தமிழ் - தமிழ் அகரமுதலி - இறைமரம் முதல் - இன்னான் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இன் | இனிய ; ஐந்தாம் வேற்றுமை உருபு ; சாரியை ; இறந்தகால இடைநிலை . |
| இன்கண் | இன்பம் ; கண்ணோட்டம் . |
| இன்கவி | மதுரகவி ; இன்னோசை தரும்பாக்களைப் பாடும் புலவன் . |
| இன்சொல் | இனிமை பயக்கும் சொல் . |
| இன்பக்கொடி | காண்க : காமவல்லி . |
| இன்பச்செலவு | உல்லாசப் பயணம் , சுற்றுலா . |
| இன்பம் | மனமகிழ்ச்சி ; இனிமை ; ஒன்பான் சுவைகளுள் ஒன்று ; சிற்றின்பம் , காமம் ; திருமணம் ; நூற்பயன்களுள் ஒன்று . |
| இன்பவுபதை | அரசன் தன் அமைச்சரைத் தெரிந்து தெளியக் கொள்ளும் சோதனை நான்கனுள் ஒன்று ; அதாவது , இன்பவுணர்வை எடுத்துரைத்துச் சோதித்தல் . |
| இன்பன் | கணவன் . |
| இன்பித்தல் | மகிழச்சியூட்டுதல் . |
| இன்பு | காண்க : இன்பம் . |
| இன்புறவு | மகிழ்கை . |
| இன்புறா | காண்க : சாயவேர் . |
| இன்பூறல் | காண்க : சாயவேர் . |
| இன்மை | இல்லாமை ; வறுமை ; உடைமைக்கு மறுதலை ; அறுவகை வழக்கினுள் ஒன்று . |
| இன்மைவழக்கு | காண்க : இல்வழக்கு , இல்லதனை இல்லை என்கை . |
| இன்றி | இல்லாமல் . |
| இன்றிய | இல்லாத . |
| இன்றியமையாமை | இல்லாமல் முடியாமை , அவசியம் . |
| இன்று | இலை ; இந்த நாள் ; ஓரசைச்சொல் . |
| இன்றைக்கு | இந்த நாளுக்கு . |
| இன்றையதினம் | இந்த நாள் . |
| இன்ன | இத்தன்மையான ; இப்படிப்பட்டவை ; ஓர் உவமவுருபு . |
| இன்னணம் | இன்ன வண்ணம் என்பதன் மரூஉ ; இவ்விதம் , இவ்வாறு . |
| இன்னது | இத்தன்மையது ; இது . |
| இன்னம் | இத்தன்மையுடையேம் ; காண்க : இன்னும் ; இனிமேலும் |
| இன்னமும் | காண்க : இன்னும் . |
| இன்னயம் | உபசார மொழி . |
| இன்னர் | இத்தன்மையர் ; உற்பாதம் . |
| இன்னல் | துன்பம் ; தீமை ; குற்றம் . |
| இன்னன் | இப்படிப்பட்டவன் ,இத்தன்மையன் . |
| இன்னா | துன்பம் ; தீங்கு தருபவை ; கீழ்மையான ; இகழ்ச்சி ; வெறுப்பு . |
| இன்னாங்கு | தீமை ; துன்பம் ; கடுஞ்சொல் . |
| இன்னாங்கோசை | கடுமையான ஓசை . |
| இன்னாது | தீது ; துன்பு . |
| இன்னாப்பு | துன்பம் . |
| இன்னாமை | இனியவாகாமை ; துன்பம் , துயரம் ; தீமை . |
| இன்னார் | பகைவர் . |
| இன்னாரினியார் | பகைவரும் நண்பரும் . |
| இன்னாரினையார் | இத்தன்மை உடையவர் . |
| இன்னாலை | இலைக் கள்ளிமரம் . |
| இன்னாவிசை | செய்யுட் குற்றம் இருபத்தேழனுள் ஒன்று . |
| இன்னான் | இத்தன்மையன் ; துன்பம் செய்பவன் . |
| இறைமரம் | இறைகூடை தாங்கும் மரம் ; ஏற்றமரம் . |
| இறைமாட்சி | அரசியல் ; அரசனின் நற்குண நற்செயல்கள் . |
| இறைமை | தலைமை ; அரசாட்சி ; தெய்வத்தன்மை . |
| இறைமையாட்டி | தலைவி ; அரசி . |
| இறைமொழி | மறுமொழி ; இறைவன் அருளிய ஆகமம் . |
| இறையமன் | யமனுக்கு மூத்தோன் , சனி . |
| இறையவன் | கடவுள் ; தேவர் தலைவன் ; தலைவன் . |
| இறையாயிரங் கொண்டான் | ஒரு விரல் இறைக்கு ஆயிரங் கல நெற்கொள்ளும் களஞ்சியம் . |
| இறையான் | சிவன் . |
| இறையிலி | வரி நீக்கப்பட்ட நிலம் . |
| இறையிழித்துதல் | வரி நீக்குதல் . |
| இறையுணர்வு | பதிஞானம் , இறைவனையறியும் அறிவு . |
| இறையெண்ணுதல் | விரலிறையால் கணக்கிடுதல் . |
| இறையோன் | கடவுள் ; சிவன் ; குரு ; அரசன் ; தலைவன் . |
| இறைவரை | கணப்பொழுது . |
| இறைவன் | தலைவன் ; கடவுள் ; சிவன் ; திருமால் ; அரசன் ; பிரமன் ; குரு ; மூத்தோன் ; கணவன் ; சிவனார்வேம்பு . |
| இறைவன்வேம்பு | சிவனார்வேம்பு . |
| இறைவனெண்குணம் | கடவுளுக்குரிய எட்டுத் தன்மைகள் ; பிறப்பின்மை , இறப்பின்மை , பற்றின்மை , பெயரின்மை , உவமையின்மை , வினையின்மை , குறைவில் அறிவுடைமை , குலமின்மை . |
| இறைவி | தலைவி ; உமை ; துர்க்கை . |
| இறைவை | இறைகூடை , நீர் இறைக்கும் மரப்பத்தல் ; ஏணி ; புட்டில் . |
| இறைவைமரம் | தண்ணீர் இறைக்கப் பயன்படும் மரத்தால் செய்த ஓடம் போன்ற கருவி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 140 | 141 | 142 | 143 | 144 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இறைமரம் முதல் - இன்னான் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, துன்பம், ஒன்று, தலைவன், சிவன், கடவுள், தீமை, இன்பம், அரசன், இறைவன், தலைவி, மூத்தோன், கணவன், சிவனார்வேம்பு, இறைகூடை, குரு, இத்தன்மையன், இன்ன, நாள், இல்லாமல், இன்னும், சொல், குற்றம், இனிமை, சாயவேர்

