தமிழ் - தமிழ் அகரமுதலி - உ முதல் - உகிர்நிலைப் பசாசம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உகத்தல் | மகிழ்தல் ; விரும்புதல் ; உயர்தல் ; உயரப் பறத்தல் . |
| உகந்தது | விருப்பமானது ; ஒப்புக்கொள்ளப்பட்டது . |
| உகந்தவன் | தகுந்தவன் ; பிரியமானவன் , விரும்பப்பட்டவன் . |
| உகந்தார் | நண்பர் . |
| உகந்துடைமை | கணவனுடைய சொத்தில் மனைவிக்குரிய பாகவுரிமை . |
| உகப்பிரளயம் | காண்க : உகமுடிவு . |
| உகப்பு | உயர்ச்சி ; மகிழ்ச்சி ; விருப்பம் ; விரும்பி வாழிடம் . |
| உகம் | நாள் ; பூமி ; பாம்பு ; இரண்டு ; தலைப்பாட்டு ; ஊழி ; நுகம் . |
| உகமகள் | நிலமகள் . |
| உகமுடிவு | ஊழியிறுதி , யுகத்தினது இறுதி . |
| உகரக்குறுக்கம் | காண்க : உக்குறள் . |
| உகரம் | ஐந்தாம் உயிரெழுத்து . |
| உகலுதல் | தாவுதல் ; உதறுதல் . |
| உகவல்லி | நாகமல்லிமரம் . |
| உகவை | விருப்பம் ; அனுகூலம் ; உகவைப்பொன் . |
| உகளம் | இரண்டு ; விருப்பம் . |
| உகளி | பிசின் . |
| உகளித்தல் | குதித்தல் ; மகிழச்சி மிகுதல் . |
| உகளுதல் | தாவுதல் ; ஓடித்திரிதல் ; துள்ளுதல் ; பிறழுதல் ; நழுவி விழுதல் . |
| உகா | உகாமரம் ; ஓமைமரம் . |
| உகாதி | அருகன் ; யுகாதி , தெலுங்கர் கன்னடர் முதலியோரின் ஆண்டுப் பிறப்பு . |
| உகாந்தம் | காண்க : உகமுடிவு . |
| உகாய் | காண்க : உகா . |
| உகார உப்பு | கல்லுப்பு . |
| உகாரம் | காண்க : உகரம் . |
| உகிர் | நகம் . |
| உகிர்ச்சுற்று | நகச்சுற்று , நகத்தைச் சுற்றி உணடாகும் புண் . |
| உகிர்நிலைப் பசாசம் | மூவகைப் பசாசக்கைகளுள் ஒன்று , சுட்டு விரலிலும் பெரு விரலிலும் உகிர்நுனை கவ்வி நிற்பது . |
| உ | ஐந்தாம் உயிரெழுத்து ; இரண்டு என்னும் எண்ணின் குறி ; சுட்டெழுத்துள் ஒன்று ; பின் , மேல் முதலிய மறைவிடங்களைக் காட்டும் ஒரு சுட்டு ; சிவபிரான் ; நான்முகன் ; உமையவள் ; ஓர் இடைச்சொல் ; ஒரு சாரியை ; தொழிற்பெயர் விகுதியுள் ஒன்று ; பண்புப் பெயர் விகுதியுள் ஒன்று ; 'செய்து' என்னும் வினையெச்ச விகுதியுள் ஒன்று ; வியப்பு . |
| உஃது | ஒன்றன் படர்க்கைச் சுட்டுப் பெயர் , உது . |
| உக்கம் | ஆலவட்டம் ; ஏறு ; பசு ; கோழி ; மருங்கு , இடை ; நெருப்பு ; பொன் ; தலை ; கட்டித்தூக்கி எடுக்கும் கயிறு . |
| உக்கரித்தல் | எருதுபோல உங்காரம் போடல் ; கக்குதல் . |
| உக்கல் | பதனழிவு ; உளுத்தது ; பக்கம் . |
| உக்கலை | இடுப்பின் பக்கம் . |
| உக்களம் | இராக்காவல் ; தலைக்காவல் ; பாளையஞ் சூழ் கழி . |
| உக்களி | இனிய பணிகாரவகை . |
| உக்கா | கஞ்சா முதலியவற்றின் புகை குடிக்குங் கருவி , கஞ்சாக் குடுக்கை ; கள் . |
| உக்காக்கம் | அரைஞாண் . |
| உக்காரம் | கக்குதல் ; ஒலி செய்கை . |
| உக்காரி | அஃகுல்லி என்னுஞ் சிற்றுண்டி , பிட்டு . |
| உக்காரை | அஃகுல்லி என்னுஞ் சிற்றுண்டி , பிட்டு . |
| உக்கி | தோப்புக்கரணம் ; தண்டனைவகை ; அம்மனைக் காய் . |
| உக்கிடர் | சிலந்திப்பூச்சி . |
| உக்கிடு | நாணத்தைக் காட்டுங் குறிப்புச் சொல் . |
| உக்கிரகந்தம் | வெள்ளுள்ளி ; பெருங்காயம் ; வசம்பு ; வேம்பு ; கருவேம்பு ; கரும்பு . |
| உக்கிரகந்தி | வெள்ளுள்ளி ; பெருங்காயம் ; வசம்பு ; வேம்பு ; கருவேம்பு ; கரும்பு . |
| உக்கிர நட்சத்திரம் | புதன் நின்ற நாளுக்குப் பதினெட்டாம் நாளும் இருபத்து நான்காம் நாளும் ; மகம் பூரம் பரணி நாள்கள் ; அக்கினி நட்சித்திரம் . |
| உக்கிரம் | சினம் ; கொடுமை ; ஊக்க மிகுதி ; இலாமிச்சை ; முருங்கை மரம் ; கீதவுறுப்பினுள் ஒன்று . |
| உக்கிரமம் | சுடர் , சுவாலை . |
| உக்கிரன் | சிவமூர்த்தங்களுள் ஒன்று , வீரபத்திரன் . |
| உக்கிராணக்காரன் | களஞ்சியம் காப்பவன் ; சரக்கறை மேற்பார்ப்போன் . |
| உக்கிராணம் | பண்டசாலை ; வீட்டுச் சரக்கறை . |
| உக்கிராந்தி | இறுதிக்காலத்தில் செய்யும் கோதானம் . |
| உக்கிருட்டம் | மேன்மை ; மிகுதி . |
| உக்கிரை | கருவசம்பு ; ஏழாம் சுருதியின் பேதங்களுள் ஒன்று . |
| உக்கு | இலவங்கம் . |
| உக்குதல் | மக்கிப்போதல் ; மெலிதல் ; இற்றுப்போதல் ; அஞ்சுதல் . |
| உக்குமம் | தூண்டுகை ; கட்டுப்பாடு . |
| உக்குளான் | சருகு தின்னும் முயல் . |
| உக்குறள் | குற்றியலுகரம் . |
| உகக்கனல் | வடவைத் தீ , ஊழித் தீ . |
| உகட்டுதல் | தெவிட்டுதல் ; அருவருப்பாதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 145 | 146 | 147 | 148 | 149 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உ முதல் - உகிர்நிலைப் பசாசம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒன்று, காண்க, இரண்டு, விருப்பம், விகுதியுள், உகமுடிவு, பெருங்காயம், சிற்றுண்டி, வசம்பு, பிட்டு, வெள்ளுள்ளி, கரும்பு, மிகுதி, சரக்கறை, நாளும், என்னுஞ், கருவேம்பு, வேம்பு, பெயர், உயிரெழுத்து, தாவுதல், ஐந்தாம், உகரம், உக்குறள், சுட்டு, விரலிலும், பக்கம், கக்குதல், சொல், என்னும், அஃகுல்லி

