தமிழ் - தமிழ் அகரமுதலி - உகிரம் முதல் - உச்சிவினை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உச்சரிப்பு | பலுக்குகை ; மந்திரோச்சாரணை ; எழுத்தின் ஓசை . |
| உச்சலம் | மனம் . |
| உச்சவம் | திருவிழா ; செல்வம் . |
| உச்சவீடு | உச்சராசி ; உதயத்துக்கு ஏழாமிடம் . |
| உச்சாகம் | காண்க : உற்சாகம் . |
| உச்சாசனம் | கொலை . |
| உச்சாடனம் | ஓட்டுந்தொழில் ; பேய் முதலியவற்றை ஏவுகை ; பேயோட்டுகை . |
| உச்சாணி | உச்சி ; மிகுந்த உயரம் . |
| உச்சாயம் | உற்சாகம் ; உயர்வு . |
| உச்சாரணம் | உச்சரிப்பு . |
| உச்சாரணை | உச்சரிப்பு . |
| உச்சாரம் | உச்சரிப்பு . |
| உச்சி | உச்சந்தலை ; தலை ; குடுமி ; நடுப்பகல் ; நாய் ; வான்முகடு ; எல்லை ; புல்லுருவி . |
| உச்சிக்கடன் | நண்பகற் கடன் . |
| உச்சிக்கரண்டி | சிறுகரண்டி ; குழந்தைகள் உச்சியில் எண்ணெய் விடும் சிறிய கரண்டி . |
| உச்சிக்காலம் | நண்பகல் ; கோயிலின் மத்தியானப் பூசை . |
| உச்சிக்கிழான் | சூரியன் , கதிரவன் . |
| உச்சிக்குழி | தலைநடு , சிறுகுழந்தையின் தலையுச்சிப் பள்ளம் . |
| உச்சிக்கொண்டை | உச்சிமுடி ; சேவல் முதலியவற்றின் தலைச்சூட்டுறுப்பு . |
| உச்சிக்கொம்பன் | உச்சியில் கொம்புள்ள மாடு ; காண்டாமிருகம் . |
| உச்சிகுளிர்தல் | மகிழ்வடைதல் . |
| உச்சிச்சுட்டி | குழந்தைகளின் தலையணிவகை . |
| உச்சிச்செடி | புல்லுருவிப் பூண்டு . |
| உச்சிட்டம் | எச்சில் , சேடம் ; மீதி . |
| உச்சித்தம் | மகரக்கை , அபிநயக் கைவகை . |
| உச்சித்திலகம் | செம்மலர் உள்ள ஒருவகைப் பூஞ்செடி . |
| உச்சிதம் | அரியது ; உசிதம் ; கொடை ; அழகு ; மேன்மை ; தகுதி ; உயர்ச்சி ; நெருஞ்சி , நெருஞ்சிப் பூண்டு . |
| உச்சிப்படுதல் | உச்சமாதல் . |
| உச்சிப்பிளவை | உச்சந்தலையில் வரும் பிளவை நோய் . |
| உச்சிப்பூ | குழந்தைகளின் தலையணிகளுள் ஒன்று . |
| உச்சிப்பொழுது | நடுப்பகல் . |
| உச்சிமலை | மலையுச்சி ; செங்குத்தான குன்று . |
| உச்சிமோத்தல் | உச்சந்தலையை மோந்து அன்பு பாராட்டுதல் . |
| உச்சியாட்டம் | ஒருவகை விளையாட்டு . |
| உச்சியார் | தேவர் . |
| உச்சிரதம் | பிரண்டைக்கொடி . |
| உச்சிரயம் | உயர்நிலை ; உயரம் ; முக்கோணத்தின் செங்குத்துக்கோடு . |
| உச்சிவினை | உச்சிக்கடன் |
| உகிரம் | இலாமிச்சம் புல் . |
| உகின் | புளிமா . |
| உகினம் | புளிமா . |
| உகுணம் | மூட்டுப்பூச்சி . |
| உகுத்தல் | சிந்துதல் , சிதறுதல் ; சொரிதல் ; உதிர்த்தல் ; வெளியிடுதல் . |
| உகுதல் | உதிர்தல் ; சிந்துதல் , சிதறுதல் ; கெடுதல் ; சாதல் ; நிலைகுலைதல் ; சுரத்தல் ; கரைந்து தேய்தல் ; மறைதல் . |
| உகுவு | சிந்துதல் ; சொரிதல் . |
| உகைத்தல் | செலுத்துதல் ; எழுப்புதல் ; பதித்தல் ; எழுதல் ; உயரவெழும்புதல் ; அம்பு முதலியவற்றை விடல் . |
| உகைதல் | எழுதல் ; செல்லுதல் . |
| உகைப்பு | எழுப்புகை ; செலுத்துகை . |
| உங்கண் | காண்க : உங்கு . |
| உங்கரித்தல் | உம்மென்றொலித்தல் . |
| உங்கனம் | உவ்வாறு ; உவ்விடம் . |
| உங்காரம் | வண்டொலி ; முழங்குதல் ; அச்சுறுத்தும் ஒலி . |
| உங்கு | உவ்விடம் . |
| உங்குணி | பெருங்கிளிஞ்சில் . |
| உங்கை | உம் தங்கை . |
| உங்ஙன் | காண்க : உங்கனம் . |
| உங்ஙனம் | காண்க : உங்கனம் . |
| உச்சக்கிரகம் | உச்சநிலையடைந்த கோள் ; மேடத்தில் சூரியனும் , இடபத்தில் சந்திரனும் , கடகத்தில் வியாழனும் , கன்னியில் புதனும் , துலாத்தில் சனியும் , விருச்சிகத்தில் இராகு கேதுக்களும் , மகரத்தில் செவ்வாயும் , மீனத்தில் சுக்கிரனும் உச்சக்கோள்களாம் . |
| உச்சட்டம் | இலக்கு ; நேர்மை . |
| உச்சத்தானம் | கோளின் உயர்நிலை . |
| உச்சதரு | தென்னை . |
| உச்சந்தம் | விலையுயர்ச்சி ; தணிவு . |
| உச்சந்தலை | தலையின் உச்சி . |
| உச்சம் | உயரம் ; தலைக்கு நேரான வான்முகடு ; உச்சந்தலை ; சிறப்பு ; வல்லிசை ; கோள் நிலையுள் ஒன்று ; அறுதியளவு ; எண்வகைப் பாடற் பயன்களுள் ஒன்று ; புணர்ச்சி வகையுள் ஒன்று . |
| உச்சம்போழ்து | நடுப்பகல் . |
| உச்சயிச்சிரவம் | காண்க : உச்சைச்சிரவம் . |
| உச்சரித்தல் | பலுக்குதல் , இதழ் முதலியவற்றின் தொழில்களால் எழுத்துகளைப் பிறப்பித்தல் ; சொல்லுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 146 | 147 | 148 | 149 | 150 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உகிரம் முதல் - உச்சிவினை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, உச்சரிப்பு, ஒன்று, உங்கனம், சிந்துதல், உச்சந்தலை, நடுப்பகல், உச்சி, உயரம், சிதறுதல், கோள், உவ்விடம், சொரிதல், உங்கு, எழுதல், புளிமா, குழந்தைகளின், வான்முகடு, முதலியவற்றை, உற்சாகம், உச்சிக்கடன், உச்சியில், பூண்டு, முதலியவற்றின், உயர்நிலை

