தமிழ் - தமிழ் அகரமுதலி - இறக்கம் முதல் - இறுகங்கியான் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
இறாட்டாணியம் | இடுக்கண் , துன்பம் , வருத்தம் . |
இறாட்டுதல் | உரைசுதல் ; பகைத்தல் . |
இறாட்டுப்பிறாட்டு | சச்சரவு . |
இறாத்தல் | ஒரு நிறையளவு , ஆறு பலங்கொண்ட நிறை ; மீன் தீர்வைத் துறை . |
இறாய்த்தல் | பின்வாங்குதல் . |
இறால் | இறால்மீன் ; வெள்ளிறால் ; இடபராசி ; கார்த்திகை நாள் ; தேன்கூடு ; எருது . |
இறாவுதல் | வதக்கி மயிர்போகச் சீவுதல் . |
இறுக்கம் | நெகிழாத்தன்மை ; அழுத்தம் ; நெருக்கம் ; ஒழுக்கம் கையழுத்தம் ; முட்டுப்பாடு ; புழுக்கம் . |
இறுக்கர் | பாலை நிலத்தவர் . |
இறுக்கன் | ஈயாதவன் , கடும்பற்றுள்ளன் . |
இறுக்கு | இறுக்கிய கட்டு ; இறுக்கிய முடிச்சு ; ஒடுக்குகை ; கண்டிக்கை . |
இறுக்குதல் | அழுந்தக் கட்டுதல் ; இறுக உடுத்தல் ; ஒடுக்குதல் ; உள்ளழுத்துதல் ; உறையச் செய்தல் . |
இறுக்குவாதம் | உடலை வளைத்துக்கொள்ளும் ஒருவகை வாதநோய் . |
இறுகங்கியான் | கரிசலாங்கண்ணி . |
இறக்கம் | இறங்குகை ; சரிவு ; இறங்குதுறை ; விலங்குகள் செல்வழி ; அம்மை முதலிய இறக்கம் ; நிலை தவறுகை ; உணவு முதலியன உட்செல்லுகை ; இறப்பு . |
இறக்கல் | காண்க : இறக்குதல் . |
இறக்கிடல் | இறங்கச்செய்தல் ; தலைகுனிதல் ; கீழ்ப்படுத்தல் ; தாழ்த்தல் . |
இறக்குதல் | இறங்கச்செய்தல் ; கீழ்ப்படுத்தல் ; தாழ்த்தல் ; தைலம் முதலியன வடித்தல் ; கெடுத்தல் ; சாதல் . |
இறக்குதுறை | பண்டம் இறக்கும் துறைமுகம் . |
இறக்குமதி | வேற்று நாடுகளிலிருந்து தருவிக்கப்படும் சரக்கு ; துறைமுகத்திலிருந்து சரக்கு இறக்குகை ; இறக்கும் துறைமுகச் சரக்கு . |
இறக்கை | சிறகு ; கிணற்றின் இருபுறங்களிலுமுள்ள துணைச்சுவர் ; இறத்தல் . |
இறக்கைச் சுவர் | துணைச்சுவர் . |
இறகர் | பறவையிறகு ; சிறகு . |
இறகு | சிறகு ; பறவையிறகு ; மயிற்பீலி . |
இறகுபேனா | இறகாலான எழுதுகோல் . |
இறகுளர்தல் | சிறகடித்துக் கொள்ளுதல் . |
இறங்கண்டம் | ஒருவகை அண்டநோய் . |
இறங்கர் | குடம் . |
இறங்கல் | ஒருவகை நெல் . |
இறங்கல்மீட்டான் | ஒருவகை நெல் . |
இறங்குகிணறு | உள்ளே இறங்கிச் செல்வதற்குப் படி வரிசையுள்ள கிணறு . |
இறங்குதல் | இழிதல் ; தாழ்தல் ; தங்குதல் ; கீழ்ப்படுதல் ; சரிதல் ; தாழ்வடைதல் ; நிலைகுலைதல் ; நாணுதல் . |
இறங்குதுறை | மக்கள் இறங்கிப் பயன்படுத்தும் நீர்த்துறை . |
இறங்குபொழுது | பிற்பகல் . |
இறங்குமுகம் | தணியும் நிலைமை . |
இறங்குவெயில் | பிற்பகல் வெயில் . |
இறங்கொற்றி | அனுபவ ஒற்றி . |
இறஞ்சி | ஆடைவகை ; அவுரி . |
இறட்டுதல் | முகந்து வீசுதல் . |
இறடி | தினை ; கருந்தினை . |
இறத்தல் | கடத்தல் ; கழிதல் ; நெறிகடந்து செல்லுதல் ; சாதல் ; மிகுதல் ; வழக்குவீழ்தல் ; நீங்குதல் . |
இறந்தகாலம் | சென்ற காலம் . |
இறந்ததுவிலக்கல் | முப்பத்திரண்டு தந்திர உத்திகளுள் ஒன்று , நூல் செய்வோன் இறந்துபோன வழக்காறுகளை நீக்குதல் . |
இறந்தன்று | மிக்கது ; சிறந்தது . |
இறந்தவழக்கு | வீழ்ந்த வழக்கு . |
இறந்திரி | இத்திமரம் . |
இறந்துபடுதல் | சாதல் . |
இறந்துபாடு | இறந்துபடுகை ; சாவு . |
இறப்ப | மிகவும் , மேன்மேலும் . |
இறப்பு | அதிக்கிரமம் ; மிகுதி ; போக்கு ; இறப்பு ; உலர்ந்த பொருள் ; வீடுபேறு ; வீட்டின் இறப்பு ; இறந்த காலம் . |
இறப்பை | இமையிதழ் . |
இறல் | ஒடிதல் ; கெடுதல் ; இறுதி ; சிறு தூறு ; கிளிஞ்சில் . |
இறலி | இத்திமரம் ; மருதமரம் ; கொன்றை ; ஏழு தீவுள் ஒன்று . |
இறவம் | இறால்மீன் . |
இறவாரம் | தாழ்வாரம் ; தாழ்வாரத்துக் கூரையின் முன்பாகம் . |
இறவானம் | தோற்கருவிவகை ; காண்க : இறவாரம் . |
இறவி | சாவு ; இறத்தல் . |
இறவின்மை | அழியாமை , இறைவன் எண்குணங்களுள் ஒன்று . |
இறவு | சாவு ; முடிவு ; நீக்கம் ; மிகுதி ; இறால் மீன் ; தேன்கூடு ; வீட்டிறப்பு ; எல்லை . |
இறவுள் | குறிஞ்சிநிலம் . |
இறவுளர் | குறிஞ்சிநில மாக்கள் . |
இறவை | ஏணி ; இறைகூடை ; விரற்புட்டில் . |
இறா | காண்க : இறவம் . |
இறாஞ்சுதல் | பறவை பறந்து பாய்தல் ; பறித்தல் ; தட்டியெடுத்தல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 138 | 139 | 140 | 141 | 142 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இறக்கம் முதல் - இறுகங்கியான் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒருவகை, இறப்பு, காண்க, சரக்கு, இறத்தல், சாவு, ஒன்று, சிறகு, சாதல், காலம், பிற்பகல், நெல், பறவையிறகு, இறால்மீன், இத்திமரம், இறவாரம், இறவம், மிகுதி, இறால், தேன்கூடு, துணைச்சுவர், கீழ்ப்படுத்தல், இறங்கச்செய்தல், இறக்குதல், இறங்குதுறை, தாழ்த்தல், மீன், இறுக்கிய, இறக்கம், இறக்கும், முதலியன