு சாலையில் ஒருங்கு கற்றல் ; ஒரு வகுப்பில் ஒருங்கு கற்றல் . |
| உடன்கூட்டத்ததிகாரி | சோழர் காலத்து ஊர்ச்சபைத் தலைவன் . |
| உடனகூட்டாளி | கூட்டுப்பங்காளி ; ஒத்தநிலையுடையவன் . |
| உடன்கூட்டு | ஒன்றுகூட்டு ; பங்காளியாயிருத்தல் . |
| உடன்கையில் | உடனே . |
| உடன்சேர்வு | ஒன்றனோடு சேர்வது ; அனுபந்தம் , பின்னிணைப்பு . |
| உடன்பங்கு | சரிபங்கு ; கூட்டுப்பங்கு . |
| உடன்படல் | காண்க : உடன்படுதல் , நூல் மதங்கள் ஏழனுள் ஒன்று . |
| உடன்படிக்கை | ஒப்பந்தம் , சம்மதப் பத்திரம் ; உறுதிப்பாடு . |
| உடன்படுத்துதல் | இணக்குதல் . |
| உடன்படுதல் | இசைதல் , சம்மதித்தல் . |
| உடன்பாட்டுவினை | விதிவினை |
| உடன்பாடு | மனப்பொருத்தம் ; இசைவு . |
| உடன்பாடுவான் | பக்கப்பாட்டுக்காரன் . |
| உடன்பிறந்தான் | கூடப்பிறந்தவன் . |
| உடன்பிறந்தாள் | கூடப்பிறந்தவள் . |
| உடன்பிறப்பு | கூடப்பிறக்கை , ஒரு வயிற்றில் பிறத்தல் சகோதரத்துவம் . |
| உடன்புணர்ப்பு | சமவாயம் , சம்பந்தம் , கூட்டம் . |
| உடன்போக்கு | கூடப்போதல் ; களவில் தலைவி தன் பெற்றோர் அறியாமல் தலைவனுடன் செல்லுதல் . |
| உடன்மாணாக்கன் | ஓர் ஆசிரியரிடம் ஒருவனோடு சேர்ந்து கற்பவன் . |
| உடன்வந்தி | கூடவே வருவது . |
| உடன்வயிற்றோர் | ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர் , உடன்பிறந்தவர் . |
| உடன்வயிறு | ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர் , உடன்பிறந்தவர் . |
| உடன்றல் | சினத்தல் ; போர் . |
| உடனடி | உடனே . |
| உடனாதல் | கூடிநிற்றல் . |
| உடனாளி | கூட்டாளி ; சொத்துள்ளவன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 149 | 150 | 151 | 152 | 153 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலுநர் முதல் - உடுப்பு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒருங்கு, உடனே, மெய்காப்பணி, கவசம், கற்றல், வயிற்றில், உடல், உடன்பிறந்தவர், பிறந்தவர், தாய், உடன்படுதல், சினத்தல், இடைசுருங்கு, கூடி, நடைபெறுதல், உடனிகழ்ச்சி, உடனிலைச், கூட்டம், சொல், ஒருசேர, வாழ்தல், பிறத்தல்

