முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » ஈண்டையான் முதல் - ஈரல்கருகுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - ஈண்டையான் முதல் - ஈரல்கருகுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஈரணி | நீராடும்போது மகளிர் அணியும் ஆடை . |
| ஈரணை | இரண்டு அணை ; இரண்டுசோடி மாடு . |
| ஈரந்துவட்டுதல் | ஈரமெடுத்தல் ; நீராடியபின் ஈரத்தைத் துடைத்தல் . |
| ஈரநா | புறங்கூறும் நாக்கு . |
| ஈரப்பசை | ஈரக்கசிவு ; இரக்கம் ; செல்வம் . |
| ஈரப்பலா | ஒருவகைப் பலா , ஆசினிப் பலா . |
| ஈரப்பற்று | ஈரக்கசிவு ; இரக்கம் . |
| ஈரப்பாடு | ஈரமாயிருக்கை ; மனநெகிழ்ச்சி . |
| ஈரம் | நீர்ப்பற்று ; பசுமை ; குளிர்ச்சி ; அன்பு ; அருள் ; அழகு ; அறிவு ; குங்குமப்பூ ; பகுதி ; கரும்பு ; வெள்ளரி . |
| ஈரல் | ஈருள் , மண்ணீரல் ; கல்ல¦ரல் ; வருத்துகை . |
| ஈரல்கருகுதல் | வேதனை மிகுதல் ; மிகவும் அஞ்சுதல் . |
| ஈணி | காண்க : அகணி . |
| ஈணை | காண்க : அகணி . |
| ஈதல் | கொடுத்தல் ; வறியவருக்குத் தருதல் ; சொரிதல் ; படிப்பித்தல் . |
| ஈதா | இந்தா . |
| ஈதி | மிகுந்த மழை , மழையின்மை , எலி , விட்டில் , கிளி , அரசண்மை என்னும் ஆறினாலும் நாட்டுக்கு வருங் கேடு . |
| ஈது | இது ; முகம்மதியர் திருநாள்களுள் ஒன்று , பக்ரீத் திருநாள் . |
| ஈதை | துன்பம் , வருத்தம் . |
| ஈந்து | ஈச்சமரம் . |
| ஈப்பிணி | காண்க : ஈச்சப்பி . |
| ஈப்புலி | ஈயைக் கொல்லும் பூச்சி , ஒருவகைச் சிறு சிலந்தி ; பதினைந்தாம் புலி விளையாட்டு . |
| ஈம் | காண்க : ஈமம் . |
| ஈமக்கடன் | சுடுகாட்டில் செய்யப்படும் பிணச்சடங்கு . |
| ஈமத்தாடி | சுடுகாட்டில் ஆடும் சிவன் . |
| ஈமத்தாழி | முதுமக்கட்டாழி , இறந்தவரை இட்டுப் புதைக்கும் பெருஞ்சால் . |
| ஈமப்பறவை | கழுகு ; காகம் ; பருந்து . |
| ஈமம் | சுடுகாடு ; பிணஞ்சுடு விறகடுக்கு ; பாதிரி மரம் . |
| ஈமவனம் | சுடுகாடு . |
| ஈமவாரி | வசம்பு . |
| ஈமான் | கொள்கை . |
| ஈயக்கொடி | இண்டங்கொடி ; புலிதொடக்கிக் கொடி . |
| ஈயம் | பஞ்சலோகத்துள் ஒன்று , வெள்ளீயம் ; பாதிரி . |
| ஈயல் | ஈசல் ; தம்பலப்பூச்சி ; சிறகு முளைத்த கறையான் ; ஈதல் , கொடுத்தல் . |
| ஈயவெள்ளை | மரம் முதலியவற்றிற்குப் பூசும் ஒருவகை வெள்ளை மை ; தூள்வகை . |
| ஈயன்மூதா | இந்திரகோபம் , தம்பலப்பூச்சி . |
| ஈயன்மூதாய் | இந்திரகோபம் , தம்பலப்பூச்சி . |
| ஈயை | இஞ்சி ; இண்டு ; புலிதொடக்கி . |
| ஈயோட்டி | ஈயை ஓட்டுங் கருவி . |
| ஈயோப்பி | ஈயை ஓட்டுங் கருவி . |
| ஈர் | பேன் முட்டை ; முன்னிலைப் பன்மை விகுதி ; இரண்டு ; ஈரம் ; நெய்ப்பு ; பசுமை ; இனிமை ; நுண்மை ; ஈர்க்கு ; இறகு ; கரும்பு ; கதுப்பு . |
| ஈர்க்கில் | காண்க : ஈர்க்கு . |
| ஈர்க்கிறால் | இறால் மீன்வகை . |
| ஈர்க்குச்சம்பா | சம்பா நெல்வகை . |
| ஈர்க்கு | அம்பின் இறகு ; ஓலையின் நரம்பு . |
| ஈர்கொல்லி | ஈரைக் கொல்லும் கருவி , ஈர்வலி ; உப்பிலி . |
| ஈர்கோலி | காண்க : ஈர்வலி . |
| ஈர்ங்கட்டு | கார்காலத்து உடை , குளிர்கால உடை . |
| ஈர்ங்கதிர் | குளிர்ந்த கதிர் ; சந்திரன் . |
| ஈர்ங்கை | உண்டு கழுவிய கை . |
| ஈர்த்தல் | அறுத்தல் ; இழுத்தல் ; உரித்தல் ; பிளத்தல் ; எழுதுதல் . |
| ஈர்தல் | அரிதல் ; அறுத்தல் ; இழுக்கப்படுதல் . |
| ஈர்ந்தமிழ் | தண்டமிழ் , கேட்டற்கு இனிய தமிழ் . |
| ஈர்ப்பு | இழுப்பு ; இசிவுநோய் . |
| ஈர்மை | இனிமை ; பெருமை ; நுண்மை ; குளிர்ச்சி ; வருத்தம் . |
| ஈர்வடம் | பனையீர்க்குக் கயிறு . |
| ஈர்வலி | ஈருருவுங்கருவி , ஈர் வாங்கும் கருவி . |
| ஈர்வாங்கி | ஈருருவுங்கருவி , ஈர் வாங்கும் கருவி . |
| ஈர்வாரி | ஈருருவுங்கருவி , ஈர் வாங்கும் கருவி . |
| ஈர்வாள் | இரம்பம் , மரம் அறுக்கும் வாள் . |
| ஈரங்கொல்லி | வண்ணான் . |
| ஈரசைச்சீர் | இரண்டு அசைகொண்ட சீர் ; அது தேமா , புளிமா , கருவிளம் , கூவிளம் என்னும் வாய்பாட்டால் வரும் . |
| ஈரடி | இரண்டு அடி , இணையடி ; ஈரப்பதம் ; ஈரொட்டு , ஐயம் ; இரண்டாம் போகம் . |
| ஈரடிப்பயன் | கவர்பொருள் ; ஐயம் ; கபடம் ; மாறுபாடு . |
| ஈரடிவருக்கம் | ஒவ்வோரடியிலும் முதலாம் எழுத்தும் நடுவெழுத்தும் ஒன்றாயிருக்குமாறு இரண்டடியுடையதாய்ச் செய்யப்படும் செய்யுள் . |
| ஈரடிவெண்பா | குறள்வெண்பா . |
| ஈரடுக்கொலி | இரட்டையாக அடுக்கிவரும் ஒலிக்குறிப்புச் சொல் . |
| ஈரணம் | வெறுநிலம் ; களர்நிலம் ; கள்ளி . |
| ஈண்டையான் | இவ்விடத்தான் |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 143 | 144 | 145 | 146 | 147 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஈண்டையான் முதல் - ஈரல்கருகுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கருவி, காண்க, இரண்டு, தம்பலப்பூச்சி, மரம், ஈர்வலி, ஈர்க்கு, ஈருருவுங்கருவி, வாங்கும், இந்திரகோபம், பாதிரி, ஓட்டுங், அறுத்தல், சுடுகாடு, ஐயம், நுண்மை, இனிமை, இறகு, சுடுகாட்டில், குளிர்ச்சி, கரும்பு, அகணி, பசுமை, ஈரம், ஈரக்கசிவு, இரக்கம், ஈதல், கொடுத்தல், ஈமம், சொல், கொல்லும், வருத்தம், என்னும், ஒன்று, செய்யப்படும்

